மகாபாரதக் கதைகள்/நவகுஞ்சரம்

நவகுஞ்சரம் என்பது இந்தியாவின் காவியமான மகாபாரதம் கதையில் இடம்பெற்ற ஒன்பது வெவ்வேறு விலங்குகளின் உடலுறுப்புகள் கொண்ட உயிரினம் ஆகும். ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது.சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு நவகுஞ்சரம்.



நவ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது.ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர்.ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந்தான்.அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர் அர்ஜுனன் முன் தோன்றியது.தவத்திலிருந்து கண் விழித்த அர்ஜூனன் நவகுஞ்சரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார்.பின்னர் அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்தார்.அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.

மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை.உலகமோ எல்லையற்றது என்பதை உணர்ந்தார் அர்ஜுனன்.வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த அதன் உடலமைப்பைப் பார்த்து இதுவரை பார்த்திராத ஓர் உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்றும் நினைத்தார். தன்னைச் சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன்தான் என்று தெரிந்துகொண்டு எடுத்த வில்லை கீழே போட்டுவிட்டு வணங்கினார்.ஒடிஷாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும் அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய ஒவிய பாணியான படா சித்ரா ஓவியத்தில் நவகுஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது.நவகுஞ்சரத்தின் உருவம் பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது.அதன் கையில் இருக்கும் நீலச் சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

ஜப்பான் Miyazaki மாம்பழத்தை பயிரிட்டு லட்சங்களில் சம்பாதித்து வரும் விவசாயி

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு என்றுமே மவுசு குறையாது. மாம்பழ சீசன் வந்துவிட்டால் போதும், அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு மாம்பழங்களை…

2 hours ago

மீனாவுக்காக முத்து எடுத்த அடுத்த முடிவு – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாட்டி…

2 hours ago

நடிகை மனோரமா- 5

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

4 hours ago

ரயில்களில் வெள்ளை நிற பெட்ஷீட்டுகள் கொடுக்க என்ன காரணம்?

நம் நாட்டில் மக்கள் குறைந்த செலவில்  நீண்ட தூரம் பயணிக்க ரயில்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ரயிலில் அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பான பயணம்…

4 hours ago

வீட்டிலேயே ஹேர் கண்டிஷர் தயாரிப்பது எப்படி?

அனைவருமே கூந்தலை பராமரிக்க பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். கூந்தல் மென்மையாகவும் நீளமாகவும் இருப்பதற்கு கடைகளில் கிடைக்கும் பலவிதமான பொருட்களை…

4 hours ago

விஜய் பெயரை கெடுக்குறதுக்கு த்ரிஷா செய்த வேலையா இது ?

கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்வார்கள். அது இந்த செய்தியில் வர ஒரு சிலருக்கு சரியா பொருந்தும். தளபதி…

4 hours ago