இந்த’ மருந்துகளை டீ, காபியுடன் சாப்பிடாதீங்க..!

எந்தெந்த மருந்துகளை டீ மற்றும் காபியுடன் சேர்த்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும் என்பதை பற்றி இன்கு தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் பலர் சில காரணங்களுக்காக மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். காய்ச்சல், தலைவலி போன்ற ஏதாவது ஒரு காரணத்திற்காக மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள். பொதுவாகவே, மாத்திரையை தண்ணீருடன் தான் விழுங்குவோம். ஆனால், சிலர் டீ அல்லது காபியுடன் மாத்திரையை எடுத்துக்கொள்கிறார்கள்.



அதாவது மாத்திரை சாப்பிட்ட உடனேயே டீ, காபி குடிப்பார்கள். இப்படி செய்வது நல்லதா..? டீ மற்றும் காபியுடன் மாத்திரைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்? இதுபற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இங்கு பார்க்கலாம்..

பொதுவாகவே, டீ, காபியை விரும்பாதவர்கள் யாருமே இல்லை. டீ, காபி இல்லாமல் நாளை தொடங்குவதில்லை. ஆனால் சிலர் டீ அல்லது காபியுடன் மருந்து எடுத்துக்கொள்கிறார்கள். இப்படி செய்வது மருந்தின் செயல்திறனைக் குறைப்பது மட்டுமின்றி, அது ஆரோக்கியத்திற்கும் கேடு.

எப்படியெனில் டீ, காபியில் உள்ள காஃபின் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், மருந்துகளை சாப்பிட்டால் உடலில் அந்த மருந்தின் செயல்பாட்டை பாதிக்கலாம். இப்போது எந்தெந்த மருந்துகளை டீ மற்றும் காபியுடன் சேர்த்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தைராய்டு மாத்திரை: தைராய்டு மருந்தை எப்போதும் வெறும் வயிற்றில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும், இதனால் அது உடலில் நன்றாக உறிஞ்சப்படுகிறது. எனவே, இந்த மருந்தை எடுத்த பிறகு ஒரு மணி நேரம் கழித்து தான் டீ, காபி குடிக்க வேண்டும். மீறினால், டீ காபியில் உள்ள காஃபின் தைராய்டு மருந்துகளின் செயல்திறனைக் குறைக்கும். மேலும் உடலில் தைராய்டு சமநிலையின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சளி மாத்திரை: சளி இருமலுக்கு மாத்திரை எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் டீ-காபியுடன் இந்த   மருந்துகளை எடுத்துக் கொண்டால்  தீங்கு விளைவிக்கும். இதனால் கவலை மற்றும் தூக்க பிரச்சினைகள் ஏற்படும்.



சர்க்கரை நோய்க்கான மருந்துகள்: டீ-காபியுடன் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்வது தீங்கு விளைவிக்கும். அதுபோல், காஃபின் நீரிழிவு அறிகுறிகளை மோசமாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அல்சைமர் மருந்து: டீ காபியுடன் அல்சைமர் மருந்தை சாப்பிட கூடாது. ஏனேனில், டீ காபியில் உள்ள காஃபின் மூளையில் இரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதனால் மருந்து மூளைக்கு வராமல் தடுக்கிறது. இது பிரச்சனையை மோசமாக்குகிறது.

இதுதவிர, இரத்த அழுத்தம், ஆஸ்துமா, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மன அழுத்த போன்ற மருந்துகளையும் டீ காபியுடன் எடுத்துக்கொள்ளக்கூடாது. இன்னும் சொல்ல போனால் எந்த மருந்தையும் டீ காப்பியுடன் எடுத்துக் கொள்ள வேண்டாம். விரும்பினால் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் இடைவெளி இருக்க வேண்டும்.



 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

7 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

7 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

7 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

7 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

11 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

11 hours ago