Categories: CinemaEntertainment

நடிகை கே.ஆர். விஜயா -3

வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.விஜயா செய்துள்ள சாதனைகளை, இதர தமிழ்நடிகைகளால் இன்றளவும் முறியடிக்க இயலவில்லை.

தமிழ்ப்பட நடிகைகளிலேயே, கே.ஆர்.விஜயாதான் அதிக படங்களில் நடித்துள்ளார். தவிர, கதாநாயகியாகவே அதிக படங்களில் நடித்துள்ள நடிகையும் கே.ஆர். விஜயாதான்..திருமணத்திற்குப் பிறகும், மவுசு குறையாமல், அதிக தமிழ்ப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகையும் இவரே.



ஸ்ரீகாந்துடன் பல படங்களில் நடித்த இவர்  ஶ்ரீகாந்த் நினைவுகள் குறித்துப் பேசியதை இந்த பதிவில் பார்க்கலாம்:

“சினிமாவுல அவர் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர். ஒரே காலகட்டத்துல வளர ஆரம்பிச்சோம். பல்வேறு கமர்ஷியல் படங்கள்லயும், புராணப் படங்கள்லயும் சேர்ந்து நடிச்சோம். ஹீரோ, ஹீரோயினா நாங்க இணைஞ்சு நடிக்கல. அந்தக் காலத்துல எங்களுக்கான கேரக்டர் எதுவா இருந்தாலும், அது பேசப்படுமான்னு மட்டுமே பார்ப்போம். அதனால, ஹீரோவா நடிச்சுகிட்டிருந்த ஶ்ரீகாந்த், அதுக்கப்புறமா செகண்டு ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர்னு வித்தியாசமான ரோல்கள்ல தயங்காம நடிச்சார். சினிமாவுல ஏற்ற, இறக்கம்னு மாறுபட்ட அனுபவங்களைப் பார்த்திருந்தாலும், அவரோட நல்ல குணம் மட்டும் எப்போதுமே மாறல. யாரைப் பத்தியும் குறையேதும் சொல்ல மாட்டார்.

தன்னைப் பிரபலப்படுத்திக்கவும், பொதுவெளியில தன்னை முன்னிலைப்படுத்திக்கவும் அவர் பெரிசா விரும்ப மாட்டார். இது பத்தி அவர்கிட்ட கேட்டிருக்கேன். `நடிச்சோமா, போனோமான்னு இருந்தாலே போதும்னு நினைக்குறேன் விஜயாம்மா!’ன்னு சிரிச்சுகிட்டே சொல்லுவார். அவருக்கு ஹியூமர் சென்ஸ் அதிகம். நாகேஷ், வி.எஸ்.ராகவன்னு அவரோட நட்பு வட்டாரத்துல நகைச்சுவை நடிகர்கள்தான் அதிகம் இருந்தாங்க.



அந்த நடிகர்களோடுதான் ஷூட்டிங் ஸ்பாட்ல அதிகமா பேசி சிரிச்சுகிட்டிருப்பார். அவர் என்னைவிட வயசுல மூத்தவர். ஆனா, `தங்கப்பதக்கம்’ படத்துல அவருக்கு அம்மாவா நடிச்சேன். அந்தப் படத்துல நடிக்குறப்போ, `ஆரம்பத்திலிருந்தே நான் உங்களை விஜயாம்மான்னு கூப்பிட்டுப் பழகுனதும் நல்லதா போச்சு’ன்னு சொல்லிச் சிரிக்க வெச்சார்.

சிவாஜி சாருக்கு ஜோடியா அதிக படங்கள்ல நடிச்சது நான்னு சொல்லுவாங்க. ஆனா, ஷூட்டிங்ல மரியாதை நிமித்தமா அவரும் நானும் சில வார்த்தைகள் பேசிப்போமே தவிர, தனிப்பட்ட பழக்கம்னு எங்களுக்குள் பெரிசா எதுவும் இருக்கல. சொல்லப்போனா, இதே அணுகுமுறையிலதான் எங்க தலைமுறை நடிகர்கள் பலரும் இருந்தோம். அதேபோலத்தான் ஶ்ரீகாந்த் கூடவும் நான் அதிகமா பழகல. அவர் நடிக்குறதைக் குறைச்சுகிட்டதுக்குப் பிறகு, திடீர் திடீர்னு எனக்கு போன் செய்வார். `அது வந்து விஜயாம்மா…’ன்னு ஏதோ முக்கியமான விஷயம் சொல்லுற மாதிரியான மாடுலேஷன்ல குரலை உயர்த்துவார். ஏதாச்சும் ஒரு கோயில் லொக்கேஷனைக் குறிப்பிட்டு, `அது எந்தக் கோயில்? அந்தக் கோயிலுக்கு எப்படிப் போகணும்’னு கேட்பார். `இதுக்கா இப்படி ரியாக்‌ஷன் கொடுத்தீங்க?’ன்னு கேட்டுச் சிரிப்பேன்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா- 5

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

2 hours ago

ரயில்களில் வெள்ளை நிற பெட்ஷீட்டுகள் கொடுக்க என்ன காரணம்?

நம் நாட்டில் மக்கள் குறைந்த செலவில்  நீண்ட தூரம் பயணிக்க ரயில்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ரயிலில் அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பான பயணம்…

2 hours ago

வீட்டிலேயே ஹேர் கண்டிஷர் தயாரிப்பது எப்படி?

அனைவருமே கூந்தலை பராமரிக்க பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். கூந்தல் மென்மையாகவும் நீளமாகவும் இருப்பதற்கு கடைகளில் கிடைக்கும் பலவிதமான பொருட்களை…

2 hours ago

விஜய் பெயரை கெடுக்குறதுக்கு த்ரிஷா செய்த வேலையா இது ?

கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்வார்கள். அது இந்த செய்தியில் வர ஒரு சிலருக்கு சரியா பொருந்தும். தளபதி…

2 hours ago

மகாபாரதக் கதைகள்/மகாபாரதம் நடந்தது உண்மைதானா?விளக்கங்கள்-2!

மகாபாரதம் கற்பனை கதை என்று கூறுவது நகைப்புக்குரியது, ஏனெனில் இந்த நூல்கள் கவிதை நடையில் எழுதப்பட்டு உள்ளன. எல்லாவற்றையும் விட…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சுவாமி திருக்கோவில்

தலச்சிறப்பு : ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் அருள்பாலிப்பது சிறப்பு ஆகும்.  கருட சேவை  மஹோத்ஸ்வம்…

5 hours ago