Categories: CinemaEntertainment

விவேக் கொடுத்த சர்ப்பரைஸ்!..

கவுண்டமணிக்கு பின் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். அரசு பணியில் இருந்த இவர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் அந்த வேலையை விட்டார். கே.பாலச்சந்தர் மூலம் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்கிற படத்தில் அறிமுகமானார்.

அதன்பின் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான விவேக் கவுண்டமணி சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பின் முக்கிய காமெடி நடிகராக மாறினார். மற்ற நடிகர்களை போல சகநடிகர்களை நக்கலடித்து காமெடி செய்யாமல் மக்களிடம் புரையோடி போயிருக்கும் மூடநம்பிக்கைகளை கிண்டலடிப்பது போல காமெடி காட்சிகளை அமைத்தார்.

மறைந்த நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பின் இதை திரையில் செய்தவர் இவர்தான். எனவேதான், இவருக்கு சின்ன கலைவாணர் என்கிற பட்டம் கிடைத்தது. சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். பல படங்களில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக வந்து ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.



சினிமாவில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் மீது அதிக அன்பு கொண்டிருந்த விவேக், அவரின் ஆலோசையின் படி நிறைய மரங்களை நட்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் கமல்ஹாசனை தவிர மற்ற எல்லா நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.

ஹரியின் இயக்கத்தில் விக்ரம், திரிஷா ஆகியோர் நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்தான் சாமி. இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வெலி மற்று காரைக்குடி அக்ராஹரம் பகுதியில் நடந்தது. அப்போது ரசிகர் ஒருவர் விவேக்கை தனது வீட்டிற்கு காபி சாப்பிட அன்போடு அழைத்திருக்கிறார். அவரின் அழைப்பு ஏற்று அவரின் வீட்டுக்கு போயிருக்கிறார்.

வடை, பஜ்ஜி விற்கும் அந்த ரசிகரின் வீட்டில் உட்கார சேர் கூட இல்லை. நிலமையை புரிந்துகொண்ட விவேக் அங்கிருந்த எண்ணெய் டின்னை கவுத்துப்போட்டு அதன்மீது அமர்ந்து அந்த ரசிகர் கொடுத்த பஜ்ஜி, டீயை சாப்பிட்டிருக்கிறார். அவரின் உபசரிப்பில் மகிழ்ந்து போன விவேக் அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அதோடு, சாமி பட படப்பிடிப்பு குழுவுக்கு காலை உணவை தயாரித்து கொடுக்கும் ஒப்பந்தத்தையும் அந்த ரசிகருக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மாவட்ட கோவில்கள்:திருவல்லீஸ்வரர் திருக்கோவில்

சுவாமி : திருவல்லீஸ்வரர், திருவலிதாய நாதர். அம்பாள் : ஜெகதாம்பிகை, தாயம்மை. தீர்த்தம் : பரத்வாஜ் தீர்த்தம்(திருக்குளம்). தலவிருட்சம் : கொன்றை, பாதிரி. தலச்சிறப்பு : இக்கோவிலில்…

1 min ago

நாள் உங்கள் நாள் (12.05.24) ஞாயிற்றுக்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 12.05.24 ஞாயிற்றுக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - சித்திரை 29 ஆம்…

3 mins ago

இன்றைய ராசி பலன் (12.05.24)

இன்றைய ராசிபலன் மே 12, 2024, குரோதி வருடம் 29, ஞாயிற்று கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம்…

5 mins ago

தூங்கி எழுந்த பிறகும் சோர்வாக இருக்கீங்களா ?

காலையில் தூங்கி எழுந்தவுடன் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும் என அனைவரும் விரும்புவோம். ஆனால் சிலர் தூங்கி எழுந்த பிறகே…

11 hours ago

ருசியான மட்டன் குருமா

கறிக்குழம்பு, பிரியாணி, குருமா, சுக்கா, வறுவல் என மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதிலும் மட்டன் வைத்து தயாரிக்கப்படும்…

11 hours ago

ஸ்டார் விமர்சனம்

சுக்குநூறாக உடையும் கனவுகளின் கண்ணாடி சிதில்களை ஒவ்வொன்றாக சேர்த்து மீண்டும் கனவு மாளிகை கட்ட முயற்சிப்பதே ‘ஸ்டார்’. சினிமாவில் நாயகனாகும்…

11 hours ago