Categories: CinemaEntertainment

எம்.ஜி.ஆர் பற்றி பாடல் வரிகள் : ரஜினி படத்தில் நடந்த சுவாரஸ்யம்

ரஜினிகாந்த் நடித்த ஒரு படத்தில் இடம்பெற்ற பாடலில் ஒரு வரி எம்.ஜி.அரை குறிக்கும் என்பதால் அதை மாற்ற வேண்டும் என்று படத்தின் இயக்குனர் சொல்ல, கவிஞர் வைரமுத்து அதற்கு விளக்கம் கொடுத்து அந்த வரியை மாற்றாமல் அப்படியோ வைத்துள்ளார்.



இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் – நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் கூட்டணியில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளர். அந்த வகையில் வெளியான ஒரு படம் தான் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில் சௌந்தர்யா, லட்சுமி, ஆகியோருடன் ரம்யா கிருஷ்ணன் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒஹோ ஒஹோ கிக்கு ஏறுதே என்ற பாடல் வெற்றிப்பாடலாக அமைந்தது. வாழ்க்கையின் தத்துவத்தை சொல்லும் இந்த பாடலில் ஒரு சித்தர் பாடுவது போல் இருக்க வேண்டும் என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கவிஞர் வைரமுத்துவிடம் கூறியுள்ளார்.



பாடலுக்கான சூழ்நிலையை சொல்லவில்லை என்றாலும் வைரமுத்து தானே சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டு பாடலை எழுதியிருப்பார். இந்த பாடலில் வரும், ‘’ஜீவன் இருக்குமட்டும், வாழ்க்கை நமக்கு மட்டும் இதுதான் ஞானச்சித்தர் பாட்டு’’ என்ற வரிகள் இருக்கும். இந்த வரிகளில் முதலில் ஞானச்சித்தருக்கு பதிலாக ரஜினி சித்தர் என்று வைரமுத்து எழுதியுள்ளார். ரஜினிகாந்த் அடிக்கடி இமயமலை சென்று சித்தர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தால் அவ்வாறு எழுதியுள்ளார்.

இந்த பாடலை கேட்ட ரஜினிகாந்த், சித்தர் அளவுக்கு என்னை சொல்லாதீர்கள் வரிகளை மாற்றுங்கள் என்று சொல்ல வைரமுத்து இருக்கட்டும் என்று கூறியுள்ளார். ஆனாலும் ரஜினிகாந்த் மாற்றுங்கள் என்று வற்புறுத்தியதால், பாடல் பதிவுக்கு 2 நிமிடங்களுக்கு முன் ரஜினி சித்தர் என்ற வார்த்தை ஞானச்சித்தராக மாறியது. அதேபோல், கம்பங்களி திண்ணவனும் மண்ணுக்குள்ள, தங்க பஸ்பம் திண்ணவனும் மண்ணுக்குள்ள என்று எழுதியிருப்பார்.

இந்த வார்த்தகளை கேட்டக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தங்க பஸ்பம் சாப்பிட்டவர் எம்.ஜி.ஆர் என்று சொல்வார்கள். அவரே மண்ணுக்குள் போய்விட்டார் என்று சொன்னால் சர்ச்சையாகும் என்று கூறியுள்ளார். ஆனால் எம்.ஜி.ஆர் தான் தங்க பஸ்பம் சாப்பிட்டதாக எங்கும் குறிப்பிடவில்லை. அதனால் இந்த வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தாது என்று விளக்கம் அளித்துள்ளார். அதன்பிறகு இந்த வார்த்தை மாற்றாமல் பாடல் பதிவு நடைபெற்றுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மனோ பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/மகாபாரதம் நடந்தது உண்மைதானா?விளக்கங்கள்-1

மகாபாரதம் என்பது பண்டைய இந்தியாவின் பழம்பெரும் காவியம் ஆகும். கிமு 9 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திர இராச்சியத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்…

2 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு சாய் பாபா திருக்கோவில்

தலச்சிறப்பு : இக்கோவிலில் துனி என்கிற அணையாத புனித நெருப்பு உள்ள இடம் நவீன மயமாக்கப்பட்டு உள்ளது. மற்ற பாபா…

2 hours ago

நாள் உங்கள் நாள் (16.05.24) வியாழக்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 16.05.24 வியாழக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 3 ஆம்…

2 hours ago

இன்றைய ராசி பலன் (16.05.24)

சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள மூலம், பூராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம்…

2 hours ago

திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்வது பற்றி மனம் திறக்கும் கோவை சரளா.!

தமிழ் சினிமாவில் வெகு சில பெண் நகைச்சுவை கலைஞர்கள் மட்டுமே கோலோச்சியுள்ளனர். அப்படி காமெடியில் பின்னி பெடலேடுத்த மனோரம்மாவிற்கு பிறகு,…

14 hours ago

அதிர்ச்சியில் பாக்கிய – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி உட்கார்ந்து…

14 hours ago