இன்றைய ராசி பலன் (19.06.24)

இன்றைய ராசிபலன் ஜூன் 19, 2024, குரோதி வருடம் ஆனி 5, புதன் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷ ராசியில் உள்ள ரேவதி, அஸ்வினி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சிரமங்களை சந்திக்க நேரிடும். இன்று உங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். தைரியமான செயல்பாடும், முடிவுகளும் சிறப்பான பலனை தரும். இன்று உங்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் வேலையில் நல்ல வெற்றி பெற முடியும். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாள். நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.




ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு புதிய வேலை, வியாபாரம், தொழில் தொடங்குவதற்கு சாதகமான நாள் அல்ல. கவனமாக செயல்பட வேண்டிய நாள். எல்லா வேலைகளிலும் சரியான திட்டமிடல் அவசியம். இன்று குடும்ப தேவைக்காக அதிகமாக செலவிடுவீர்கள். அரசியல் தொடர்புடையவர்களுக்கு இந்த கெளரவம் கிடைக்கும். இன்று வேலைப்பளுவுக்கு மத்தியில் குடும்பம் மற்றும் வாழ்க்கைத் துணைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களின் மன உறுதி அதிகரிக்கும். இன்று யாருக்காவது கடன் கொடுத்திருந்தால் அதை திரும்ப பெறலாம். இன்று உங்களின் நிதி நிலை பலப்படும். வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல வெற்றி கிடைக்கக்கூடிய நாள். இன்று குடும்பத்தில் பெற்றோருடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான விஷயத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வேலை, வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனமாக இருக்கவும். இன்று ஆன்மீக விஷயத்தில் கவனம் தேவை. போட்டித் தேர்வில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.




சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்திலும், பணியிடத்திலும் கருத்து வேறுபாடுகள் தீரும். இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணைக்கு பரிசு வழங்க நினைப்பீர்கள். இன்று உங்களின் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும். இன்று நீங்கள் எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் நல்ல வெற்றியை பெறுவீர்கள்.




கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சுப காரியங்களிலும், பெரியவர்களின் சேவைகளிலும் மன நிறைவடைவீர்கள். இன்று உங்களின் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் தீரும். காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். இன்று அதிக பணம் செலவிட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் புகழ் அதிகரிக்கும். தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. மாலையில் உங்களுக்கு சற்று நிம்மதி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நல குறைபாடு கவலையை தரக் கூடியதாக இருக்கும். இன்று உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.




விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். சில முக்கிய ஏற்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் விஷயத்தில் சாதகமான பலன்களை கிடைக்கும். இன்று நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். மூத்தவர்களின் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் வேலையில் நல்ல வெற்றியை பெற்று தரும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையப் போகிறது. உங்களின் செயல்பாடு முழு திருப்தியை தரும். ஒவ்வொரு விஷயத்திலும் நல்ல வெற்றியை ருசிப்பீர்கள். இன்று உங்களின் செயல்பாட்டால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் நிதி நிலையை வலுப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சியில் நல்ல வெற்றி கிடைக்கும். வீட்டில் செல்வம் பெருகும். நண்பர்களால் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.




மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவை பெறுவீர்கள். உங்களின் நிதி நிலைமையை உயரும். உங்கள் தொழில், வியாபாரத்தில் லாபத்தை பெற்றிடலாம். இன்று உங்களின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் செயல்பாடு திருப்தியைத் தரும். பணியிடத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்திலும், அக்கம் பக்கத்தினருடனும் எந்த ஒரு தகராற்றிலும் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் உங்களின் முயற்சிக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய பலன் கிடைக்கும். இன்று உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தேடிவரும். ஏதேனும் ஒரு வகையில் உங்களின் வருமானம் உயர்வதற்கான வழிகள் அமையும். இன்று உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் பிஸியாக இருப்பீர்கள்.




மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் நிதிநிலை சிறப்பாக இருக்கும். புதிய வருமானம் கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயத்தில் புதிய ஒப்பந்தங்களும், லாபகரமான திட்டங்களும் செயல்படுத்துவீர்கள். இன்று உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாகச் செலவிடுவது அவசியம். வியாபார விஷயத்தில் கவனம் தேவை. மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியை பெறலாம். இன்று ஆன்மீகத்தில் ஈடுபடு அதிகரிக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-11

11 ‘‘வி.கே.வி நம்முடைய கான்ட்ராக்ட் கோட் தெரிந்து கொள்ள என்னிடமே பேரம் பேசினார் தெரியுமா மேடம்?" சஷ்டிகா சுமேரியாவிடம் சொல்ல,…

6 hours ago

மீனா -ராஜியை பார்த்தவுடன் எஸ்கேப்-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் வழக்கம் போல பாண்டியன் கதிரை திட்டுவதாக அமைந்திருந்தது. இரவில்…

6 hours ago

‘கதாநாயகன்’ விமர்சனம்

பயந்த சுபாவம் கொண்ட ஹீரோ விஷ்ணு விஷாலுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹீரோயின் கேத்ரின் தெரசாவுக்கும் காதல். காதலியை…

6 hours ago

நூடுல் பாக்கெட்டில் இருக்கும் மசாலாவை வீட்டிலேயே செய்யலாம்.. இதோ ரெசிபி

வீட்டில் வகை வகையாக மசாலா போட்டு சமைத்தாலும் கடைகளில் இருந்து வாங்கி உண்ணும் மசாலாக்களின் சுவையை போல நம்மால் செய்ய…

6 hours ago

சரணடைந்தேன் சகியே – 21

21     சிலீரென கண்ணாடி விழுந்து நொறுங்கும் சத்தத்தில் அபிராமி வேகமாக வந்து பார்த்தாள்.. சில விருந்தாட்கள் வருவதால்…

11 hours ago

மாமியாரை அடிக்க கை ஓங்கிய கோபி.. – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சாவித்திரியை…

11 hours ago