பிரண்டை செடி வளர்க்கலாம் வாங்க

பிரண்டை என்பது மூலிகை தாவரமாகும். இது எல்லா சீசனிலும் தழைத்து வளர கூடிய ஒரு வகை புதர் செடியாகும். எனவே நீங்கள் எந்த சீசனியிலும் பிரண்டையை பயிரிடலாம். இது கிராம புறங்களில் அதிகமாக பரந்து வளரக்கூடியது. இது நம் உடலில் ஏற்பட கூடிய பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.



பிரண்டை வளர்ப்பிற்கு தேவையான பொருட்கள்:

  • Grow Bags அல்லது மண் தொட்டி

  • மண்

  • மண்புழு உரம் அல்லது மாட்டு சானம்

மாடி தோட்டத்தில் பிரண்டை வளர்க்கும் முறை:

முதலில் பிரண்டை செடி நடுவதற்கு உங்கள் வீட்டு பகுதிகளில் உள்ள காய்கறி கடையில் முற்றிய பிரண்டையை வாங்கி வைத்து கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் வீட்டு பகுதியில் கிடைக்கக்கூடிய மண்ணை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் மண்புழு உரம் அல்லது மாட்டு சாணம் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இப்போது 5 கணுக்கள் அளவிற்கு உள்ள முற்றிய பிரண்டையை எடுத்து கொள்ளுங்கள். பிரண்டையின் அடிப்பகுதியில் உள்ள கணுவின் கீழ் பகுதியை சிறிதளவு வெட்டி விடுங்கள்.

பிறகு ஒரு மண் தொட்டி அல்லது Grow Bags எடுத்து, அதில் கலந்து வைத்துள்ள மண் உரத்தை நிரப்பி கொள்ளுங்கள். சமமான அளவிற்கு நிரப்பியதும் முற்றிய பிரண்டையை 2 கணுக்கள் மண்ணிற்குள் புதையும் படி குழிபறித்து பதித்து கொள்ளுங்கள்.

இப்போது அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாடியின் சிறிது நிழலான பகுதியில் வைத்து கொள்ளுங்கள். பிரண்டை செடி துளிர் விடும் வரை தண்ணீர் விட வேண்டும்.

பிரண்டையை பதித்த 20 அல்லது 25 நாட்களிலே நன்றாக துளிர் விட்டு வளர ஆரம்பித்து விடும்.

உரமிடும் காலம்:

பிரண்டை செடிக்கு மாதம் ஒரு முறை நன்கு மக்கிய சாணம் உரம் மற்றும் மண்புழு உரம் போட வேண்டும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சரணடைந்தேன் சகியே – 26

26   சொன்னபடியே மறுநாள் காலையிலேயே ஆபீசில் வந்து நின்றான் பாலகுமரன்.. பெற்றுக் கொண்டேனில் “ண்” இரண்டு சுழியா, மூன்று…

3 hours ago

கதறிய குடும்பம், கைதான ஈஸ்வரி.. – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கமலா மற்றும்…

3 hours ago

மாடித்தோட்டம் கருணை கிழங்கு பயிரிடும் முறை

இன்று  நம்ம மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக கருணை கிழங்கு பயிரிடும் முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை…

3 hours ago

புதிய பிளானை வைத்திருக்கும் எதிர்நீச்சல் ஜீவானந்தம்.. உடனே சக்தியை புக் பண்ணிய சன் டிவி

 சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் கிட்டத்தட்ட 750 எபிசோடு வரை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட 1500 எபிசோடு காண…

3 hours ago

லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் கேரளா இன்ஜினியர் விவசாயி..

இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில்தான் அதிகளவில் ரப்பர் உற்பத்தியாகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கேரள ரப்பர் உற்பத்தி பெரிய லாபத்தை…

6 hours ago

கவரிங் நகையை வைத்து கலவரத்தை உண்டாக்கிய ஸ்ருதி அம்மா .. – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 6ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில்…

6 hours ago