Categories: Samayalarai

சப்பாத்தி மீதம் இருக்க?10 நிமிடத்தில் இதை செஞ்சு அசத்துங்க.!

வீட்டில் எப்போது சப்பாத்தி செய்தலும் கண்டிப்பாக ஒன்று இரண்டாவது மீந்து போய்விடும். எப்படி கணக்குப்போட்டு சப்பாத்தி சுட்டாலும் இதே நிலைதான். ஆனால் அதை பற்றி இனி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் மீந்த சப்பாத்தியை கொண்டு எப்படி சுவையான ரெசிபியை விரைவாக செய்யலாம் என்று தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

எனவே எஞ்சிய சப்பாத்தியை கொண்டு சுவையான உப்புமாவை 10 நிமிடத்தில் எப்படி செய்வது என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.



தேவையான பொருட்கள் :

  • சப்பாத்தி – 8

  • முட்டை – 2

  • பெரிய வெங்காயம் – 2

  • பச்சை மிளகாய் – 3

  • கருப்பு மிளகு தூள் – 1 டீஸ்பூன்

  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

  • கறிவேப்பிலை – ஒரு கொத்து

  • கொத்தமல்லி இலை – சிறிதளவு

  • உப்பு – தேவைக்கேற்ப



செய்முறை :

  • முதலில் சப்பாத்தியை துண்டு துண்டுகளாக நறுக்கி தனியே வைத்துக்கொள்ளவும்.

  • பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  • பிறகு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளுங்கள்.

  • பின்னர் அதில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு தூள் தூவி உடனே சப்பாத்தி துண்டுகளையும் சேர்த்துக்கொள்ளவும்.

  • முட்டை மற்றும் சப்பாத்தி துண்டுகளை நேரத்தில் சேர்ப்பதால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று நன்றாக கலந்துவிடும்.

  • சப்பாத்தி துண்டுகள் மிருதுவாகும் வரை குறைந்தது ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

  • இறுதியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக கலந்து இறக்கினால் சுவையான சப்பாத்தி உப்புமா சூடாக பரிமாற ரெடி.



  • வீட்டுக்குறிப்பு

    • காய்கறிகளை வேகவைக்கும் போது அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்தால் காய்கறிகள் எளிதில் வெந்துவிடும்.

    •  மீதமான தேங்காய் சட்னியை கெட்டியான புளிப்பு மோரில் சேர்ந்து ஒரு கொதி விட்டால் சுவையான மோர் குழம்பு தயார்.

    •  கொள்ளு, காராமணி வேக வைத்த நீரை கீழே கொட்டாமல் சூப் செய்ய பயன்படுத்தலாம். சத்தாக இருக்கும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

60 mins ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

1 hour ago

நாள் உங்கள் நாள் (20.05.24) திங்கட்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 20.05.24 திங்கட்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 7 ஆம்…

1 hour ago

இன்றைய ராசி பலன் (20.05.24)

இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி 7, திங்கட் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.…

1 hour ago

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

12 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

12 hours ago