உணவகங்களை வெற்றிகரமாக நடத்தி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சாதனையாளர்கள்

வீட்டில் அம்மா கையால் சமைத்த உணவை சுவைத்துவிட்டு, “இந்த சுவையை உலகமே அனுபவிக்க வேண்டும்!” என்று உற்சாகமாக பேசியிருக்கிறீர்களா? அத்தனை பேரும் அவ்வப்போது உணவு தொழில் தொடங்குவது பற்றி கனவு காண்பதுண்டு. சாப்பாட்டுக்கடை, ரெஸ்டாரண்ட் என ஆரம்பித்து லட்சக்கணக்கில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதே பொதுவான கனவு!

ஆனால், இதுபோன்ற கனவுகள் செயல்படுவதே இல்லை என நினைத்துவிட வேண்டாம். சில சமயங்களில் திட்டமிடல் இன்மை, சரியான வழிகாட்டுதல் இன்மை போன்ற காரணங்களால் கனவுகள் கலைந்து போய்விடுகின்றன. எனினும், உணவுத் தொழில் துவங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை உதவும்.



உணவுத் தொழில் துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தொழில்முனைவோர்களை நாங்கள் சந்தித்து அவர்களது அனுபவங்கள் மற்றும் யோசனைகளை பெற்றோம். அவர்கள் பகிர்ந்து கொண்ட சில சுவாரசியமான குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இதன் நோக்கம்!

அலிகாரை சேர்ந்த ஷேகர் மிட்டல் பெங்களுரூக்கு வேலை காரணமாக குடிபெயர்ந்தார். பெங்களூர் வந்த பிறகு அவரது தாய் சமைத்துப் பரிமாறும் உணவுகளை ரொம்பவே மிஸ் செய்தார். பெங்களூரில் கிடைக்கும் உணவுகள் அவருக்கு செட் ஆகவில்லை.

இந்தப் பிரச்சனை தனக்கு மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கானவர்கள் இதுபோன்ற வீட்டு ருசியில் உணவு கிடைக்காமல் திண்டாடுகின்றனர் என்பதை அவர் அறிந்து கொண்டார். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு என்னதான் வழி என்று ஷேகர் யோசிக்கத் தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து அவர் மா கா துலார் (Maa ka Dulaar) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். நூற்றுக்கணக்கான இல்லத்தரசிகளை அணுகி வீட்டுமுறையில் உணவு தயாரிக்கத் தொடங்கினார். இதுவரை லட்சக்கணக்கான மீல்ஸ்களை மா கா துலார் தயாரித்து விற்றுள்ளது. சைவ, அசைவ ஆகிய இருவகை உணவுகளும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. Patil Kaki: (தடைகளை வாய்ப்புகளாக மாற்றுதல்) கீதா பாட்டீலுக்கு சமையல் மீது அலாதி பிரியம். அவரது தாயாரிடமிருந்து விதவிதமான உணவுப் பதார்த்தங்களை செய்வது குறித்து கற்றுக் கொண்டார்.



இந்த நிலையில் கீதா பாட்டீலின் கணவர் 2016 ஆம் ஆண்டில் காலமானார். எனவே குடும்பத்தை சமாளிப்பதற்காக ஏதாவது தொழில் செய்ய முடிவு செய்தார். தனது இழப்பை ஒரு வாய்ப்பாக மாற்ற கீதா பாட்டீல் முடிவு செய்தார். 2016 முதல் 2020 வரை ஹோம் கிச்சனை கீதா பாட்டீல் நடத்தி வந்தார். அவரது தயாரிப்புக்கு எந்தவித பிராண்ட் பெயரும் கிடையாது. 2021 ஆம் ஆண்டில் தனது மகன் வினித்துடன் சேர்ந்து பாட்டீல் காகி என்ற பிராண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். கொழுக்கட்டை, போளி, சாக்லி, போஹா, சிவ்டா இன்னும் நிறைய வகை உணவுகளை பாட்டீல் காகி தயாரித்தது. இப்போது பாட்டீல் காகிக்கு 3000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். வருடத்துக்கு 1 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. Health Sutra: (சரியான உணவைத் தேர்வு செய்தல்) சிறுதானியம் சார்ந்த ஸ்டார்ட்அப்பான ஹெல்த் சூத்ரா நிறுவனத்தின் உரிமையாளர் சாய் கிருஷ்ணா போபுரி. உணவு ஆர்வலரான சாய் கிருஷ்ணா போபுரி இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோது மேற்கொண்டு என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை.

தில்லி ஐஐடியில் இன்ஜினியரிங் படிப்பு முடித்துள்ள சாய் கிருஷண போபுரி கார்ப்பொரேட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இருப்பினும் ஏதாவது சுயதொழில் தொடங்கவேண்டும் என்ற நினைப்பிலேயே இருந்தார். இந்த நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையை அரிசிக்கு மாற்றாக சிறுதானியங்களை சாப்பிடுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தனது தந்தைக்கு சிறுதானிய உணவுகளைத் தயாரிப்பது குறித்து தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணிடம் சாய் கிருஷ்ணா போபுரி விசாரித்துள்ளார். அந்தப் பெண் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உணவுத் துறையில் வேலை பார்த்து வந்தார்.

அவர் சாய் கிருஷ்ணா போபுரிக்கு நிறைய ஐடியாக்களைத் தந்தார். அந்த ஐடியாக்கள் அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஹெல்த் சூத்ரா நிறுவனத்தை சாய் கிருஷ்ணா தொடங்கினார். அந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக இந்திய அரசு அறிவித்திருந்தது. ஹெல்த் சூத்ரா நிறுவனம் சோள அவல், கேப்பை அவல், பார்லி அவல், ரவா இட்லி, உப்புமா, ராகி பிஸ்கட், ஜோவார் பிஸ்கட்டை தயாரித்தது. இந்தத் தயாரிப்புகள் விரைவிலேயே பிரபலமானது. ஆண்டுக்கு இப்போது ஹெல்த் சூத்ரா இரண்டரை கோடி ரூபாயை சம்பாதித்து வருகிறது. அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களை வைத்து விதவிதமான உணவுகளை சாய் கிருஷ்ணா போபுரி தயாரித்து விற்று வருகிறார். Khyen Khoardan By Ruhab: (குடும்ப ரெசிபி-ஐ பிஸ்னஸாக மாற்றுவது) பாரம்பரியமான ஸ்ரீநகரின் உணவுகளை மீட்பதற்காக ருஹாப் லத்தீப் மிர் ஒரு உணவு நிறுவனத்தைத் தொடங்கினார். இதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை ரூஹாப் லத்தீப் மிர் பொருட்படுத்தவில்லை.



காஷ்மீரின் புகழ் பெற்ற ஷாஹி ஷீரா பானத்தை ரூஹாப் லத்தீப் மிர் தயாரித்து விற்றார். இதன் ரெசிப்பியை தனது பாட்டியிடமிருந்து அவர் கற்றுக் கொண்டார். காஷ்மீர் குடும்பங்களிடையே இந்த பாரம்பரியமான பானம் கிட்டத்தட்ட ஒழிந்து விட்டது. இந்த நிலையில் ஷாஹி ஷீராவை ரூஹாப் லத்திப் மிர் மீட்டெடுத்து விட்டார். கையென் கோவார்தான் பை ரூஹாப் என்ற பிராண்டில் உணவுகளை விற்கத் தொடங்கினார். காஷ்மீரில் கல்யாண சீசன் வந்துவிட்டால் போதும் கையென் கோவார்தான் பை ரூஹாப் நிறுவனத்துக்கு ஆர்டர்கள் வந்து மலைபோல் குவிகின்றன. Food Box: (தரம் மற்றும் மலிவான விலை) ஃபுட் பாக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முரளி குண்டன்னா. மைசூரை சேர்ந்த இவர் தனது தாயாரின் ரெசிபிகளை வைத்து மலிவான விலையில் உணவுகளை தயாரித்து வருகிறார். விலை குறைவாக இருந்தாலும் தரம் மிகச் சிறப்பாக இருந்தது.

நெய் பாலக், டால் கிச்சடி, வாழைக்காய் பஜ்ஜி, கேசரி பாத், புளியோதரை, கீர், தட்டை இட்லி என ருசியான உணவுகளை தயாரித்து விற்றார். பிரேக்பாஸ்ட்,லஞ்ச், டின்னர் என மூன்று வேளைகளிலும் கட்டுப்படியாகக் கூடிய விலையில் உணவுகளை விற்கிறார். ஒரு சாப்பாடு விலை ரூ.70. தனது புட் பாக்ஸுக்கு பெரும்பான்மை வாடிக்கையாளர்கள் டாக்டர் என்று பெருமையுடன் முரளி குண்டன்னா கூறுகிறார். தான் தயாரிக்கும் உணவுகள் ஊட்டச் சத்து நிறைந்திருப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பதாக அவர் சொல்கிறார். மாதந்தோறும் லட்சக்கணக்கில் தனது புட் பாக்ஸ் நிறுவனத்தின் மூலம் சம்பாதிப்பதாகக் கூறுகிறார்.



What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

4 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

4 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

4 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

4 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

8 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

8 hours ago