விதை மூலம் செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி

பலருக்கும் வீட்டில் செடிகள் வளர்ப்பது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் பூச்செடிகளை தான் அதிகம் வளர்ப்பார்கள். சில பேர் எந்த செடியை வைத்தாலும் உடனே வளர ஆரம்பித்து விடும். ஆனால் சில பேர் வாங்கி வந்த செடியை பார்த்து பார்த்து பராமரிப்பார்கள். அவை வளர்ச்சி அடைந்திருக்காது. வாசல் புறம் அல்லது பின்புறம் செம்பருத்தி செடிகளை வளர்ப்பார்கள். உங்களுக்கு செம்பருத்தி செடி வளர் வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் அதனை எப்படி வளர்ப்பது எப்படி என்று தெரியவில்லையா.! அப்போ இந்த பதிவிற் தொடர்ந்து படியுங்கள். ஏனென்றால் இந்த பதிவில் விதையிலிருந்து செபருத்தி செடி வளர்ப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

 



தொட்டி:

விதையிலிருந்து செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

முதலில் செம்பருத்தி விதைகளை தண்ணீரில் சேர்த்து  8 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரைக்கும் அறை வெப்பநிலையில் ஊற வைக்க வேண்டும்.

அடுத்து விதையை பதியம் செய்வதற்கு தொட்டி அல்லது பானையை எடுத்து கொள்ள வேண்டும். இதில் செம்மண் அல்லது உங்கள் வீட்டில் இருக்கின்ற மண்ணை அந்த தொட்டியில் சேர்க்க வேண்டும். அதன் பிறகு இதில் தேங்காய் நார் மற்றும் காய்கறி கழிவுகள் போன்றவற்றை சேர்க்க வேண்டும். அதன் பிறகு  இந்த தொட்டியில் கால் அங்குல ஆழத்தில் விதைகளை நட்டு மேலே மண்ணை போட்டு மூடி விட வேண்டும்.

சூரிய ஒளி:

இதில் தண்ணீர் ஊற்றி சூரிய ஒளி படும் இடத்தில் 6 நாட்கள் முதல் 8 நாட்கள் வரைக்கும் அப்படியே வைக்க வேண்டும். 8 நாட்கள் கழித்து பார்த்தால் செடி முளைத்து வந்திருக்கும். இவை அப்படியே 45 நாட்களுக்கு இருக்கட்டும். தினமும் தண்ணீர் மட்டும் ஊற்றி வாருங்கள்.



நீங்கள் 45 நாட்கள் கழித்து வேறொரு பெரிய தொட்டிக்கு மாற்றுவதாக இருந்தால் மாற்றி கொள்ளலாம். மாதத்திற்கு ஒரு முறை மாட்டு சாணம், காய்கறி கழிவுகள் போன்றவற்றை சேர்த்து மண்ணை கிளறி விட வேண்டும். தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். முக்கியமாக சூரிய ஒளிப்படும் இடத்தில் இருக்க வேண்டும்.

செம்பருத்தி பூ செடியினை நீங்கள் நடவு செய்த பிறகு அதற்கு சரியான முறையில் தண்ணீர் விட்டு பராமரித்து வர வேண்டும். அதன் பிறகு அந்த செடியில் பூச்சிகள் எதுவும் தாக்காமல் இருக்க வெந்தய பொடியினை அதற்கு உரமாக கொடுப்பது நல்லது.ஏனென்றால் வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் ஆனது செடிக்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்கும்.



பூக்கள் அதிகம் பூக்க:

செடியில் பூக்கள் அதிகாமாக பூக்க முதலில் வெந்தயக்கீரையினை வாங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த கீரையினை 2 அல்லது 3 நாட்கள் வரை வெயிலில் காய வைத்து விட வேண்டும்.

இந்த கீரை நன்றாக காய்ந்த பிறகு அதில் உள்ள காம்பினை எல்லாம் நீக்கி விட்டு ஒரு 50 கிராமை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது அந்த கீரையில் 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 1 நாள் முழுவது ஊற வைத்து விடுங்கள்.

மறுநாள் காலையில் இந்த தண்ணீரில் இருக்கும் சக்கையினை வெளியேற்றி விட்டு தண்ணீரை மட்டும் செடிகளுக்கு உரமாக கொடுத்து வந்தாலே போதும் பூக்காத செம்பருத்தி பூ செடியில் பூக்கள் பூத்து குலுங்க ஆரம்பிக்கும்.

அதன் பிறகு 6 மாதம் கழித்து பார்த்தால் செடி நன்றாக வளர்ந்திருக்கும். விதையிலிருந்து செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி என்று அறிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். வேறொரு பதிவில் சந்திக்கின்றேன் நன்றி.!



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

28 mins ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

30 mins ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

32 mins ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

36 mins ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

4 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

4 hours ago