Categories: CinemaEntertainment

கமல் தற்போது வரை இந்த நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கவே இல்லை.. ஏன் ?

உலகநாயகன் கமலஹாசனை பொறுத்த வரைக்கும் திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் முதல் ஆளாக நிற்பவர். அப்படிப்பட்ட கமல், தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களாக இருந்த இந்த ஐந்து பேருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை. அந்த ஐந்து பேர் யார் என்று பார்க்கலாம், அவர் ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற காரணத்தை இந்த செய்தியின் முடிவில் பார்க்கலாம்.



ரகுவரன்: வில்லனாக நடித்து சூப்பர் ஸ்டாராக தமிழ் மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் தான் ரகுவரன். ரகுவரனுக்கு முதலில் நாயகன் படத்தில் நாசர் நடித்த கேரக்டருக்கு வாய்ப்பு கிடைத்தது. ரகுவரன் முதலில் சரியென சொல்லிவிட்டு, அதன் பின்னர் அந்த கேரக்டரில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என சொல்லி அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அதன் பின்னர் கமல் மற்றும் ரகுவரன் இருவரும் எந்த படங்களிலும் இணையவில்லை.

கலாபவன் மணி: கலாபவன் மணி மலையாள சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமா அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. அவர் விக்ரமுடன் ஜெமினி, விஜய் உடன் புதிய கீதை, சிம்புவுடன் குத்து போன்ற நிறைய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய மறைவுக்கு முன் ரஜினியின் ரோபோ படத்தில் கூட ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். நிறைய மலையாள நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்த கமல் கலாபவன் மணி உடன் இணையவில்லை.



வடிவேலு: கமல் மற்றும் வடிவேலு ஆரம்ப காலகட்டத்தில் சிங்காரவேலன் படத்தில் இணைந்து நடித்தார்கள். அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, வடிவேலுவின் நடிப்பு பிடித்து போய் தேவர் மகன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். வடிவேலுவின் ஆரம்ப காலகட்ட சினிமாவில் தொடர்ந்து இரண்டு படங்களில் வாய்ப்பு கொடுத்த கமல், அவர் பெரிய காமெடி நடிகராக மாறிய பிறகு அவருடன் இணைந்து பணியாற்றவே இல்லை.

மணிவண்ணன்: நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கியவர் தான் மணிவண்ணன். கமல், மணிவண்ணனுக்கு அவ்வை சண்முகி படத்தில் வாய்ப்பு கொடுத்தார். பெண் வேடத்தில் இருக்கும் கமலை ஒரு தலையாக காதலிக்கும் முதலியார் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். எப்போதுமே தன்னுடைய ஒரு படத்தில் இணைந்த நல்ல நடிகர்களை தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொள்ளும் கமல் அவ்வை சண்முகி பிறகு மணிவண்ணனுடன் இணையவில்லை.



ஜனகராஜ்: கமல் மற்றும் ரஜினி படங்களில் ஆரம்ப காலகட்டத்தில் நண்பன் கேரக்டரில் ஜனகராஜ் அதிகமாக நடித்திருக்கிறார். கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜ் ஏற்று நடித்த போலீஸ் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் கமல், ஜனகராஜுக்கு தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டார்.

இந்த ஐந்து திறமை மிக்க கலைஞர்களை கமல் ஒதுக்கியதன் காரணம் அவர்களுக்கு இருந்த மதுப்பழக்கம் தான். இவர்களுடைய மது குடிக்கும் பழக்கத்தினால் தன்னுடைய பெயர் கெட்டுவிடும், படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டு விடும் என்ற ஒரு சில காரணங்களால் தான் கமல் இவர்களுடன் படம் பண்ண யோசித்தார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

4 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

4 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

4 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

4 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

8 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

8 hours ago