Categories: Samayalarai

குழந்தைகளுக்கு ஜவ்வரிசி வெச்சு சூப்பரான ஸ்வீட் செய்து கொடுங்க!

மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சத்தான, அதே சமயம் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா?அப்படியானால் அந்த ஜவ்வரிசியைக் கொண்டு ஒரு அருமையான ஸ்வீட் செய்து கொடுங்கள். அதுவும் தேங்காயை உள்ளே வைத்து உருண்டை பிடித்து, வேக வைத்து, சர்க்கரை பாகுவில் ஊற வைத்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களின் பசியும் அடங்கும்.

கீழே ஜவ்வரிசி உருண்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.



தேவையான பொருட்கள்:

* ஜவ்வரிசி – 200 கிராம்

* சுடுநீர் – தேவையான அளவு

* உப்பு – 1/4 டீஸ்பூன்

உள்ளே வைப்பதற்கு…

* தேங்காய் – 1/4 மூடி

* ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்

* சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை பாகுவிற்கு…

* சர்க்கரை – 200 கிராம்

* தண்ணீர் – தேவையான அளவு

* ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்

 

செய்முறை விளக்கம் :

* முதலில் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு, சுடுநீர் சேர்த்து கரண்டியால் கிளறி, அத்துடன் சிறிது உப்பு தூவி நன்கு கிளறி, 2 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் தேங்காயை எடுத்து துருவிக் கொள்ள வேண்டும்.

* பின் துருவிய தேங்காயை கிண்ணத்தில் எடுத்து, அத்துடன் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.



* 2 மணிநேரம் ஆன பின், ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை கையால் லேசாக பிசைந்து, பின் சிறிது ஜவ்வரியை எடுத்து அதை தட்டையாக தட்டி, அதன் நடுவே சிறிது தேங்காய் கலவையை வைத்து மூடி உருண்டையாக பிடித்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் ஒரு 6-7 ஜவ்வரிசி உருண்டைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். உருண்டை பிடிக்கும் போது அதிகமாக அழுத்தம் கொடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் கல் போன்று இருக்கும்.

* பின்பு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி இந்த உருண்டைகளை உள்ளே வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் சர்க்கரை மற்றும் பாகுவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து, சர்க்கரையை கரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஜவ்வரிசி வெந்ததும், அந்த உருண்டைகளை எடுத்து சர்க்கரை பாகுவில் போட்டு, 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இந்த ஜவ்வரிசி உருண்டையை பரிமாறும் போது, மேலே சிறிது சர்க்கரை பாகுவை ஊற்றி பரிமாறுங்கள். இப்போது ஜவ்வரிசி உருண்டை தயார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

2 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

2 hours ago

அழகிய காஷ்மீரை 6 நாள் குடும்பத்தோடு சுற்றிப் பார்க்கலாம்.. எவ்வளவு தெரியுமா?

ஐஆர்சிடிசி காஷ்மீர் டூர் பேக்கேஜை பயணிகளுக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த டூர் பேக்கேஜின் பயணம் சண்டிகரில் இருந்து தொடங்கும். ஐஆர்சிடிசியின்…

2 hours ago

உங்க நட்புக்கு நா பலிகிடாவா? கதறும் சுசித்ரா

சாதுமிரண்டா காடு கொள்ளாது என்று சொல்லுவாங்க, அப்படித்தான் இப்போது பாடகி சுசித்ரா பொங்கி எழுந்து கொண்டிருக்கிறார். பேச வேண்டிய நேரத்தில்…

2 hours ago

சிறுதானியத்தில் ஐஸ்கிரீம் : ஸ்ரீ மில்லட் ஐஸ்கிரீம்ஸ் சாதனை படைத்தது எவ்வாறு?..!

பிரபு வேணுகோபால், சசிதர், அருண் பிரகாஷ், பார்கவ் ஆகிய நான்கு பேரும் நல்ல நண்பர்கள். வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் தரும்…

5 hours ago

ரோகினி கொடுத்த வார்னிங் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின்…

5 hours ago