Categories: Samayalarai

கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசாலா

கல்யாண பந்திகளில் பரிமாறப்படும் சில உணவுகள் மிகவும் பிரபலமாக இருக்கும். அதில் முக்கியமான ஒன்று உருளைக்கிழங்கு மசாலா. அவித்த உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி கொண்டு செய்யப்படும் இந்த மசாலாவின் சுவை அருமையாக இருக்கும்.

அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசாலாவை வீட்டிலேயே எளிய செய்முறையில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.



தேவையான பொருட்கள் :

  • உருளைக்கிழங்கு – 3

  • பச்சை பட்டாணி – 1 கப்

  • பெரிய வெங்காயம் – 2

  • பழுத்த தக்காளி – 2

  • மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்

  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

  • கொத்தமல்லி தூள் – 1/2 ஸ்பூன்

  • கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்

  • கடுகு – 1/2 ஸ்பூன்

  • சோம்பு – 1/2 ஸ்பூன்

  • பட்டை துண்டு – 2

  • எண்ணெய் – தேவையான அளவு

  • கருவேப்பிலை – ஒரு கொத்து

  • கொத்தமல்லி இலை – ஒரு கொத்து

  • உப்பு – 1 ஸ்பூன்

அரைக்க தேவையானவை :

  • துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

  • சோம்பு – 1 ஸ்பூன்

செய்முறை விளக்கம் :

  • அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து அதில் சிறிய துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, சிறிதளவு உப்பு மற்றும் அதை வேகவைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

  • பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் 1 சோம்பு சேர்த்து மைய பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.



  • தற்போது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டுக்கொள்ளவும்.

  • கடுகு வெடித்ததும் சோம்பு மற்றும் பட்டை சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

  • பிறகு அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

  • வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.

  • தக்காளி மென்மையாக வதங்கிய பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் மற்றும் அரைத்த தேங்காய் பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

  • பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி கொதிக்க விட வேண்டும்.

  • மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து சிறிது நேரம் சமைக்கவும்.

  • மசாலாக்களுடன் உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி கலந்து தண்ணீர் வற்றி மசாலா பதத்திற்கு வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசாலா சாப்பிட ரெடி.

  • இதை நீங்கள் சாதம், புலாவ், நெய் சோறு, சப்பாத்தி, தோசை மற்றும் பூரியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.



வீட்டுக் குறிப்புகள்

  • புளியை அவ்வபோது கரைத்துகொண்டிருப்போம். இதனால் மீதம் உள்ள புளி வீணாகும். இதனை தவிர்க்க புளி பேஸ்ட் தயார் செய்து வைத்து  கொள்ளலாம்.

  • பூண்டை அவ்வபோது உரித்து கொண்டிருந்தால் நேரம் வீணாகும். ஆகையால் பூண்டை தண்ணீரில் ஊற வைத்து எடுத்தால் எளிதில் வந்து  விடும்.

  • மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.

  • எந்த அரிசியாக இருந்தாலும் 15 நிமிடங்களுக்கு குறையாமல் ஊற வைத்து உலையில் வேகவைத்தால் அது வேகும் நேரம் குறையும்.  எரிபொருள் மிச்சமாகும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-7

தமிழ் திரையுலகம் ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து இதுவரைக்கும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்ற எத்தனையோ கதாநாயகிகளைப் பார்த்திருப்போம். ஆனால்,…

1 hour ago

பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து டிப்ளமோ படிக்கப் போறீங்களா?…

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் மே 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக்…

1 hour ago

ரயில் பயணிகளின் லக்கேஜ்: புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்..

ரயிலில் பயணம் செய்யும்போது, யாராவது தங்கள் லக்கேஜுடன் ஓடிவிட்டால், கேட் திறந்திருப்பதால், பல பயணிகள் இரவில் தூங்குவதில்லை. கேட்டை சுற்றியுள்ள…

1 hour ago

சுசித்ராவின் இரண்டாவது கணவர் யார்? பல உண்மைகள்!

சென்னையில் பிறந்து வளர்ந்து, தன்னுடைய விடாமுயற்சியாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பிரபலமானவர் சுசித்ரா. பாடகி என்பதை தாண்டி,…

1 hour ago

மகாபாரதக் கதைகள்/சகுனி பற்றி கிருஷ்ணரின் விளக்கம்

மகாபாரத போர் முடிந்து அஸ்தினாபுரத்தில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி கொண்டிருந்தத அந்த நேரத்தில் போரில் வீர மரணம் அடைந்த…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்(அ) கங்கைகொண்ட சோழபுரம் கோவில்

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். தன் தந்தையைப்போல மிகச்சிறப்புடன் ஆண்டவன்…

5 hours ago