Categories: Serial Stories

சரணடைந்தேன் சகியே – 11

11

மிக நீண்டதாய் இருந்த அந்த விமான பயணம் அவர்களுக்கு மிகுந்த சோர்வை தந்தது.. எப்போதடா தரையில் கால் பதியும் என்ற ஏக்கத்தோடு அவர்கள் மூவரும் விமானத்தினுள் இருந்தனர்..

தொழில் முறை பயணம் ஒன்றிற்காக பாலகுமரனுடன், சாரங்கனும், சரண்யாவும் ஜப்பானுக்கு வந்திருந்தனர்.. மிக பெரிய தொழில் ஒப்பந்தம் அது.. ஜப்பானின் உலகப் புகழ் பெற்ற பெரிய கார் கம்பெனி ஒன்றுடன் இணைந்து இந்தியாவில் அதே கம்பெனியை துவங்கும் எண்ணத்துடன் வந்திருந்தனர்..

போனிலும், நெட் சாட்டிலுமாக தொண்ணூறு சதவிகித பேச்சுகள் உறுதியாகி விட்டாலும் திடுமென அந்த கார் கம்பெனி அதிபர் பாலகுமரனை நேரே பார்த்து பேச வேண்டுமென கூறிவிட, வேறு வழியின்றி அவர்கள் கிளம்பி வந்துள்ளனர்..

கன்வேயர் பெல்ட்டில் சுற்றிக் கொண்டிருந்த தங்கள் பெட்டிகளை கவர்ந்து இழுத்துக் கொண்டு அயர்வுடன் வருகை பகுதியை நோக்கி நடந்தனர்.. பளிர் பச்சையில் காலர் வைத்த சட்டையும், அழுக்கு நிற பேன்ட்டும் அணிந்திருந்த முப்பது வயது பெண்ணொருத்தி வருகை வாசலருகே நின்றிருந்தாள்.. கையில் அட்டை எதையும் தூக்கி நிற்கவில்லை என்றாலும்.. அவளது கண்கள் யாரையோ எதிர்பார்ப்பது புரிய, நெருங்கி வரும் இவர்களை பார்த்தபடி இருந்தாள்.. அருகே வந்ததும் படபடவென ஜப்பானிய பொழியில் பேச ஆரம்பித்தாள்..

இவர்கள் தடுமாறி தடுத்து ஆங்கிலம் பேச அவளுக்கு உணர்த்திய போது அலுப்புடனான இவர்களது அரை மணி நேரம் கடந்து விட்டது.. ஒரு வழியாக அவள் ஆங்கிலம் பேச ஒப்புக் கொண்டு பாலகுமரனா எனக் கேட்டு தெரிந்ததும் இடுப்பு வரை குனிந்து வணங்கினான்..

“ஒசாமாயோ..” என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.. காருக்கு அழைத்து போனாள்..

“வெல்கம் கோயோத்டா..” என்றாள்..

ஒரு நேர்த்தியான உயர் நகரமொன்றை கண் முன் காட்டியது கோயோத்டா… உயரமான கூரைகள், உலோகங்கள், கண்ணாடிகளாலான விஸ்தாரமான அலங்கார வளைவுகள், வான் தெடும் மலைத் தொடர்கள், மலைகளோடு போட்டியிடும் உயர் கட்டிடங்கள்.. எல்லாமே பரிசுத்தமாக பளபளப்பாக இருந்தன..

ரோட்டில் நிறைய சைக்கிள்களில் ஆட்கள் போவதை ஆச்சரியமாக பார்த்தனர்.. அருகே உள்ள இடங்களுக்கு சைக்கிளில் போக ஜப்பானியர்கள் அஞ்சுவதில்லை என்றாள் ஓசாமாயோ..
இவ்வளவு நாகரீக நகரில் தெருக்கள் மிக ஒடுக்கமாக, நீளமாக இருந்தன.. அவர்கள் போக வேண்டிய தெருவுக்குள் கார் போகாது என்பதால் தெரு முனையிலேயே கார் நிறுத்தப்பட்டு நடந்து உள்ளே போனார்கள்..

உலகப் புகழ் பெற்ற கார் கம்பெனி ஓனரின் வீடு இந்த இடுக்கான தெருவிற்குள்ளா இருக்கிறது.. அவர்கள் ஆச்சரியப்பட்டபடி உள்ளே நடந்தனர்.. தெருவை போலில்லாமல் வீடு மிக விஸ்தாரமாக பரந்து இருந்தது.. வளைந்த ஓடுகளுடனான கூரைகளும், மர வேலைப் பாடுடனான சன்னல்களுடனான பாரம்பரிய ஜப்பானிய வீடாக இருந்தது..



ஐந்தடி உயரமும், பளபள வழுக்கை தலையுடனுமாக இருந்த அந்த அகிராட்டோ தான் உலகபுகழ் பெற்ற பெரிய கார் கம்பெனியின் அதிபர் என்றால் நம்புவதற்கு சிறிது கடினமாகவே இருந்தது.. இடை வரை குனிந்து வணங்கி அவர்களை வரவேற்றார் அகிராட்டோ..
ஜப்பானியரின் இந்த பண்பான வரவேற்பு குணம் பாலகுமரனை மிகவும் கவர்ந்தது..

அகிராட்டோ அவர்களை ஹோட்டலில் தங்க வைக்காமல் வீட்டில் தங்க அழைத்ததன் காரணம் அவர்களுக்கு தெரிந்தது.. அவர் யாரை தனது வீட்டு விருந்திற்கு அழைக்கிறாரோ, அவர்களை அவருக்கு மிக பிடித்து விட்டது என்ற அர்த்தமாம் அவருக்கு இந்தியர்களை அதிலும் தமிழ்ர்களை மிகவும் பிடிக்குமாம்.. காரணம் அவர்களது பண்பாடு.. அகிராட்டாவிற்கு பண்பாடும் பாரம்பரியமும் மிகவும் விருப்பம்.. துளி பிசகாமல் அவரவர் பாரம்பரியத்தை கடை பிடிக்க வேண்டுமென நினைப்பவர்..

அவரது வீடே அதற்கு சாட்சி.. அகிராட்டோவின் வீடு நமது கிராமத்து கூட்டுக் குடும்ப வீடுகளை போல் முழுக்க உறவுகளால் நிறைந்திருந்தது.. மூன்று தலைமுறை மனிதர்கள் அங்கே ஒன்றாக வசித்து வருகின்றனராம்..

கிடுகிடுவென தலை ஆடிக் கொண்டிருக்கும், சுற்றி நடந்து கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடியாத பிரக்ஞையற்ற வெளுத்த விழிகளை கொண்ட ஒருவரை தனது தாத்தா என அறிமுகம் செய்து வைத்தார்..

அவருக்கு வயது நூற்றி இருபதாம் மிக பெருமையாக அவரது கையை பிடித்துக் கொண்டு அருகே அமர்ந்து பாலகுமரனை அறிமுகம் செய்வித்தவர்.. அவனுடனான தனது பிசினஸ்iஸயும் விளக்கமாக தனது தாத்தாவிற்கு கூறினார்..

“உங்களது விளக்கத்தை உங்கள் தாத்தா கேட்டுக் கொண்டது போலில்லையே..”

“ஆமாம் அவரது கேட்கும் திறன் போய் இரண்டு வருடமாகி விட்டது.. ஆனாலும் எனது ஒவ்வொரு புது தொழிலையும் நான் அவருக்கு விளக்க மறப்பதில்லை..”

பாலகுமரனின் மனதில் அகிராட்டோ மிக உயர்ந்த இடத்திற்கு போனார்.. குடும்பத்தினர் அனைவருமாக ஒன்றாக சேர்ந்து அமர்ந்து உணவு உண்டனர்..

பிறகு ஓய்வெடுக்குமாறு தனி அறை ஒதுக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்..
மறுநாள் தனது கார் கம்பெனிக்கு அவர்களை அழைத்து போனார்.. ஒரு ஊர் அளவிற்கு விரிந்திருந்த அந்த கம்பெனியை அவர்களுக்கு சுற்றி காட்டினார்.. கிட்டதட்ட இதனையே ஒத்த ஓர் தொழிற்சாலையை அவனுடன் இணைந்து சென்னையில் தொடங்க விரும்புவதாக அகிராட்டோ கூற, பாலகுமரனின் முகம் மலர்ந்தது..

இந்த தொழில் அமைந்தால் ஐந்தே வருடங்களில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் வரிசையில் முதலிடத்திற்கு தான் முன்னேறும் வாய்ப்பு தனக்கு அமையும் என்பதனை பாலகுமரன் உணர்ந்தான்..
எந்த காரணத்தை வைத்தும் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாதென முடிவெடுத்தான்..

அன்று மாலை.. ஜப்பானின் சுத்தத்தை, சுறுசுறுப்பை வியந்து பார்த்தபடி காலாற தெருவில் நடந்து கொண்டிருந்தான் பாலகுமரன்.. பிரயாண அலுப்பு போகவில்லை என அவனுடன் வர சாரங்கனும், சரண்யாவும் மறுத்து விட அவன் மட்டுமாக நடந்து கொண்டிருந்தான்..

இதுபோல் அறியாத இடத்தில், புரியா மொழி பேசும் தேசத்தில் அவனை அடையாளம் தெரிந்து கொள்ளாத மனிதர்களிடையே அங்கிருந்த ஆயிரக்கணக்கான மனிதர்களிடையே தானும் தொலைந்து போவதை அவன் மிகவும் விரும்பினான்..



குட்டை உருவமும், சப்பை மூக்கும், பளபள கன்னங்களுமாக இருக்கும் ஜப்பான் பெண்களின் அழகை ரசித்தபடி சாலையோரமாக நடந்தான் திடுமென அவன் தோள்களை அழுத்தி இடித்தபடி அவனருகே அவனுக்கு இணையாக வந்தான் ஒரு உயரமான மனிதன்..

கிட்டதட்ட ஆறரை அடி உயரமிருப்பான்.. சட்டையில்லாத உடல் முழுவதும் விதம் விதமாக பச்சை குத்தியிருந்தான்.. அதுவே அவனுக்கு உடை போல் இருந்தது.. மொச்சை மொச்சையாக மஞ்சள் கலர் பற்களுடனும் சிவந்த விழிகளுடனும் இருந்தான்..

பாலகுமரனின் தோள்களை இடித்தபடியே அவனுக்கு இணையாக நடந்து வந்தபடி ஜப்பானிய மொழியில் ஏதோ பேசினான்.. பாலகுமரன் தனக்கு ஜப்பானிய மொழி தெரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றான்..

அவனோ பிடிவாதமாக தொடர்ந்து ஜப்பானிலேயே பேசினான்.. ஜப்பானியர்கள் மிகுந்த மொழி பற்று உடையவர்கள்.. மிக மிக அவசியமென்றால் ஒழிய ஆங்கிலத்திலோ, பிற மொழிகளிலோ பேச மாட்டார்கள்.. இவனும் அப்படித்தானென எண்ணி பாலகுமரன் பொறுமையாக அவனுக்கு ஆங்கிலத்தில் விளக்க, அவன் முகம் சிவக்க காச் மூச்சென கத்த ஆரம்பித்தான்..

அத்தோடு தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த கத்தியையும் எடுத்து அவனது முகத்திற்கு நேராக நீட்டியபடி அவன் செய்த சைகை பாலகுமரனுக்கு விளங்கியது..

இவன் திருடன்.. கத்தியை காட்டி வழிப்பறி செய்கிறான்.. சுற்றிலும் பார்க்க யாரும் அவனுக்கு உதவ வருவதாக இல்லை.. சொல்லப் போனால் அந்த பச்சை வரைந்தவனை கண்டு அனைவரும் பயந்து ஓடினார்கள்..

“என்னிடம் பணம் இல்லை கார்டுதான் இருக்கிறது..” தனது பைகளை அவனுக்கு காட்டியபடியே இவனது கை கத்தியை எப்படி தட்டி விடுவது.. என பாலகுமரன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே..

“சோட்டோமேட்டி அனா..” கத்தியபடி அங்கே தனது சைக்கிளை ப்ரேக் அடித்து நிறுத்தினாள் அந்த பெண்..



What’s your Reaction?
+1
18
+1
10
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1

Radha

Recent Posts

ஒன்று சேர்ந்த ஜிவி பிரகாஷ், சைந்தவி.. என்ன நடந்துச்சு தெரியுமா.?

கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து விவாகரத்து செய்திகள் தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதிலும் கோலிவுட்டில் இப்போது இந்த கலாச்சாரம்…

3 mins ago

தங்கமயிலின் ஆட்டத்திற்கு முடிவு கட்டிய மீனா ராஜி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி, மாமியாரின் கெத்து எப்படி இருக்கும் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்.…

5 mins ago

பட்டுனு தந்தூரி சிக்கன் செஞ்சு சட்டுனு சாப்பிடலாம்!

சிக்கன் விரும்பிகளுக்கு இந்த எளிய ரெசிபி பெரிய உதவியாக இருக்கும். பட்டுன்னு பத்தே நிமிஷத்துல செஞ்சிடலாம் தந்தூரி சிக்கன். ஆனா…

7 mins ago

’எமகாதகன்’ திரைப்பட விமர்சனம்

முன்னொரு காலத்தில் பாஞ்சாயி என்ற பெண் விடுத்த சாபத்தால் குடும்பத்தின் மூத்த ஆண் பிள்ளைகள் திருமணம் செய்துக் கொண்டால் இறந்து…

10 mins ago

சரணடைந்தேன் சகியே – 26

26   சொன்னபடியே மறுநாள் காலையிலேயே ஆபீசில் வந்து நின்றான் பாலகுமரன்.. பெற்றுக் கொண்டேனில் “ண்” இரண்டு சுழியா, மூன்று…

4 hours ago

கதறிய குடும்பம், கைதான ஈஸ்வரி.. – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கமலா மற்றும்…

4 hours ago