மகாபாரதக் கதைகள்/கர்ணன் மனைவி யார்?

பலவித திருப்பங்களை கொண்டது மகாபாரத கதைகள் என்பது தெரிந்த விஷயம். இடியாப்ப சிக்கல் என்பது மகாபாரத கதைகளில்தான் இருக்கிறது ஒன்றிலிருந்து ,ஒன்று என வரிசையாக பல திருப்பங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது மகாபாரத கதை அதில் இன்று  கர்ணன் மகனை,  அர்ஜுனன் மகன் ஏன் கொன்றான் என்பது பற்றி இன்றைய தெரிந்த கதை தெரியாத உண்மைகளில் பார்க்கலாம்.

கர்ணனை கதை எல்லோருக்குமே தெரியும். இருந்தாலும் சுருக்கமாக… குந்திதேவிக்கு முனிவர் ஒருவர் தந்த வரத்தினால், குந்திக்கும், சூரியபகவானுக்கும் பிறந்த குழந்தைதான் கர்ணன். குந்தி திருமணமாகாமலேயே குழந்தையை பெற்றதால் ஊருக்கு அஞ்சி குழந்தையை பேழையில் வைத்து  ஆற்று நீரில்  அனுப்பி வைத்தாள். அப்படி அடித்து வரப்பட்ட பேழையை திரிதராஷ்டிரனின் தேரோட்டி அதிரதனால்  கண்டெடுக்கப்பட்டார். அதிரதனும் அவரது மனைவி ராதாவும்  குழந்தை இல்லாத காரணத்தால் கர்ணனை தங்களின் சொந்த மகனாகவே வளர்த்தனர். கர்ணனுக்கு அவர்கள் வாசுசேனா என்று பெயரிட்டு அழைத்தனர். மேலும், ராதேயன் என்றும் அழைத்தனர். கர்ணன் மற்றும் அவரது வளர்ப்பு பெற்றோர்கள் இடையேயான உறவானது தூய அன்பு, மரியாதை மற்றும் பாசம் ஆகியவற்றால் நிறைந்து இருந்தது.



அதிரன், ராதாவின் சொந்த  மகனாகவே  தனது கடமைகளை விருப்பத்துடன் கர்ணன் செய்துவந்தார். இருப்பினும் அவர் அங்க தேசத்தின் அரசனானது மற்றும் முடிவில் அவரது உண்மையான பிறப்பு பற்றிய ரகசியம் வெளிவந்தது .ஆயினும் கர்ணன் தனது இறப்பு வரையில் அவரது வளர்ப்பு பெற்றோருக்கு உண்மையானவராகவும் விசுவாசமுள்ளவராகவும் இருந்தார்.



கர்ணனுக்கு விருஷாலி மற்றும் பொன்னுருவி என்று இரண்டு மனைவியர் இருந்தனர் பின்னர், துரியோதனனின் வேண்டுகோளுக்கிணங்க சுப்ரியா என்னும் பெண்ணை திருமணம் முடித்தார். சுப்ரியா துரியோதனன் மனைவி பானுமதியின் நெருங்கிய தோழி ஆவார். மூன்று மனைவிகள் மூலம் கர்ணனுக்கு பல மகன்கள் இருந்தனர். அதில் முக்கியமான பத்துபேர்கள் மட்டுமே உலகறியும் வண்ணம் இருந்தனர்.  அவர்களின் பெயர்கள் முறையே விரிஷேசன், சுதாமா, விரிஷகேது, சித்ரசேனா, சத்யசேனா, சுசேனா, சத்ருஞ்சய, திவிபாதா, பனசேனா மற்றும் பிரசேனா. 

மகாபாரத போரில் பாண்டவர்களின் வீரமும், கண்ணனின் சூழ்ச்சியும்  பாண்டவர்களுக்கு பெரிய வெற்றியை தேடித்தந்தது என்றாலும், முடிவில் பாண்டவர்கள் பெற்றது ராஜ்ஜியமாய் இருந்த போதிலும், அவர்கள் இழந்தது ஏராளம்.  ஐந்து புதல்வர்கள், அன்பு மகன் அபிமன்யு, மூத்த சகோதரன் கர்ணன், பிதாமகர் பீஷ்மர், சிறுவயது முதலே வழிகாட்டிய குரு துரோணர், பீமனின் மகன் கடோத்கஜன்,  அர்ஜுனனின் மகன் அரவான்,  என பாண்டவர்களின் இழப்புகள் நீண்டுக்கொண்டே செல்லும். இதில் கர்ணன் இறந்த பிறகு குந்தி வந்து அழுது புலம்பிய பிறகுதான் அவர் தங்களின் மூத்தவன்  என்பதை அறிந்து சொல்லவொண்ணா துயரத்திற்கு ஆளாகினர் பாண்டவர்கள். துரியோதனன்கூட  தன் ஆருயிர் நண்பன் கர்ணன், தன் எதிரிகளுடைய சகோதரன்  என்பதை அறிந்ததும், முன்பே இது தெரிந்திருந்தால் போரிலேயே ஈடுபட்டிருக்க மாட்டேனே! என   தன் நண்பனின் மரணத்தை நினைத்து அழுது துடித்தான்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

2 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

2 hours ago

பெண்களே நீங்க சேலையில ஒல்லியா ஸ்டக்சரா தெரியணுமா? அப்போ இந்த டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க…

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, என்று ஒரு சினிமா பாடலே இருக்கிறது. புடவை கட்டினால் பெண்கள் வழக்கத்தை விட…

2 hours ago

குக் வித் கோமாளியை முதல் எபிசோடில் ஓரங்கட்டிய டாப் குக் டூப் குப்!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார்.…

2 hours ago

தின்பண்ட வியாபாரம்.. வெற்றி கதை?

பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…

5 hours ago

மீனாவால் முகம் மாறிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…

5 hours ago