Categories: CinemaEntertainment

விஜய்யின் கார் கண்ணாடி சுக்குநூறாக உடைப்பு..

விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, துருக்கி போன்ற நாடுகளில் நடத்தப்பட்டது. மேலும் விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை இலங்கையில் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சமீபத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருந்தார். இதனால் அரசியலில் ஏதாவது பின் விளைவை சந்திக்க கூடும் என்பதால் கேரளாவில் எடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று தனி விமானம் மூலம் விஜய் திருவனந்தபுரம் வந்தடைந்தார். அதுவும் காவலன் படத்தின் படப்பிடிப்புக்கு கேரளா வந்த விஜய், அதன் பின்பு 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளார். ஆகையால் நேற்று காலை முதலே விஜய்யின் ரசிகர்கள் விமான நிலையத்தை மையம் கொண்டு இருந்தனர்.



வழி நெடுக விஜய்க்கு வரவேற்பு

இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்த விஜய் ஹோட்டல் செல்லும் வரையில் வழி நெடுகிலும் ரசிகர் கூட்டம் அலைமோதியது. இதனால் காரின் மேல் கண்ணாடியை திறந்து ரசிகர்களின் வரவேற்பை விஜய் ஏற்றுக்கொண்டார்.

அப்போது ஆர்ப்பரித்த ரசிகர்களால் விஜய்யின் கார் கண்ணாடி சுக்குநூறாக உடைக்கப்பட்டு உள்ளது. அதுவும் தளபதியே மயிரிழையில் உயிர் தப்பும் அளவிற்கு கூட்ட நெரிசலில் சிக்கி இருக்கிறார். அதன் பிறகு விஜய்யின் கார் எந்த அளவுக்கு சேதமாகி உள்ளது என்ற வீடியோ ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டை போலவே கேரளாவில் விஜய்க்கு ரசிகர் கூட்டம் பெரிதாக உள்ளது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் கேரளாவிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முன்னோட்டமாக கூட கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடத்த திட்டம் இருந்திருக்கலாம்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

8 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

8 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

8 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

8 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

12 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

12 hours ago