Categories: Samayalarai

மொச்சைக்கொட்டை குழம்பு!

அதிக காரமில்லாத பொரியல் கூட்டு, வடை, பக்கோடா போன்ற தொடுகறிகளும். சூடான ஆம்லெட் மிக நல்ல காம்போ. தயிர் சாதம், இட்லி, தோசைக்கும் இந்தக்குழம்பு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். சூடான பருப்பு சாதத்திற்கும் மோர் குழம்பு சாதத்திற்கும் மிகவும் நன்றாக இருக்கும்.



தேவையான பொருட்கள்

மொச்சைக்கொட்டை – 75 கிராம்

புளி – 30 கிராம்

கடுகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1/4 ஸ்பூன்

வரமிளகாய் – 6

தாளிப்பு வடகம் – 1 ஸ்பூன்

சாம்பார் தூள் – 1  ஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்

மிளகு – 1/2  ஸ்பூன்

கடலைஎண்ணைய்  – 1/2 கிண்ணம்

கத்திரிக்காய் – 150 கிராம்

சின்ன வெங்காயம் – 50 கிராம்

தக்காளி – 2

கறிவேப்பிலை –1 கொத்து

துருவிய தேங்காய் –1 கப்

கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு

உப்பு – தேவையான அளவு



செய்முறை விளக்கம்  –

  • மொச்சையை மூன்று மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

  • சின்ன வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக்கொள்ள வேண்டும். கத்தரிக்காயை அலசிவிட்டு நான்காகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக்கொள்ள வேண்டும் .

  • புளியை ஊறவைத்து கரைத்து வைக்கவேண்டும். மிளகு சீரகத்தை இடித்து வைக்கவேண்டும். தாளிப்பு வடகத்தை உதிர்த்து வைக்கவேண்டும்.

  • ஊறிய மொச்சையை எடுத்து குக்கரில் சேர்த்து அதனுடன் 3 மடங்கு தண்ணீர் சேர்த்து, 2 விசில்கள் விட்டு வேக வைக்கவேண்டும். மொச்சை வெந்தவுடன் நீரை வடிகட்டி அதை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

  • கடாயை சூடாக்கி, கால் கிண்ணம் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

  • இதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். தக்காளி மற்றும் கத்தரிக்காயை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

  • மொச்சை வேக வைத்த தண்ணீர் மற்றும் தேவைப்பட்டால் கூடுதலாக கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். கடாயை மூடி வைத்து வேகவைக்க வேண்டும்.

  • அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். பின்னர் சாம்பார் தூள், மிளகாய் தூள், புளி கரைசல், உப்பு எல்லாம் சேர்த்து, கிளறி உப்பு, காரம் சரி பார்க்கவேண்டும்.

  • இன்னொரு அடுப்பில், கடாலை சூடாக்கி, மீதி கடலை எண்ணெய்யை ஊற்றி இடித்த மிளகு சீரகம், தாளிப்பு வடகம், துருவிய தேங்காய் அனைத்தும் சேர்த்து தாளித்து வைக்கவேண்டும்.



  • குழம்பு ஒரு கொதி வந்ததும் தாளிப்பை குழம்பில் சேர்த்து ஒரு கிளறு கிளறி ஓரிரு நிமிடங்கள் அடுப்பில் வைத்து பின்னர் இறக்கிவைத்து மல்லித்தழை துவவேண்டும்.

  • கமகம மணத்துடன் அட்டகாசமான அம்மாபேட்டை மொச்சைக் கொட்டைக் குழம்பு ரெடி. நீங்கள் செய்த குழம்பு கூட்டு பதத்தில் இருந்தால் தேவையான அளவு கொதிக்கும் தண்ணீர் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து குழம்பாக்கிக் கொள்ளலாம்.

  • சூடான சோற்றில் நெய் அல்லது நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம் வடகம் இருந்தால் போதும்.

  • அதிக காரமில்லாத பொரியல் கூட்டு, வடை, பக்கோடா போன்ற தொடுகறிகளும். சூடான ஆம்லெட் மிக நல்ல காம்போ. தயிர் சாதம், இட்லி, தோசைக்கும் இந்தக்குழம்பு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். சூடான பருப்பு சாதத்திற்கும் மோர் குழம்பு சாதத்திற்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

  • இதே குழம்பில் கூடுதலாக பரங்கிக்காய் சேர்த்தால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

  • இந்தக் குழம்பை நீங்கள் ரொம்பத் தண்ணீராக வைக்கக் கூடாது. இது திக்காக வைக்கவேண்டிய ஒரு குழம்பாகும்.

  • மொச்சை ஊறிய, மொச்சை வெந்த நீரையே குழம்புக்கு பயன்படுத்தினால் குழம்பின் ருசி அட்டகாசமாக இருக்கும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நீ உயிரென நான்-13

13 " வாங்கம்மா ...வாம்மா ...வா தாயி ...வாங்க மேடம் ..."  மிராசுதார் வீட்டில் விதம் விதமான வரவேற்பு மதுரவல்லிக்கு…

2 hours ago

மாடித்தோட்டத்தில் அவரைக்காய் பயிரிடுவோமா..!

அவரை பயிரிடுவதற்கு தேவையான பொருட்கள்: Grow Bags அல்லது Thotti அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது,…

2 hours ago

பெண்களே உஷார்.. பிறப்புறுப்பிலிருந்து இந்த நிறத்தில் திரவம் வெளியேறுதா..?

இந்திய பெண்களிடத்தில் அதிகமாக காணப்படும் புற்றுநோய்களில் மூன்றாவது இடத்தை கருப்பை புற்றுநோய் பிடித்துள்ளது. 2022-ம் ஆண்டில் மட்டும் 45,000 பெண்கள்…

2 hours ago

திடீரென ஷுட்டிங்கை நிறுத்திய எம்.ஜி.ஆர்.. ஏன்?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் அவருக்கு மகுடம் சூட்டிய திரைப்படங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று தான் பணம்…

2 hours ago

ஜப்பான் Miyazaki மாம்பழத்தை பயிரிட்டு லட்சங்களில் சம்பாதித்து வரும் விவசாயி

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு என்றுமே மவுசு குறையாது. மாம்பழ சீசன் வந்துவிட்டால் போதும், அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு மாம்பழங்களை…

5 hours ago

மீனாவுக்காக முத்து எடுத்த அடுத்த முடிவு – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாட்டி…

5 hours ago