mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 20

                                             20

 

 

அரை குறை தூக்கத்துடன் படுக்கையில் புரண்டபடி கிடந்த மணிமேகலை அந்த முன்காலை பொழுதில் பளிச்சென விழித்துக் கொண்டாள் .போனில் மணி பார்த்தாள் .அதிகாலை மூன்று முப்பது .இதுதான் சரியான நேரமாக இருக்கும் .

எழுந்து கொண்டாள் .அறை கதவை சத்தமின்றி திறந்து ஙெளியே வந்து படிகளில் இறங்கினாள் .பின்வாசலை திறந்து அந்த குன்றினை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் .இவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை கூட அந்த குன றினை ஏறிட்டு பார்க்கவில்லை .அது தனக்கு தேவையில்லாத பயத்தை தரலாமென நினைத்தாள.

வெளியே காற்று சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. மணிமேகலையின் ஆடையினுள் நுழைந்து உடலை ஊடுறுவது போல் இருந!தது அந்த பனிக்காற்று .விர் ….விர்ரென ராட்ச்சத்தனமாக வீசியது .காற்றின் ஓசையே பயமுறுத்துவது போல் காதுகளில் அறைந்த்து .

  திக் திக்கென சத்தமிட்ட இதயத்துடன் தலையை.   குனிந்தபடியே அந்த குன்றின் அருகே போன போதுதான் அங்கே யாரோ நின்று கொண்டிருப்பதை பார்த்தாள்மணிமேகலை. .சேலை முந்தானை காற்றில் படபடக்க , கூந்தல் காற்றில் விரிந்து பறக்க அங்கே ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் .

லேசான பயம் தோன்ற காய்ந்திருந்த தொண்டையை எச்சில் விழுங்கி நனைத்துக் கொண்டாள.பார்வையை கூர்மையாக்கியபடி மெல்ல அருகே போனாள் .

அங்கே நின் று கொண்டிருந்த்து மாதவிதான் .கைகளை கட்டியபடி நின்று கொண்டு அந்த குன்றை அண்ணாந்து பார்த்து பேசியபடி நின்றிருந்தாள் .மணிமேகலை  காற்றின் ஓசையை மீறி காதுகளை கூர்மையாக்கி அவளது பேச்சை கவனித்தாள் .

” போதும் தெய்வா …விட்டு விடு .இவ்வளவு நாட்களாக நீ என் குடும்பத்திற்கு செய்த வினைகள் போதும் .எங்களை ரொம்பவே படுத்தி விட்டாய் .இப்போதுதான் எங்கள் குடும்பத்திற்கு  லேசாக ஒரு விடிவெள்ளி தெரிகிறது .அதனை விட்டு விட நான் தயாராக இல்லை .இனியும் நீ இங்கே இருக்கவேண்டாம் போய்விடு ….”

தனது பேச்சை சிறிது நிறுத்தியவள் ஏதோ பதிலை எதிர்பார்ப்பது போல் குன றினை நிமிர்ந்து பார்த்தாள் .

” உன்னோடு போராடி நிறைய களைத்துவிட்டேன் தெய்வா . செய்த தப்பிற்கும் அதிகமான தண்டனையை அனுபவித்து விட்டேன் .போதும் …இத்தோடு விட்டு விடு …”

திரும்ப பதிலை எதிர்பார்த்து நின்று அமைதியானாள் .

” வறண்டு போய் கிடக்கும் என் மகன் வாழ்வில் இப்போதுதான் ஒரு வசந்தம் நுழைந்திருக்கிறது .அவர்களை நிம்மதியாக வாழவிடு .உன்னை கை கூப்பி கேட்டுக்கொள்கறேன் ….” கை குவித்து கெஞ்சியபடி இருந்த மாதவியின் வேண்டுதலில் மணிமேகலையின் மனம் துள்ளியது .

சட்டென வேகமாக நடந்து அவள் எதிரில் நின்றாள் .

” யாரிடம் அத்தை இப்படி கெஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள் …? “

” ஏய் …நீ …ஏன் இந்த நேரத்தில் இங்கே வந்தாய் ….? போ …உடனே போய்விடு ….” பயத்தோடு குன றின் புறம் பார்த்தபடி பேசினாள் .

” நான் ஒரு ஐடியாவோடு வந்தேன் .இங்கே வந்து பார்த்தால் வேறு நடந்து கொண்டிருக்கிறது ….”

” என்ன ஐடியா …? ” மாதவி மணிமேகலையின் முன் வந்து நின்று கொண்டாள் .யாரிடமிருந்தோ அவளை மறைப்பவள் போல் கைகளை விரித்து வைத்துக் கொண்டாள் .

” இந்த குன்றின் மேலேதானே உங்கள் தோழி இருக்கிறார்கள் .நான் மெல்ல இந்த குன்றின் மீதேறி அவர்களை சந்திக்கலாமென நினைத்தேன் ….”




” என்னது …? பைத்தியமாடி உனக்கு …? ஏன்டி உனக்கு புத்தி இப்படி போகுது …? நீ வா …இங்கே நிறக வேண்டாம் ….” மணிமேகலையின் கையை பிடித்து இழுக்க , அவள் வராமல் கால்களை அழுந்த தரையில் ஊன்றினாள் .

” ம்ஹூம. ..நான் வரமாட்டேன் .இன்னைக்கு குன்றேறாமல் விட மாட்டேன் …” பிடிவாதமாக குன்றின் பக்கம் நகர்ந்தவளை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தாள் மாதவி.

” முட்டாள் கழுதை .உனக்காகத்தானேடி போராடிக் கொண்டிருக்கிறேன..நீ பாட்டுக்கு …மேலே போகிறேன் என்கிறாயே …அறிவிருக்கிறதா உனக்கு…? ” பேசியபடி இருந்த போதே இருவரின் முகத்திலும் எதுவோ வந்து வேகமாக மோதியது .அது அந்த குன்றின் மேலிருந்துதான் வந்தது .

ஏதோ ஒரு மிருகம்தான் மேலே வந்து விழுந்து விட்டதென அலறியடித்து இரு பெண்களும் பார்க்க …

” மரப்பட்டை அத்தை .காற்றுக்கு வந்து விழுந்திருக்கிறது ….” தன் முகத்தை தாக்கியதை கையில் எடுத்து பார்த்தபடி மணிமேகலை சொல்ல , அவள் கையை பிடித்து இழுத்தபடி வீட்டை நோக்கி நடந்தாள் மாதவி .

” காற்று குறி பார்த்து நம் இருவர் மேலும் கொண்டு வந்து போடுகிறதாக்கும்….சீக்கிரம் வா “

” பிறகு …எப்படி …? உங்கள் ப்ரெண்டுதான் மேலேயிருந்து எறிந்தார்களென்கிறீர்களா …? “

” ஆமாம் …அவள்தான் .அந்த குன்றின் மீதிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள் …”

மாதவியின் இழுவைக்கு நடந்தபடி இருந்த மணிமேகலை இதனை கேட்டதும் , கால்களை தரையில் அழுந்த ஊன்றி நின்றாள் .

” அத்தை நான் சொல்வதை கேளுங்கள் .இன்று இதற்கு ஒரு முடிவு கட்டிவிடுவோம் .வாங்க நாம் இரண்டு பேரும் மேலே ஏறி பார்த்து விடுவோம் .அப்படியே உங்க ப்ரெண்ட் இருந்தாலும் ஒரு ஹாய் சொல்லிட்டு வருவோம் .வாங்க …”

” வாயை மூடுடி …” கத்திய மாதவியின் குரல் நடுங்கியது .தன் கையை பற்றியிருந்த அவளது கையிலும் அதே நடுக்கத்தை உணர்ந்தாள் மணிமேகலை .

அந்த நடுக்கத்துடனேயே முன்பை விட அதிக பலம் சேர்ந்திருந்த தன் கைகளால் மணிமேகலையை தரதரவென இழுத்தபடி வீட்டிற்கு வந்துவிட்டாள் மாதவி.

சொம்பு நிறைய தண்ணீரை மொண்டு குடித்த மாதவியை பார்த்தபடியிருந்த மணிமேகலை …

” அத்தை இது எல்லாமே உங்கள் அடிமன உறுத்தல்கள்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை .இது போன்ற சாபங்களெல்லாம் நிஜம் கிடையாது ….” என்றாள் .

” நீ சின்ன பொண்ணு உனக்கு புரியாது .இதையெல்லாம் நான் அனுபவித்தவள் …”

” அப்படியே இருந்தாலும் அந்த தெய்வானை உங்கள் நெருங்கிய தோழி இல்லையா …? அவர்களே உங்கள் குடும்பத்தை பழி வாங்குவார்களா ….யோசித்து பாருங்கள் …”

மாதவி மௌனமானாள் .அவள் உதடு துடித்தது .கண்கள் கலங்கியது .

” வாங்குவாள் …ஏனென்றால் நான்தான் அவளுக்கு துரோகம் செய்துவிட்டேனே …”

” நீங்கள் என்ன துரோகம் செய்தீர்கள் …? மாமா உங்களைத்தான் விரும்பினார. அவர் அப்பாவுடன் போராடி உங்களையே மணம் முடித்தார.  இதில் உங்கள் துரோகம் எங்கிருந்து வந்தது …? “

” ஆனால் நான் என் காதலை தெய்வாவிடம் சொல்லாமல் மறைத்துவிட்டேனே .நாங்கள் இருவரும் காதலிப்பதை தெய்வாவிடம் முதலிலேயே சொல்லியிருந்தால் அவள் இந்த அளவு ஏமாந்திருக்க மாட்டாள் ….”

” ஓ …நீங்க ஏன் அத்தை சொல்லவில்லை …? “




” அவர் சொல்லவேண்டாமென்றார் .தகுந்த நேரம் வரட்டும் .பிறகு சொல்லிக் கொள்ளலாம் என இருவருமே தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தோம் .அதற்குள் தெய்வா அவர் மேல் நிறைய காதலை வளர்த்துக் கொண்டு விட்டாள் .திடீரென ஒருநாள் இந்த குன்றின் மீது எங்கள் இருவரையும் ஒன்றாக பார்க்கவும் ….அதுவும் அன்று நாங்கள் கொஞ்சம் நெருக்கமாக …..” மாதவியின் குரல் தடுமாறியது .

மணிமேகலைக்கு புரிந்தது .தனிமை கிடைத்திருக்கும் காதலர்கள் …அதுவும் தங்கள் எதிர்கால வாழவு பற்றிய கவலையில் இருப்பவர்கள் …எப்படி இருந்திருப்பார்கள் என அவளால் புரிய முடிந்த்து .தங்கள் கவலைகளின் ஆறுதலுக்காக ஒருவரை ஒருவர் தழுவியபடி இருந்திருக்கலாம் .வாய் வார்த்தைகளை விட நிறைய நேரங்களில் தேகங்களின் உணர்தல்தானே துயரங்களை போக்க உதவுகிறது .

” எனக்கு புரிகிறது அத்தை …” ஆதரவாக மாதவியின் கைகளை பற்றிக் கொண்டாள் .

” அந்த நிலைமையில் எங்களை பார்த்ததும் தெய்வா அதிர்ந்துவிட்டாள் .நாங்கள் இருவரும் அவளை ஏமாற்றிவிட்டதாக நினைத்துவிட்டாள் ….ஒன்றும் பேசவில்லை .அப்படியே திரும்பி கீழே இறங்கி போய்விட்டாள் “

தெய்வானையின் மனமும் மணிமேகலைக்கு புரிந்த்து .தான் மிகவும் நம்பிய தோழி ,தனக்கு திருமண நிச்சயம் செய்தவனுடன் , நெருக்கமாக இருப்பதை பார்த்தால் ….இருவரும் சேர்ந்து தனக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்றுதானே நினைப்பாள் .

இரு பெண்களின் நிலையுமே அன்று பெரும் இக்கட்டில்தான் இருந்திருக்கிறது .யோசித்தபடி நிமிர்ந்த மணிமேகலை மாதவியின் பார்வை தன் மேல் பதிந்திருப்பதை கண்டாள் .

” என்ன இது …? “

அவள் கேட்கவும் குனிந்து தன்னை பா்த்த மணிமேகலை எச்சில் விழுங்கினாள் .திருதிருத்தாள் ….

அவளது கழுத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் போல் பார்த்தசாரதியின் துண்டு சுருண்டிருந்த்து.

What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!