Categories: Beauty Tips

முகப்பரு தழும்புகள் மறைய இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 3 முறை போடுங்க…

பெண்கள், ஆண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஒரு பொதுவான அழகு பிரச்சனை தான் முகப்பரு. எப்போது முகத்தில் உள்ள சருமத் துளைகளில் அழுக்குகள் தேங்கி அடைப்பு ஏற்படுகிறதோ, அப்போது சருமத்தில் முகப்பரு வரத் தொடங்குகிறது. இப்படி வரும் முகப்பருக்கள், அவை போகும் போது கருமையான தழும்புகளை விட்டுச் செல்லும். இந்த தழும்புகள் முக அழகை கெடுக்கும் வகையில் இருக்கும். சொல்லப்போனால், இந்த தழும்புகள் ஒருவரது தன்னம்பிக்கையை இழக்கவும் செய்யும்.



நீங்களும் இப்படி முகப்பரு தழும்புகளைக் கொண்டிருக்கிறீர்களா? இந்த முகப்பரு தழும்புகளை எப்படி போக்குவது என்று தெரியாமல் உள்ளீர்களா? இதை மறைப்பதற்காகவே தினமும் பல க்ரீம்களை வாங்கி பூசிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இனி கவலைப்படாதீர்கள். ஏனெனில் கீழே முகத்தின் அழகைக் கெடுக்கும் முகப்பரு தழும்புகளைப் போக்கும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தவறாமல் பயன்படுத்தி வந்தால், முகப்பரு தழும்புகளை விரைவில் போக்கலாம்.



1. சந்தனம் + ரோஸ் வாட்டர் முகத்தின் அழகைக் கெடுக்கும் கருமையான முகப்பரு தழும்புகளை கொண்டுள்ளீர்களா? அப்படியானால் சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் போட்டால், விரைவில் மறையச் செய்யலாம். அதற்கு சந்தன பவுடரை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் அல்லது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 2-5 நிமிடம் ஊற வைத்து வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

2. கற்றாழை + மஞ்சள் முகத்தில் முகப்பரு தழும்புகள் அசிங்கமாக இருப்பதோடு, முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா? அப்படியானா ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்து, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

3. ஜாதிக்காய் பொடி + பால் ஜாதிக்காய் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் முகப்பருக்கள் வருவதைத் தடுப்பதோடு, முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை விரைவில் போக்கும் மற்றும் நல்ல பொலிவான சருமத்தைப் பெற உதவி புரியும். ஏனெனில் ஜாதிக்காயில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன. இவை சருமத்தில் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றும். அதற்கு ஜாதிக்காய் பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.



4. பாதாம் பவுடர் + பால் பாதாம் பவுடருடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாகவும், பளிச்சென்று பிரகாசமாகவும் இருப்பதோடு, முகப்பரு தழும்புகளையும் விரைவில் மறையச் செய்யும். அதுமட்டுமின்றி, இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள முதுமைக் கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்க உதவும். எனவே நீண்ட நாட்கள் இளமையாக காட்சியளிக்க விரும்பினால் பாதாம் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துங்கள்.

5. கும்குமாதி தைலம் கும்குமாதி தைலம் முகப்பருக்களைக் குறைக்கவும், கருவளையங்களை போக்கவும், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு தழும்புகளை போக்கவும் உதவுகிறது. மேலும் இந்த தைலம் சருமத்தின் அமைப்பை மேம்படுத்துவதோடு, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. அதற்கு 3-4 துளிகள் குங்குமாதி தைலத்தை எடுத்து, இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை முகத்தைக் காணலாம்.

6. தேன் + எலுமிச்சை சாறு பொதுவாக எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சரும நிறத்தை மேம்படுத்துகிறது. அதேப் போல் தேன் சரும அமைப்பை மென்மையாக்க உதவுகிறது. எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்ற மிகச்சிறந்த ஒரு ஃபேஸ் பேக் என்றால் அது தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக் தான். இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்குவதோடு, முகப்பரு வருவதையும், அதன் தழும்புகளையும் போக்க உதவுகிறது.

அதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-4

கோலிவுட்டின் நடிப்பு சக்கரவர்த்தியான சிவாஜி கணேசன் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு நல்ல மனிதரும் கூட. அதேபோல் தான் சிவாஜியுடன் நிறைய…

1 hour ago

திருமண உறவில் எழும் சிக்கல்களை வெற்றிகரமாக சமாளிப்பதற்கான டிப்ஸ் இங்கே..!

சில திருமண உறவுகள் ஏன் வலுவாக இருக்கின்றன, பல திருமண உறவுகள் ஏன் கரடுமுரடான பாதையை போல் பல பிரச்சனைகளுடன்…

1 hour ago

கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்க இந்த பொடியை இப்படி பயன்படுத்துங்க

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து துறைகளிலும் கணினியின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. அதனால் அனைவருமே கணினியை பயன்படுத்தி தான் வேலை…

1 hour ago

தமிழ்த்திரையில் அதிக வசூலை அள்ளிய முதல் படம் இதுதான்!…

  தமிழ்த்திரை உலகம் பல விசித்திரமான சம்பவங்களை சந்தித்துள்ளது. தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் தான் வசூலை வாரிக்குவிக்கின்றன. தற்போது…

1 hour ago

மகாபாரதக் கதைகள்/கணிகைப் பெண்ணின் பக்தி

காந்தியடிகளின் பிரார்த்தனைக் கீதம். “ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம்” என்பது கணந்தோறும் ராம நாம ஜபம் செய்து…

5 hours ago

மாவட்ட கோவில்கள்: அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

சுவாமி : சுப்ரமணிய சுவாமி. தலச்சிறப்பு : சுப்ரமணிய சுவாமி (முருகன்) தமிழர்களால் தமிழ்க் கடவுள் என்றும்  அழைக்கப்படுகிறார். முருகப்பெருமான் சிவன் -…

5 hours ago