Categories: CinemaEntertainment

உருவாகிறதா ரஜினிகாந்த் பயோபிக்… அப்போ ஹீரோ யார்?

இளையராஜாவின் பயோபிக் அறிவிப்பின்போதே, பலரது முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது ரஜினிகாந்த் பயோபிக்தான். பெரும்பானவர்கள் ரஜினிகாந்த் பயோபிக்கை படமாக எடுக்கமாட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால், தற்போது ரஜினிகாந்த் பயோபிக் படமாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதேபோல், இப்படத்தின் தயாரிப்பாளர் பற்றிய முக்கிய தகவலும் வந்துள்ளது.

ஒருவர் வாழ்க்கையின் உண்மை கதையைக் கொண்டு படம் எடுப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு, அவர்களை ஊக்குவிக்கவும் செய்கிறது. அந்தவகையில், ரஜினிகாந்த் ஒரு பேருந்து ஓட்டுனராக தன் வாழ்க்கையை ஆரம்பித்து, கோலிவுட் சூப்பர் ஸ்டாராக எப்படி ஆனார் என்ற கதையைப் பார்க்க யார்தான் ஆசைக்கொள்ள மாட்டார்கள். இப்படம் வெளிவந்தால், இந்தியா முழுவதுமுள்ள மக்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாகவே இருக்கும்.



ஒருசில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் ஒருவர் ரஜினியிடம் அவருடைய பயோ பிக் எடுப்பதைப் பற்றி பேசியிருக்கிறார். ”அப்போது ரஜினி பையோ பிக்னா எல்லாம் உண்மையா இருக்கனும். என்னுடைய முழு கதையை கூறினால் மக்கள் என்னை வெறுத்துவிடுவார்கள்.” அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக அப்போது செய்தி பரவியது. இதனையடுத்து ரஜினிகாந்த் பயோபிக் வர வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டது.



சமீபத்தில் இளையராஜாவின் பயோபிக் நிகழ்ச்சியில் தனுஷ் இதுகுறித்து பேசினார். அதாவது எனக்கு இரண்டு பேருடைய வாழ்க்கையில் நடிக்க ஆசையுள்ளதாகக் கூறினார். ஒருவர் இளையராஜா, மற்றொருவர் ரஜினிகாந்த் என்று கூறினார்.

இந்நிலையில் இந்தித் தயாரிப்பாளர் சஜித் நாடியத்வாலா, ரஜினிகாந்தின் பயோபிக்கைத் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர், ரஜினிகாந்தை சில மாதங்களுக்கு முன் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருவதாகவும், இதை யார் இயக்கப் போகிறார்? ரஜினிகாந்தாக யார் நடிக்கப் போகிறார்?  உள்ளிட்ட விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்திற்கு ஹீரோவாக யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவெடுக்கவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் பல நடிகர்களிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ரசிகர்கள் சிலர் ரஜினிகாந்த் பயோபிக்கில் கவின், தனுஷ் ஆகியோர்களில் யாராவது நடித்தால், நன்றாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்தனர். அதேபோல், சிலர் மணிகண்டன் பெயரை கூறுகிறார்கள். ஏனெனில், இவர் கபாலி படத்தில் ரஜினிகாந்த் மகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சிறுதானியத்தில் ஐஸ்கிரீம் : ஸ்ரீ மில்லட் ஐஸ்கிரீம்ஸ் சாதனை படைத்தது எவ்வாறு?..!

பிரபு வேணுகோபால், சசிதர், அருண் பிரகாஷ், பார்கவ் ஆகிய நான்கு பேரும் நல்ல நண்பர்கள். வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் தரும்…

2 hours ago

ரோகினி கொடுத்த வார்னிங் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின்…

2 hours ago

நடிகை மனோரமா-6

தமிழ் திரையுலகில் வாழ்ந்த‌ காலமெல்லாம் ஒரு நடிகன் நிலைப்பது அரிது, நடிகை நிலைப்பது அதை விட அரிது , வெகு…

5 hours ago

ஃப்ரெஷ் ஜூஸ் குடிப்பதால் பிரச்சினைகள் ஏற்படுமா..?ஏன்?

பழச்சாறுகளை நீங்கள் அருந்தியதும் உங்களுடைய ரத்தத்தில் உடனடியாக சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும். இது நீங்கள் சோடா குடிப்பதற்கு சமம். இதனால்…

5 hours ago

ஆண்களே! உங்களுக்கு ஹீரோ மாதிரி அழகான சருமம் வேணுமா?

பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஒரு கனவாகும். நாள் முழுவதும் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும்…

5 hours ago

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை (சித்ரா) இறப்பிற்கு காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த நெருங்கிய தோழி

விஜே சித்ரா தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று வாய்ப்புக்காக பல நேரங்களில் போராடி இருக்கிறார். ஆனால் அப்பொழுதெல்லாம்…

5 hours ago