Categories: Uncategorized

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாமும் உதவலாமே: இதோ 14 எளிய குறிப்புகள்!

சுற்றுச்சூழல் பற்றிய பிரச்னைகளைப் பற்றிக் கேள்விப்படும்போதெல்லாம் நம் அனைவருக்குள்ளும் ஒரு சிறிய கேள்வி எழும்: ‘நம் அளவில் ஏதாவது செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவ முடியுமா?’ வாழ்வின் அன்றாட நெருக்கடிகளுக்கு மத்தியில் நம்மாலான சிறு முயற்சிகளை முன்னெடுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க முடிந்தால் நன்றாக இருக்கும், இல்லையா? அதற்கான சில எளிமையான குறிப்புகளைப் பார்க்கலாம்.

* முடிந்த வரை தண்ணீர் வீணாவதைக் குறைக்கவும். காய்கறி மற்றும் அரிசி கழுவிய நீரை செடிகளுக்கு ஊற்றுவது போன்ற மறுசுழற்சி முறைகளைப் பின்பற்றவும்.



* பழுதடைந்து ஒழுகும் குழாய்களை உடனடியாக மாற்றவும். வீணாகும் ஒவ்வொரு சிறு துளி நீரும் பெருவெள்ளமாக மாறும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

* மின்சார சேமிப்புக்கு நம்மாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். அடுத்த முறை பல்புகளை மாற்றும்போது எல்.ஈ.டி. பல்புகளை வாங்கி மாட்டுங்கள். அவை குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன.

* தொலைக்காட்சி, ஏ.சி. போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கும்போது ‘ஸ்டாண்ட்-பை’ மோடில் வைக்க வேண்டாம். பயன்பாடு முடிந்தவுடன் அவற்றை உடனே அணைத்துவிடவும்.

* கூடியவரையில் உணவுப்பொருட்களை வீணடிக்க வேண்டாம். வாங்கி வந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்துங்கள். அவை அழுகி வீணாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக கோடைக்காலங்களில் உணவுப்பொருட்கள் எளிதில் கெட்டுப்போய்விடும் என்பதால் கவனமாக இருங்கள்.

* குப்பையை மக்கும் குப்பையாகவும் மக்காத குப்பையாகவும் தனித்தனியாகப் பிரித்து குப்பைத் தொட்டியில் சேருங்கள்.

* கூடியவரையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து விடுங்கள்.

* உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் காய்கறி மற்றும் பழக் கழிவுகளை வைத்து கம்போஸ்டிங் முறையில் உரம் தயாரியுங்கள்.

* வசதி இருந்தால் வீட்டின் மொட்டை மாடியில் சூரியத் தகடுகளைப் பொருத்தலாம். சூரிய ஒளி மின்சாரத்தில் முதற்கட்ட முதலீடு அதிகம் என்றாலும் சில ஆண்டுகளிலேயே நமக்கு லாபம் வரும் அளவுக்கு மின்சாரம் கிடைக்கும்.

* வீட்டில் உள்ள இட வசதிக்கு ஏற்ப செடிகளை வளர்த்து பயனடையுங்கள்.



* வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும்போது அவற்றின் செயல்திறனை கவனித்து முடிவெடுக்கவும். இது மின்சார கட்டணத்தையும் குறைக்கும்.

* வெளியில் செல்லும்போது தவறாமல் வீட்டிலிருந்தே தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.

* கூடியவரையில் வீட்டில் இருக்கும்போது டிஷ்யூ பேப்பர், பேப்பர் டவல் போன்றவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்கவும்.

* சூழலைப் பேணவேண்டியதன் அவசியத்தைப் பற்றி குழந்தைகளிடம் அடிக்கடி உரையாடுங்கள். இது வருங்கால தலைமுறையினரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும்.

இவற்றை எல்லாம் பின்பற்றினாலே உங்கள் வீடு பசுமையைப் பேணும் வீடாக மாறிவிடும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

தின்பண்ட வியாபாரம்.. வெற்றி கதை?

பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…

1 hour ago

மீனாவால் முகம் மாறிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…

1 hour ago

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

4 hours ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

4 hours ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

4 hours ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

4 hours ago