மஞ்சுமல் பாய்ஸ் விமர்சனம்..

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் சினிமா உள்ளிட்ட பான் இந்தியா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. கோலிவுட்டில் வாரம் 4 மொக்கைப் படங்கள் இந்த ஆண்டு வெளியாகி வரும் நிலையில், கேரளாவில் ஒவ்வொரு வாரமும் ஒரு தரமான சம்பவத்தை அந்த திரையுலகம் கொடுத்து வருவது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் தியேட்டருக்கு உடனே சென்று படத்தை பார்த்தே தீர வேண்டும் என தூண்ட வைக்கிறது.



இந்த ஆண்டு தமிழில் வெளியான கேப்டன் மில்லர், அயலான், சிங்கப்பூர் சலூன், லால் சலாம், இந்த வாரம் வெளியான வித்தைக்காரன், பாம்பாட்டம் படங்கள் எல்லாம் ரசிகர்களை பாடாய் படுத்தி வரும் நிலையில், பிரேமலு, பிரம்மயுகம் படங்களை தொடர்ந்து அடுத்த 100 கோடி வசூல் செய்யும் மலையாள படமாக மஞ்சுமல் பாய்ஸ் மாறியிருக்கிறது. அதன் முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க.

குணா குகை தான் கதை: சந்தான பாரதி இயக்கத்தில் 1991ம் ஆண்டு வெளியான குணா படத்தில் கொடைக்கானலில் ஒரு குகையில் படப்பிடிப்பை கமல்ஹாசன் எடுத்திருப்பார். “கண்மணி அன்போடு” பாடலும் அந்த பாடலில் வரும் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல” என்கிற வசனமும் அந்த பாடலை எப்போது பார்த்தாலும் மெய்சிலிர்க்க வைத்து விடும். அந்த குணா குகைக்கு செல்லும் நண்பர்கள் அங்கே சிக்கிக் கொண்டு தப்பிக்கும் சர்வைவர் த்ரில்லர் கதையாகவே இயக்குநர் சிதம்பரம் இந்த மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். 2006ம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை கதையை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.



கோவாவுக்கு பிளான் போட்டு கொடைக்கானலுக்கு: எல்லா நட்பு க்ரூப்பிலும் நண்பர்கள் கோவாவுக்கு பிளான் போடுவதும், கடைசியில் மெரினா பீச்சுக்கு கூட சிலர் வராமல் போவதுமாகத்தான் இருக்கும். அதே போல ஒரு கதையாகவே இந்த படம் உருவாகி இருக்கிறது. கேரளவில் எர்ணாகுளம் அருகேயுள்ள மஞ்சும்மல்லைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற பெயரில் கிளப் ஒன்றை அமைத்து ஜாலியாக டூர் செல்ல திட்டமிடுகின்றனர். முதலில் கோவாவுக்கு செல்ல பிளான் போடும் அவர்கள் பட்ஜெட் காரணமாக கடைசியில் கொடைக்கானலுக்கு செல்கின்றனர்.

பிளஸ்: கொடைக்கானலுக்கு செல்லும் அனைவரையும் குணா குகை என ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால், நாம் பார்ப்பது குணா குகையே அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், தடை செய்யப்பட்ட அந்த பகுதிக்குள் யாரும் போக மாட்டார்கள். அந்த தடை செய்யப்பட்ட ரிஸ்க்கான பகுதிக்குள் சென்று ஒரிஜினல் குணா குகையை பார்க்க வேண்டும் என விபரீத முடிவை எடுத்துச் செல்லும் நண்பர்கள் 40வது நிமிடத்தில் அந்த இடத்தில் சிக்கிக் கொள்ள அந்த சீன் முதல் இறுதி காட்சி வரை தியேட்டரில் படம் அனல் பறக்கிறது. படத்தில் எது ஒரிஜினல் குகை, எது செட் என்றே தெரியாத அளவுக்கு கலை இயக்குநர் கலக்கி இருக்கிறார். புரொடக்‌ஷனும் சரியான பட்ஜெட்டை கச்சிதமாக ஒதுக்கி உள்ளனர். அதன் பலனைத் தான் தற்போது சர்வதேச அளவில் அறுவடை செய்து வருகின்றனர். குணா படத்தில் இடம்பெற்ற “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல” என்கிற காட்சியும் பக்காவாக இந்த படத்தில் இயக்குநர் பொருத்தி மாஸ் காட்டுகிறார்.



மைனஸ்: வழக்கமான சர்வைவர் படம் தானே என நினைக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் பெரிதாக கவனத்தை ஈர்க்குமா என்பது சந்தேகம் தான். ஆனால், ஏகப்பட்ட நாஸ்டால்ஜிக்கான விஷயங்களையும் படத்திற்கு போடப்பட்டுள்ள உழைப்பும் மெனக்கெடலும் நிச்சயம் தியேட்டரில் சென்று பார்த்தால் தான் பிரம்மிப்பை ஏற்படுத்தும். படம் ஆரம்பித்து பொறுமையாக மலையாள படங்களுக்கே உரித்தான பாணியில் ஸ்லோவாக செல்வது சில இடங்களை கடுப்பை ஏற்படுத்தலாம். ஆனால், படம் ஒரு இடத்தில் ஸ்பீடு காட்டத் தொடங்கியதும் கடைசி வரை பதை பதைப்புக்கு பஞ்சமே இருக்காது. ஓடிடியில் வரும் வரை வெயிட் பண்ணாமல் உடனே தியேட்டரில் பார்க்க ஒரு வொர்த்தான படம் தான் இந்த மஞ்சுமல் பாய்ஸ்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

வேலையை விட்டு நர்சரி தொடங்கியவரின் ஆண்டு வருமானம் ரூ.2 கோடி

மாதம் பிறந்தால் சுளையாக 3 லட்சம் ரூபாய் கைக்கு வந்து சேரும், இருந்தாலும் இந்த வேலையை விட்டுவிட்டு பாவ்சாஹேப் பூக்கள்…

22 mins ago

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா கொடுத்த காதல் கடிதத்துடன்…

23 mins ago

நடிகை மனோரமா-7

தமிழ் திரையுலகம் ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து இதுவரைக்கும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்ற எத்தனையோ கதாநாயகிகளைப் பார்த்திருப்போம். ஆனால்,…

3 hours ago

பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து டிப்ளமோ படிக்கப் போறீங்களா?…

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் மே 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக்…

3 hours ago

ரயில் பயணிகளின் லக்கேஜ்: புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்..

ரயிலில் பயணம் செய்யும்போது, யாராவது தங்கள் லக்கேஜுடன் ஓடிவிட்டால், கேட் திறந்திருப்பதால், பல பயணிகள் இரவில் தூங்குவதில்லை. கேட்டை சுற்றியுள்ள…

3 hours ago

சுசித்ராவின் இரண்டாவது கணவர் யார்? பல உண்மைகள்!

சென்னையில் பிறந்து வளர்ந்து, தன்னுடைய விடாமுயற்சியாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பிரபலமானவர் சுசித்ரா. பாடகி என்பதை தாண்டி,…

3 hours ago