இன்றைய ராசி பலன் (27.06.24)

மேஷம்

உங்களின் பழைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி கிடைக்கும் என்பதால் மனதில் மகிழ்ச்சி இருக்கும். வேலையில் வேகம் மற்றும் விவேகத்தை பயன்படுத்துங்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எந்த ஒரு பெரிய பிரச்சனையும் நண்பர்களின் உதவியால் தீர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நிறம்: டார்க் கிரீன்

ரிஷபம்:
உங்களின் கடின உழைப்புக்கு இன்று வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும், சமூகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் இன்று உங்களுக்கு வரும். பணம் கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: பிங்க்



மிதுனம்:
முன்பின் தெரியாத யாரையும் இன்று கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். யாருக்கு எதிராகவும் யாரையும் இன்று தூண்டி விடாதீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும் என்பதால் பிஸியாக இருப்பீர்கள். வணிகர்களுக்கு வியாபாரம் நன்றாக நடக்கும். உங்கள் புத்திசாலித்தனம் மூலமாக சரியான முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

கடகம்:
உங்கள் கடின உழைப்பிற்கான முழுபலன் இன்று கிடைக்காது என்பதால் வருத்தம் மேலோங்கும். அனுபவமுள்ள ஒருவரிடமிருந்து இன்று வழிகாட்டுதலைப் பெறலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறலாம். ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

சிம்மம்:
சொத்து விவகாரங்கள் இன்று உங்களுக்கு பெரிய லாபத்தை தரும். அதிர்ஷ்டத்தை மேம்படுத்தும் முயற்சிகள் இன்று வெற்றி பெறும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். இதன் மூலம் நண்பர்களுக்கு உதவ முடியும்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு



கன்னி:
உங்களின் எதிரிகளை தோற்கடிக்க வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் இன்று அமையலாம். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். சில பெரிய வேலைகளைச் செய்ய ஒரு முக்கிய திட்டம் இன்று நீங்கள் வகுக்கலாம். சுப செலவுகள் ஏற்படும், இதனால் மகிழ்ச்சி இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நிறம்: நீலம்

துலாம்:
வாகனங்கள், இயந்திரங்கள் தீ விபத்து போன்றவற்றால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். பிறரின் பிரச்சனைகளில் இன்று தலையிடாதீர்கள். உங்களுக்கு தேவையான விஷயங்கள் இன்று கிடைக்காமல் போகலாம் இதனால் ஏமாற்றமடைவீர்கள். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு



விருச்சிகம்:
அரசு ஆதரவுடன் பணிகள் முடிவடைந்து லாபமும் கிடைக்கும். வணிகர்களுக்கு வியாபாரம் அவர்கள் விருப்பப்படி நடக்கும். புதிய முதலீடுகளை செய்து ரிஸ்க் எடுக்காதீர்கள். பணியிடத்தில் நிம்மதி இருக்கும். வீட்டிலும் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

தனுசு:
உங்கள் பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். வணிகர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் புகழ் உயரும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று எந்த விஷயத்திலும் ரிஸ்க் எடுக்காதீர்கள். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்



மகரம்:
நீங்கள் பிறருக்கு கடனாக கொடுத்த தொகையை வசூலிக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலதிபர்களுக்கு வியாபரம் சார்ந்து புதிய ஒப்பந்தங்கள் வரலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். மேலதிகாரியின் ஆதரவு மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். எதிலும் கவனக்குறைவாக இருக்காதீர்கள்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்:

இன்று செலவுகள் அதிகரிப்பதால் மன அழுத்தம் ஏற்படும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள், மோதலை தவிர்க்கவும். குடும்ப கவலைகள் நீங்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது விவேகத்தை பயன்படுத்துங்கள். முக்கிய பிரச்சனைகளை தீர்க்க நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: நேவி ப்ளூ



மீனம்:
வணிகர்களின் தொழில் சார்ந்த பயணங்கள் லாபகரமாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்களைப் வாங்க ஏற்ற நாள். உங்களின் சில முக்கிய பொருட்கள் காணாமல் போகலாம் என்பதால் கவனமாக இருங்கள். குடும்ப ஏற்படும் பிரச்சனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். புதிய நபர்களிடம் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்.
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-13

13 ‘‘என்ன மெரினாஸ் கம்பெனி மேடம் என்ன சொல்லி அனுப்பினார்கள்?" கிண்டலாக கேட்டபடி கனகவேல் தோரணையாக சோபாவில் அமர, அவன்…

9 hours ago

தீபாவை கடத்திய ரியா..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவை தீர்த்து கட்ட ரம்யா…

9 hours ago

‘ஆறாம் வேற்றுமை’ விமர்சனம்

ஹாலிவுட் படம் அப்பகலிப்டோ பாணியில், சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் காதலையும் சேர்த்து சொல்லியிருக்கும் படம் தான் இந்த ‘ஆறாம் வேற்றுமை’.…

9 hours ago

தங்கமயிலை ஓரமாக உட்கார வைத்த மீனா …..-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதியிடம் மாமியார் என்ற கெத்துடன் தங்கமயில் இடம் அதிகாரம் பண்ணுங்கள். அப்பொழுதுதான்…

9 hours ago

ஷாலினி அஜீத் வெளியிட்ட புகைப்படம்…ஷாலினிக்கு என்ன ஆச்சு?

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக தான் அவசர அவசரமாக ’விடாமுயற்சி’…

9 hours ago

சரணடைந்தேன் சகியே – 23

23 “வணக்கம்மா.. நான் அகல்யா.. உங்க பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன்..” கை குவித்தபடி வந்த அந்த பெண்ணிற்கு முப்பது…

13 hours ago