வீட்டில் வளர்க்க வேண்டிய மற்றும் வளர்க்க கூடாத செடிகள்

இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில்
பதியம் செய்த செடி வகைகளையும் வளர்த்து வருகின்றனர்.



மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள்
வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி
நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு , கடன் தொல்லை , மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும்.

இதுபோன்ற சூழ்நிலை களில் பாதிப்படைவோர் தனதுகிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள்.




எனவே இதில் கண்ட செடி,மரங்களை உடனே அகற்றி நலம் பெறுங்கள்.

மேற்கண்ட செடி , மரங்களின் வகைகள் :

“1.பருத்தி,
2.அகத்தி,
3.பனை,
4.நாவல்,
5.அத்தி,
6.எருக்கு,
7.வெள்ளெருக்கு
8.புளியமரம்,
9.கருவேலன்,
10.முருங்கை,
11,கல்யாண முருங்கை,
12.கள்ளி
13.கருவூமத்தை,
14.இலவம்,
15.வில்வம்,
16.உருத்திராட்சம்,
17.உதிரவேங்கை”

இந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது.



வேப்ப மரம், தென்னைமரம், மாமரம், பலாமரம், , கொன்றைமரம், நார்த்தை மரம், மாதுளை மரம், துளசிச்செடிகள் மற்றும் கொடிவகைகளில் மல்லிகை மற்றும் முல்லை, மணிபிளான்ட் கொடிவகைகளை தாரளமாக வளர்க்கலாம்.

இதேபோல் கொடிவகைகளில் பேய்பீர்கன், அவரைசெடிகளும், பாகற்செடிகளும் எக்காரணம் கொண்டும் வீட்டில் வளர்க்க கூடாது.

முள்உள்ள செடிகளையும், மரங்களையும் வீட்டில் வளர்க்க கூடாது என்றாலும், ஓரிரு செடிகளுக்கும் மரத்திற்கும் சாஸ்திர விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் முள் உள்ள வெள்ளைவேலான் மரம் மற்றும் எலுமிச்சை செடி மற்றும் செயற்கை இல்லாத பன்னீர் புஷ்பம் சார்ந்த செடிகளை வளர்க்கலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

1 hour ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

2 hours ago

நாள் உங்கள் நாள் (20.05.24) திங்கட்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 20.05.24 திங்கட்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 7 ஆம்…

2 hours ago

இன்றைய ராசி பலன் (20.05.24)

இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி 7, திங்கட் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.…

2 hours ago

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

13 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

13 hours ago