Categories: Samayalarai

காலிஃப்ளவர் மல்லி ப்ரையை எப்படி செய்யணும் தெரியுமா?

மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது ஏதாவது சூடாகவும், காரசாரமாகவும் சாப்பிட விரும்புவீர்களா? எப்போதும் மாலையில் பஜ்ஜி, போண்டா, வடை என்று தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் அந்த காலிஃப்ளவரைக் கொண்டு செஃப் வெங்கடேஷ் பட் டின் சிக்னேச்சர் ரெசிபியான காலிஃப்ளவர் கொத்தமல்லியை செய்யுங்கள். இந்த காலிப்ளவர் மல்லிகே மாலை வேளையில் சாப்பிட ஏற்ற அருமையான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.



உங்களுக்கு செஃப் வெங்கடேஷ் பட்டின் ஸ்பெஷல் ரெசிபியான காலிஃப்ளவர் மல்லி ப்ரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் வெங்கடேஷ் பட்டின் ஸ்பெஷல் ரெசிபியான காலிஃப்ளவர் ப்ரை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* காலிஃப்ளவர் – 1 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்



* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

* அரைத்த விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* கடலை மாவு – 3/4 டீஸ்பூன்

* சோள மாவு – 3/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு

தேவையான அளவு அரைப்பதற்கு…

* கொத்தமல்லி – 1/2 கட்டு

* பச்சை மிளகாய் – 2

* பூண்டு – 4 பல்

* தண்ணீர் – சிறிது



செய்முறை விளக்கம் :

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதை இறக்கி துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவரைப் போட்டு 2 நிமிடம் ஊற வைத்து, பின் காலிஃப்ளவரை எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டுப் கொள்ள வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில் கொத்தமல்லி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு காலிப்ளவருடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, சுவைக்கேற்ப உப்பு, அரைத்த கொத்தமல்லி விழுது, சோள மாவு, கடலை மாவு சேர்த்து நன்கு பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள காலிஃப்ளவரைப் போட்டு, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான காலிப்ளவர் மல்லிகே அல்லது காலிப்ளவர் கொத்தமல்லி தயார்.



வீட்டுக் குறிப்புகள்:

  • எலுமிச்சை சாதம் செய்யும்போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால்  சுவையாகவும், மாறுதலாகவும் இருக்கும்.

  • தேங்காய் சாதம், புளி சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதங்களுக்கு முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துச் சேர்த்தால் வாசனை தூக்கும்,  பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நண்பரை திருமணம் செய்த சன்டிவி சீரியல் நடிகை

சன்டிவியின் வானத்தைப்போல சீரியலில் துளசி கேரக்டரில் நடித்து வந்த நடிகை சுவாதி தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்துகொண்ட…

8 hours ago

இந்த வார சின்னத்திரை சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு டிவி சேனல்களும் வாரத்தின்…

8 hours ago

‘உயிர் தமிழுக்கு’ திரைப்பட விமர்சனம்

கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார். அவருக்காக நேரடியாக…

8 hours ago

முலாம்பழ ஐஸ்கிரீம்!

கடையில் மண் குடுவையில் ஐஸ்கிரீம் வாங்கி சுவைத்தவர்கள் நிறைய பேர்! ஆனால் குடும்பத்திற்கு எத்தனை வாங்கிச் செல்வது என யோசிப்பதுண்டு.…

9 hours ago

உடலென நான் உயிரென நீ-8

8 மதுரவல்லி வேகமாக உள்ளறைக்கு போய் மறைந்து கொண்டாள் . இதோ இந்த ஆளரவமற்ற தோப்பில் தனியான வீட்டில் அவனோடு…

12 hours ago

அடுத்து என்ன படிக்கலாம் குழப்பமா? அப்போ உடனே இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்க…

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கான கல்லூரி அட்மிஷன்களும் தற்போது தொடங்கி உள்ளது.…

12 hours ago