Categories: lifestylesNews

வணிக சாம்ராஜ்யத்துக்கு அடித்தளமிட்ட ஷஷி சோனியின் கதை

எந்தவொரு போராட்டத்தின் பயணமும் வெற்றியின் இலக்கை நிச்சயம் எட்டியடையும் என்று சொல்லப்படுகிறது. இது ஷஷி சோனியின் கதையுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. அவர் தற்போது ரூ. 4,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

ஆனால் இந்த வர்த்தகத்திற்கு வெறும் ரூ. 10,000 ஆரம்ப முதலீட்டில் அவர் தனது வணிக சாம்ராஜ்யத்துக்கு அடித்தளமிட்டார் என்பதை அறியும்போது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.



பத்ம விபூஷன் விருது பெற்றவர்களின் பட்டியலில் வணிக உலகில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நான்கு நபர்களில் அவரும் ஒருவர். எளிமையான தோற்றத்திலிருந்து அசாதாரண வெற்றிக்கான சஷியின் குறிப்பிடத்தக்க பயணத்தை பற்றி இங்கு பார்க்கலாம். சஷி தனது முதல் பிசினஸை 1971 ஆம் ஆண்டு தொடங்கினார், ரூ.10,000 முதலீட்டை வைத்து அவர் தீப் டிரான்ஸ்போர்ட் (Deep Transport) நிறுவனத்தை ஆரம்பித்தார். 1975 ஆம் ஆண்டில் அவர் வெற்றிகரமாக நிர்வாகத்தை கவனித்துவிட்டு சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார். 1975 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள முலுந்த் பகுதியில் தீப் மந்திர் என்னும் சினிமா தியேட்டரை அவர் நிறுவினார். 1980 ஆம் ஆண்டு வரை அந்த தியேட்டர் இருந்தது.

பத்தாண்டு கடும் சிரமத்துக்குப் பின்னர் சஷி வெற்றியின் சுவையை ரசிக்க துவங்கினார். இதன் பின்பு ஆக்ஸிஜன் பிரைவேட் லிமிடெட்டை தொடங்கினார். மைசூரில் உள்ள அந்த கேஸ் தயாரிப்பு நிறுவனம் அவரது எதிர்கால வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக இருந்தது. படிப்படியாக தனது தொழிலை விரிவுபடுத்திய சஷி டெக்னிகல் துறையில் நுழைந்தார். 2005 ஆம் ஆண்டில், ஷஷி சாப்ட்வேர் நிறுவனத்தை நிறுவினார், இது IZMO லிமிடெட் என்ற பெயரில் இயங்குகிறது.



மைசூரை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் உலகளவில் உயர் தொழில்நுட்ப ஆட்டோமோட்டிவ் மற்றும் ஆன்லைன் ரீடைல் விற்பனை தீர்வுகளை வழங்குகிறது. பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இரண்டிலும் பட்டியலிடப்பட்டுள்ள இந்நிறுவனத்தில் ஷஷி, நிறுவனத்தின் தலைவர் பதவியை வகிக்கிறார். தனது வணிக புத்திசாலித்தனம் தவிர, சஷி பல்வேறு சமூக காரணங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவர் ஜனசேவா சமிதியின் உறுப்பினராக உள்ளார். வேலை வாய்ப்புகள், பெண்களுக்கான கல்வி, ஓய்வூதியத் திட்டங்களைத் தொடங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி திரட்டுதல் ஆகியவற்றில் தீவிரமாக பங்களிக்கிறார்.

மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருதைப் பெறுவதற்கு முன்பு, சஷி சோனி வணிகம் மற்றும் சமூக நலத் துறைகளில் தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்றார். 1990 இல், இந்தியத் தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருதைப் பெற்றார். கூடுதலாக, அவர் அனைத்து இந்திய தொழில்துறை எரிவாயு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் குழு உறுப்பினராக பணியாற்றினார். தொழில்நுட்ப மேம்பாட்டு இயக்குநரகத்தில் பதவி வகித்தார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

7 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

7 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

7 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

7 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

11 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

11 hours ago