Categories: Samayalarai

ரோட்டு கடை தண்ணி சட்னி !

வீட்டில் எப்போதுமே நாம் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என செய்வது வழக்கம். ஆனால் இந்த முறை இங்கே குறிப்பிட்டுள்ள படி தேங்காய் சேர்க்காமல் தண்ணி சட்னி செய்து பாருங்கள் இட்லி, தோசையுடன் சேர்த்து தொட்டு சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.



தேவையான பொருட்கள் :

சட்னி அரக்க தேவையானவை :

  • சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன்

  • பெரிய வெங்காயம் – 1

  • பச்சை மிளகாய் – 10

  • புளி – அரை நெல்லிக்காய் அளவு

  • பூண்டு – 3 பல்

  • இஞ்சி – சிறிய துண்டு

  • பொட்டுக்கடலை – 50 கிராம்

  • கல் உப்பு – சுவைக்கேற்ப

  • புதினா இலை – சிறிதளவு

  • கொத்தமல்லி இலை – சிறிதளவு

  • தண்ணீர் – தேவைக்கேற்ப



தாளிக்க தேவையானவை :

  • பெரிய வெங்காயம் – 1/2

  • தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

  • காய்ந்த சிகப்பு மிளகாய் – 3

  • கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

  • வெந்தயம் – 1 டீஸ்பூன்

  • சீரகம் – 1/2 டீஸ்பூன்

  • பெருங்காய தூள் – 1/2 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை – சிறிதளவு

  • உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை குறைத்து அதில் சீரகம், சிறிய இஞ்சி துண்டு, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.



பிறகு அதனுடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் சிறிதளவு புளி, புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் அடுப்பை அணைத்து அவற்றை ஆறவிடவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் போட்டு அதனுடன் பொட்டுக்கடலை, தேவைக்கேற்ப கல் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக மசிய அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.

பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு போட்டு கொள்ளவும்.

அனைத்தும் நன்றாக சிவந்தவுடன் சிறிதளவு பெருங்காய பொடி போட்டு கலந்து அதனுடன் பொடியாக நறுக்கிய பாதி பெரிய வெங்காயம், இரண்டாக கிள்ளிய சிகப்பு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

வெங்காயம் சிவந்தவுடன் கறிவேப்பிலை போட்டு கலந்து அடுப்பின் தீயை குறைத்து அதில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள சட்னியை அதில் சேர்த்து குறைந்த தீயில் சட்னி சூடாகும் வரை விடாமல் கிளறி விட்டு இறக்கினால் சுவையான தண்ணீர் சட்னி ரெடி..

விளம்பரம்

இதை தோசை, இட்லியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவை அப்படியிருக்கும்.



வீட்டுக் குறிப்பு

  • மீதமான தேங்காய் துருவலை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • தோசை மாவில் சிறிதளவு சீரகத்தை கைகளால் தேய்த்து போட்டால் மணமாக இருக்கும்.

  •  உளுந்து வடைக்கான மாவில் சிறிதளவு உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து போட்டால் எண்ணெய் குடிக்காமல் வரும், சுவையும் வித்தியாசமாக இருக்கும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-6

தமிழ் திரையுலகில் வாழ்ந்த‌ காலமெல்லாம் ஒரு நடிகன் நிலைப்பது அரிது, நடிகை நிலைப்பது அதை விட அரிது , வெகு…

2 mins ago

ஃப்ரெஷ் ஜூஸ் குடிப்பதால் பிரச்சினைகள் ஏற்படுமா..?ஏன்?

பழச்சாறுகளை நீங்கள் அருந்தியதும் உங்களுடைய ரத்தத்தில் உடனடியாக சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும். இது நீங்கள் சோடா குடிப்பதற்கு சமம். இதனால்…

5 mins ago

ஆண்களே! உங்களுக்கு ஹீரோ மாதிரி அழகான சருமம் வேணுமா?

பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஒரு கனவாகும். நாள் முழுவதும் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும்…

7 mins ago

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை (சித்ரா) இறப்பிற்கு காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த நெருங்கிய தோழி

விஜே சித்ரா தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று வாய்ப்புக்காக பல நேரங்களில் போராடி இருக்கிறார். ஆனால் அப்பொழுதெல்லாம்…

11 mins ago

மகாபாரதக் கதைகள்/யுதிஷ்டிரர் நீதி கதை

மகாபாரதத்தில் வரும் உன்னதமான கதாபாத்திரங்களில் ஒருவன் யுதிஷ்டிரன் என்னும் தர்மபுத்திரன்…. அவனை தரும தேவதையின் அம்சம்  என்பார்கள். எதன் பொருட்டும்…

4 hours ago

மாவட்ட கோவில்கள்:ஆலந்துறையார் திருக்கோவில்

சுவாமி : ஆலந்துறையார், வடமூல நாதர், யோகவனேஸ்வரர். அம்பாள் : அருந்தவ நாயகி, யோகத பஸ்வினி, மகாதபஸ்வினி. தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், பரசுராம…

4 hours ago