Serial Stories

ENNULLE ENGO ENGUM GEETHAM – 16

16

இதனாலேயே நிஷாந்தியுடன்
இயல்பாக பேச பத்மினி பயப்படுவாள்.
‘‘ஐய்யோ அக்கா கல்யாணத்திற்கு நேரமாகிவிட்டது.
சீக்கிரம் கிளம்புங்க..” அவளது கவனத்தை திசை திருப்பி
அனுப்பினாள். நிஷாந்தி ஏதோ முணுமுணுத்தபடி
போனாள்.
பெருமூச்சுடன் தன் அலங்காரத்தைத் தொடர்ந்தாள்
பத்மினி. அலையடுக்குகளாய் தன் புடவைக்கு மடிப்பு 

வைத்து பின் செய்தவள், இளஞ்சிவப்பு புடவைக்கு தங்க
புள்ளிகள் தெளித்த ஆழ் சிவப்பு ஜாக்கெட்டை முழங்கை
வரை இருக்கும் டிசைனில் அணிந்து கொண்டு காதில்,
நெற்றியில் மாங்டிக்காவை மாட்டினாள்.
‘‘பப்பிம்மா..” உணர்ச்சியாய் பின்னால் ஒலித்த
குரலில் திரும்பாமல் புன்னகைத்திருந்தவளின் உடல்
பின்னிருந்து அணைத்து நொறுக்கப்பட்டது.
‘‘ஷ்.. அப்பா… ஏன் இத்தனை வேகம்.. ப்ளீஸ்
விடுங்க… சூர்யா..” சிணுங்கினாள்.
‘‘ஹேய் என்ன சொன்னாய்…?” சூர்யபிரகாஷின்
இதழ்கள் அவள் பின் கழுத்தில் பதிந்தன.
எப்போதுமே அவனை பெயர் சொல்லியே
அழைக்கும்படி சூர்யபிரகாஷ் வற்புறுத்தி வந்தாலும்,
பத்மினிக்குஅப்படி அழைக்க வாய் வராது.அவள்
அம்மா அப்பாவை அழைப்பது போல் ஏங்க,
வாங்க, போங்கதான். இந்தக் காலத்துப் பெண்ணா
நீ… சூர்யபிரகாஷ் குறையாக சலித்துக் கொள்வான்.
எப்போதாவது மிகச்சில நேரங்களிலேயே தன்னை
மறந்து அவனைப் பெயர் சொல்லி அழைப்பாள் பத்மினி.
அப்போதெல்லாம் சூர்யபிரகாஷிற்கு அவளது கணவன்
என்பதைத் தவிர வேறு எண்ணமே வராது.
‘‘பப்பிம்மா…இந்த பங்சனை கேன்சல் செய்து
விடலாமா?” அவள் கன்னத்தாடு கன்னம் தேய்த்தபடி
போதை குரலில் கேட்டவனை தள்ளினாள்.
‘‘உதை வாங்குவீங்க… போய் தயாராகி வாங்க.
முதலில் என்னை விடுங்க. டிரஸ்ஸெல்லாம கசங்குது” 

 

 




 

 

என்றவளை தன்னை விட்டு விலக்கி நிறுத்தி பார்த்தவன்,
‘‘ஏய் இந்த நகைகள் எதற்கு. மேட்ச் ஆகவில்லை.
கழட்டிவிடு” என்று அவன் தொட்டுக் காட்டியது அவள்
கழுத்து திருமாங்கல்யத்தை.
பத்மினி திடுக்கிட்டாள். அநிச்சையாய் தன் கழுத்து
தாலியை பொத்தினாள். ‘‘என்ன சொல்கிறீர்கள்?”
‘‘எதற்கு இத்தனை அதிர்ச்சி பப்பிம்மா. இந்த
மாங்டிக்கா மாடல் நகைக்கு கழுத்தில் எதுவுமே போடா
மல் இருப்பதுதான் பேஷன். நீ இத்தனை தடிமனான
செயினை மாட்டிக் கொண்டிருந்தால் எப்படி?”
‘‘இது மாங்கல்யம்ங்க..”
‘‘ஸோ வாட்… அது வெறும் செயின்தானே… அதை
கழட்டி வைத்துவிட்டு, உன்நெற்றியில் ஒட்டியிருக்கும்
ஸ்டிக்கர் பொட்டையும் எடுத்துப் போட்டு விடு. இந்த
நகைக்கு இவையெல்லாம் இருக்கக் கூடாது.”
ஒரு நிமிடம் அமைதியாக இருந்த பத்மினி அடுத்த
நிமிடம் தன் கம்மலையும், நெற்றிச் சுட்டியையும் கழட்டி
வைத்தாள். பெரிதான குடை ஜிமிக்கியை காதிலும்,
அட்டிகையை கழுத்திலும் மாட்டினாள். வகிட்டில்
குங்குமத்தை அழுத்தி வைத்தாள்.
‘‘இப்போது போகலாம்..”
சூர்யபிரகாஷின் முகம் ஒளியிழந்தது. ‘‘ஷிட்..” என்ற
எரிச்சலுடன் கிளம்பினான். முதலில் இருந்த நெருக்கம்
தம்பதிகளுக்கிடையே மறைந்தது.
பத்மினி தன் நினைவலைகளுக்குள் சிக்கிக்கொண்டி
ருந்த போது சாமந்தி, ‘குழந்தை வேண்டா மென உங்கள் 

சார் பத்மினியம்மாவை கட்டாயப்படுத்தியிருக்கிறார்’
என சந்துவுருக்குத் தகவல் தந்து கொண்டிருந்தார்.
‘‘அப்படியா…” என யோசித்த சந்துரு தன் போனை
எடுத்தான்.
‘‘சார் திரும்பவும் உங்களை தேடி வந்தால், அவரோடு
சேர்ந்து கொள்வீர்களா மேடம்?”
சந்துருவின் கேள்வியில் அதிர்ந்தாள் பத்மினி.
‘‘திடீரென ஏன் இப்படிக் கேட்கிறீர்கள் சந்துரு..?”
‘‘நேற்று உங்கள் அப்பா உங்களைப் பற்றி என்னிடம்
மிகவும் கவலையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்
மேடம். அவர் மனம் முழுவதும் உங்களைப் பற்றிய
கவலைகள்தான் இருக்கிறது. தனக்குப் பிறகு உங்களது
நிலைமையை GsoU கவலைப்படுகிறார். நீங்கள்
உங்கள் கணவரோடு சேர்ந்து வாழ வேண்டுமென
விரும்புகிறார்..”
‘‘ப்ச்… அவர் மனநிலை எனக்கு தெரியும் சந்துரு.
ஆனால் அது நடக்காது. எனது வாழ்வு இந்த பண்ணை
தான் சந்துரு. இதனை விஷமற்ற, மருந்தற்ற ஒரு
இயற்கை பண்ணையாக உருவாக்க வேண்டும். இந்த
உலகத்திற்கே ஒரு முன் மாதிரியாக இந்த பண்ணையை
மாற்ற வேண்டும். இதுபோல் நிறைய பண்ணைகள்

எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும். நம் நாட்டில்
விவசாயம் மீண்டும் தழைக்க வேண்டும். இது
மட்டும்தான் எனது வாழ்க்கை, லட்சியம் சந்துரு..”
‘‘இதனை எந்த தகப்பன் ஏற்றுக் கொள்வார்
மேடம்..?”
‘‘அப்பாவிற்கு வேறு வழியில்லை சந்துரு;..”
‘‘அட்லீஸ்ட் நீங்கள் வேறொரு திருமணத்திற்காவது
சம்மதிக்கலாமே மேடம்..?”
‘‘சந்துரு..” அதட்டினாள். ‘‘என் வாழ்க்கை விசயம்..
நீங்கள் பேச வேண்டியதில்லை.”
‘‘அப்படி இருக்க என்னால் முடியாது மேடம். உங்கள்
தந்தையின் வேதனையை அருகிருந்து உணர்பவன்
நான்.”
‘‘உங்கள் லட்சியம் போன்றே, இந்த பண்ணையை
உயிராய் நினைக்கும், உங்களை மனமார ஆராதிக்கும்
யாராவது ஒருவனை நீங்கள் ஏன் திருமணம் செய்துக்
கொள்ளக் கூடாது..?”
பத்மினி சந்துருவைக் கூர்ந்தாள். ‘‘நீங்கள் யாரை
சொல்கிறீர்கள் சந்துரு..?”
‘‘உங்கள் வாழ்க்கையை செப்பனிடப் போகும் யாரோ
ஒருவரை..”
‘‘அது நடக்காது சந்துரு.”
‘‘அப்படியானால் எஸ்.பி. சாருடனாவது மீண்டும்..’
‘‘அது நடக்கவே நடக்காது. அப்பாவிடம் சொல்லி
விடுங்கள்… இதுபோன்ற கற்பனைகளை வளர்த்துக்
கொண்டிருக்க வேண்டாமென..”

 

 




 

 

உறுதியாகப் பேசிவிட்டு உள்ளே நடந்தவளின்
மனதில் புயல் வீசிக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய
மலைகளையெல்லாம் அவள் தாண்டி வந்திருக்கிறாள்.
இவர்களுக்கு என்ன தெரியும்? பத்மினியின் நினைவுகள்
பின்னோக்கி பயணித்தன.
அன்றென்னவோ ஆபீசில் மனம் மிகவும் சோர்வாக
இருக்க, ‘‘எனக்கு உடம்பு சரியில்லை. நான் வீட்டுக்குக்
கிளம்புகிறேன்” லேப்டாப்பில் ஆழ்ந்திருந்த
சூர்யபிரகாஷிடம் சொல்லிவிட்டு தன் லேப்டாப்பை
ஷட்டவுன் செய்தாள்.
‘‘என்னடா… என்ன பண்ணுகிறது…?” சூர்யபிரகாஷ்
அவனிடத்திலிருந்து எழுந்து அவள் டேபிளுக்கு வந்தான்.
‘‘பீவரா…?” அவள் நெற்றியை தொட்டுப் பார்த்தான்.
‘‘டேப்லெட் போட்டுக் கொள்கிறாயா?”
‘‘இல்லை. எனக்கு ரெஸ்ட்தான் வேண்டும்..”
‘‘ஹாஃப் அன் ஹவரில் ஒரு ஆன் லைன் மீட்டிங்
இருக்கிறது. நீ இருந்தாயானால்…” சொன்னவனை
நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.
கையுயர்த்தினான் அவன். ‘‘ஓகே.. ஓகே… டேக்
கேர்..” மனமின்றி வழியனுப்பினான்.
மதிய வேளை. வீடு வேலைக்காரர்களின் நட
மாட்டங்கள் கூட இல்லாமல் மிக அமைதியாக
இருந்தது. நித்தமும் அனுபவித்து வரும் பரபரப்புக்கு
மாற்றாக இருந்த இந்த அமைதியை ரசித்தபடி மாடிப்
படியேறினாள் பத்மினி. லேசான மேல் கழுவலுக்குப் 

பிறகு சூடாக ஒரு கப் காபியை அருந்தியபடி மாடி
பால்கனியிலிருந்து பார்த்தபடி இருந்த போது, வாசலில்
நிஷாந்தியின் கார் வந்து நின்றது.
இந்த நேரத்தில் இங்கே ஏன் வருகிறாள்? ஒரு
வேளை என்னைப் போல் உடம்பு சரியில்லையோ..?
நிஷாந்தியின் சோர்ந்த நடை, அதையேதான் சொன்னது.
வாசல்படி ஏறும்போது அவள் சற்று தடுமாற, சீச்சி இவள்
பகலிலும் ஆரம்பித்து விட்டாளா..? பத்மினியின் மனம்
கொந்தளித்தது. தன் அறைக்குள் வந்துவிட்டாள்.
பத்து நிமிடங்கள் கழித்து ஏதோ தோன்ற அறையை
விட்டு வந்து மாடியிலிருந்து கீழே பார்க்க, நிஷாந்தி
ஹால் சோபாவில் சரிந்திருப்பது தெரிந்தது. மிகவும்
சோர்ந்து இருந்தாள். முகத்தை சோபா குஷனில் பதித்து
துவண்டு கிடந்தாள். இவளுக்கு உண்மையிலேயே
உடம்புதான் சரியில்லையோ… பத்மினி மெல்ல இறங்கி
அவளருகே வந்தபோது, திடுமென தன் வயிற்றைப்
பிடித்த நிஷாந்திமெல்லிய விம்மலுடன் அவளுடைய
அறைக்குள் ஓடினாள்.
பத்மினி அவளது செய்கையால் துணுக்குற்றாள்.
இவளுக்கு என்னவாயிற்று..? அவளது அறைக்கு போக
லாமா? வேண்டாமா… என சிறிது நேரம் தனக்குள்ளாக
யோசித்து, போய் பார்ப்போமே என முடிவெடுத்து
அவள் அறைக் கதவைத் தட்டினாள். கதவு திறந்தே
இருக்க… உள்ளே போனவள் அறைக்குள் நிஷாந்தியைக்
காணாமல் சுற்று முற்றும் பார்க்க, பாத்ரூமிலிருந்து
வந்தாள் நிஷாந்தி.
நடக்கவே முடியாதபடி தள்ளாடி வந்தவள், மிகவும்
பலவீனமாகத் தென்பட்டாள். கண்களுக்கிடையில் கரு 

வளையம் விழுந்து, உடல் வெளுத்து நோயாளி போல்
தெரிந்தாள்.
‘‘ஹாய் பத்மினி என்ன விசயம்?” சோர்வுடன்
விசாரித்தபடி படுக்கையில் சாய்ந்து கொண்டாள்.
‘‘உங்களுக்கு உடம்பிற்கு என்ன அக்கா? என்ன
செய்கிறது?” பத்மினி ஆதரவுடன் அவள் கைகளை
பிடித்துக் கொண்டு விசாரித்தாள்.
‘‘ஒன்றுமில்லை. டேப்லெட் எடுத்துக்கிட்டேன். ஓவர்
ப்ளீடிங்… அதுதான் டயர்டா இருக்கிறது” கட்டிலில்
நேராக படுத்து விட்டாள் நிஷாந்தி.
‘‘ஓ மன்த்லி ப்ராப்ளமா..? ரொம்ப வலிக்கிறதா?”
ஆதரவுடன் அவள் வயிற்றில் கை வைக்க நிஷாந்தி அவள்
கையை வயிற்றோடு அழுத்திக் கொண்டாள். கண்களில்
கண்ணீர் வடிந்தது.
‘‘அபார்ஷன் பண்ணிக்கிட்டேன்..”
‘‘என்ன..?” பத்மினி அதிர்ந்தாள்.
‘‘ஏன்.. ஏன்.. எதற்காக இப்படிச் செய்தீர்கள் அக்கா.?”
‘‘ஒரு குழந்தை போதுமென்று பேசி வைத்திருந்தோம்.
இந்தக் குழந்தை எப்படியோ வந்துவிட்டது. சந்திராவிற்
குத் தெரிந்தால் கோபிப்பார். அதனால் அவருக்குச்
சொல்லாமலேயே நம் டாக்டரை போய்ப் பார்த்து,
டேப்லெட் வாங்கிப் போட்டுக் கொண்டேன். இரண்டு
நாளில் எல்லாம் கிளியராகி விடுமென்று சொன்னார்.”
பேசியபடியே கண்கள் சொருக தூங்கிப் போனாள்
நிஷாந்தி. வானம் இடிந்து தலை மேலே விழுந்த
அதிர்ச்சியுடன் இருந்தாள் பத்மினி.

இது என்ன கொடுமை… தன் குந்தையை பெற்றுக்
கொள்ள, ஒரு பெண்ணிற்கு உரிமை கிடையாதா?
இதற்கும் அவள் கணவனைத்தான் கேட்க வேண்டுமா?
வாடிய பூச்சரமாய் படுக்கையில் கிடந்தவளைப்
பார்த்தாள். மனது பிசைந்தது. இவள் எவ்வளவு
படித்தவள்? வசதியான வீட்டுப் பெண்… அறிவும்,
அழகும், படிப்பும் ஒன்றாக சேர்ந்திருக்கும் பெண்.
ஆனால் இவளது நிøமை Qmhzumh கொத்தடிமை.
இதுதான் இந்த வீட்டு ஆண்களின் அராஜகமா? பத்மினி
ஒரு முடிவெடுத்தாள்.
தன் அறைக்கு வந்து தன் போனை அழுத்திப் பேசி
னாள். எதிர் முனையை உடனே மிக உடனே வீட்டிற்கு
வரும்படி அழுத்தமாக வலியுறுத்தினாள். காத்திருந்தாள்.
அன்று அங்கே நடந்த சம்பவங்களின் பின்னாலேயே
சூர்யபிரகாஷ் தன் மனைவியை பிரியும் முடிவிற்கு
வந்தான்.
‘‘மேடம் அவர்கள் முடிவில் உறுதியாக இருக்கிறார்கள்
சார்..” தயாளனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் சந்துரு.
‘‘ம்.. இந்த விசயத்தில் மட்டும் அவள் ரொம்பவே
பிடிவாதமாக இருக்கிறாள். என்ன செய்வதென தெரிய
வில்லை சந்துரு.”

 

 




 

 

‘‘உண்மையில் மேடமிற்கும், சாருக்கும் இடையே
என்னதான் நடந்தது சார்..?” கேட்டவள் சாமந்தி.
‘‘அது எதற்கு உனக்கு?” சந்துரு அவளிடம் எரிந்து
விழுந்தான்.
‘‘தப்பாக நினைச்சிக்காதீங்கய்யா… தெளிவாகத்
தெரிந்து கொண்டால், பத்மினியம்மா வாழ்க்கை மாற
ஏதாவது செய்ய முடியுமான்னுதான் கேட்டேன்..”
‘‘சாமந்தி நினைப்பதும் சரிதான் சந்துரு.. உண்மை
யைச் சொல்வதானால் அவர்கள் வாழ்க்கையில் நடந்த
விசயங்கள் அவ்வளவு தெளிவாக எனக்கே தெரியாது.”
‘‘என்ன சார் சொல்லுகிறீர்கள்..? உங்களுக்கே தெரி
யாமல் எப்படி..?”
‘‘ஆமாம். திடீரென மாப்பிள்ளை எனக்குப் போன்
செய்தார். அவர் வீட்டிற்கு வரும்படி அழைத்தார்.
போனேன். இறுக்கமான முகத்துடன் சோபாவில்
உட்கார்ந்திருந்தார். உங்கள் மகளுக்கும் எனக்கும் ஒத்து
வராது அங்கிள். தயவு செய்து அவளை உங்கள் வீட்டிற்கு
கூட்டிப் போய் விடுங்கள். நாங்கள் இருவரும் பிரிவதாக
முடிவெடுத்து விட்டோம்” என்றார்.
நான் பதறி, ‘என்ன மாப்பிள்ளை.. என்ன விசயம்?”
என்று கேட்டபோது கையுயர்த்தி நிறுத்தினார். ‘‘பேசப்
பேச நமக்கு இடையே இடைவெளி அதிகமாகிக்
கொண்டே போகும். முடிந்தளவு பேசாமலேயே விலகிக்
கொள்வது மிகவும் நல்லது. கூட்டிப் போங்கள்” என்றார்.
அப்போது பப்பிம்மாவும் கையில் பெட்டியோடு
மேலிருந்து வர, அவளும் ‘‘எதுவும் பேச வேண் 

டாம்பா… இங்கிருந்து போயிடலாம். ப்ளீஸ்.”னு
சொன்னாள். நானும் பிறகு பேசிக் கொள்ளலாமென்று
வந்துவிட்டேன். வீட்டிற்கு வந்த பிறகும் பப்பிம்மா
வாயே திறக்கவில்லை. எங்கள் கேள்விக்கு பதிலேதும்
சொல்லவில்லை. அந்தப் பக்கம் மாப்பிள்ளையும்
அப்படித்தான் இருந்தார். தொழில் தவிர வேறு
பேசாதீர்கள் என்றார்.
‘‘என்ன சார் இது… அதற்காக இப்படியே விட்டு
விடுவீர்களா..?”
‘‘மகளின் வாழ்க்கை சந்துரு… கண்ணாடிப்
பாத்திரம் போல் கையாள வேண்டும். கொஞ்சம்
தவற விட்டேனென்றாலும் நஷ்டம் எனக்குத்தான்.
சில விஷயங்களுக்கு பிரிவுதான் தீர்வாக இருக்கலாம்
அங்கிள் என்றார் ஒருநாள். கொஞ்ச நாட்களாவது
நாங்கள் பிரிந்திருக்கலாமென்று நினைக்கிறேன் என்றார்
ஒருநாள்… என்றாவது வருவார் என்று இன்றுவரை
நம்பிக் கொண்டிருக்கிறேன்..”
‘‘உங்கள் நம்பிக்கை உங்கள் மகளிடத்தில் இல்லை
ஐயா. அவர்கள் சார் நிச்சயம் வரமாட்டார் என்பதில்
உறுதியாக இருக்கிறார்கள்” சாமந்தி கவலைப்பட்டாள்.
தயாளன் மௌனமாக நடந்தார். அவர் முகத்தில்
மிகுந்த வேதனை தெரிந்தது.
‘‘தொழில் சம்பந்தமாக AiUPi மாப்பிள்ளையை
சந்திக்க நேர்வது பப்பிம்மாவிற்கு பிடிக்கவில்லை. அவள்
அவருடனான தொழில் தொடர்புகள் எல்லாவற்றையும்
முறித்துக் கொள்ளக் கட்டாயப்படுத்தினாள். நானும்
வேறு வழி இல்லாமல் மாப்பிள்ளையிடம் பேசினேன். 

அவர் அண்ணன் கோபப்பட்டார். ஆனால் மாப்பிள்ளை
ஒரு வார்த்தை பேசாது எல்லா தொழில் தொடர்புகளையும்
துண்டித்துக் கொடுத்தார்.”
‘‘அதன் பிறகு எங்கள் தொழில் வட்டங்களுக்கிடையே
நடமாட கூசி, எங்கள் பங்குகள் சொத்துகள் எல்லா
வற்றையும் விற்றுவிட்டு, இதோ இங்கே யாருமில்லாத
இடத்தில் வந்து செட்டில் ஆகிவிட்டோம். இந்த
பண்ணை எங்களது கனவு. நானும் சாரதாவும்,
பப்பிம்மாவும் சேர்ந்து இந்தப் பண்ணையை பார்த்துப்
பார்த்து உருவாக்கினோம். ஓரளவு சந்தோஷமாக வாழப்
பழகினோம். திடுமென சாரதாவிற்கு உடல்நலம் கெட்டு
கை, கால்கள் விழுந்துவிட்டன.”
‘‘மிகுந்த சோகம்தான். அதிக கவலைதான். ஆனாலும்
எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு வாழப் பழகிக்
கொண்டோம். இத்தனை சோகங்களையும் ஒருநாள் என்
மகளும், மாப்பிள்ளையும் ஒன்றாகச் சேருவார்கள் என்ற
நம்பிக்கையில்தான் கடந்து வந்தேன். ஆனால் இன்று
அதுவும் இல்லையென்றே ஆகிவிட்டது..” தயாளன்
கண்களை துடைத்துக் கொண்டார். தளர்ந்த நடையுடன்
வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். சந்துருவும்,
சாமந்தியும் அவரைப் பாவமாகப் பார்த்தபடி இருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

9 Comments
Inline Feedbacks
View all comments
Sarojini
Sarojini
4 years ago

arumayana kathai

Vasanthi
Vasanthi
5 years ago

Y no updates pa

1
1
Babiza
Babiza
5 years ago

Mam ud please

Saranya
5 years ago

Padma mam ud kodunga please

Shanthi
Shanthi
5 years ago

Padma netrirkum serthu 2 ladda kodumaa

shanthi
shanthi
5 years ago

muttal kudumbathil pen koduthuttu ippo varunthinaal……….

Sridevi
Sridevi
5 years ago

Enna thanpa nadanthathu surya ithanai paramugama irukaan nice epi sis

PRiya
PRiya
5 years ago

please update next episode soon

Thara
Thara
5 years ago

Chandru Surya kkaga than ingu vanthirkana

9
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!