Categories: CinemaEntertainment

அஜீத்குமார் பற்றி நலம் விசாரித்த விஜய்!

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித், சிறிய அறுவை சிகிச்சைக்கு இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். வீடு திரும்பிய அஜித்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நடிகர் விஜய் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் டாப் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் அஜித்குமார் பங்கேற்று நடித்து வந்தார்.



இந்த நிலையில், சென்னை வந்திருந்த நடிகர் அஜித்குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது. முதலில் வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அதற்கடுத்து தகவல்கள் வெளிவந்தது. அதாவது, நடிகர் அஜித்குமாருக்கு காது – மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் ஏற்பட்டதாகவும், இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு தான் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதாகவும் அஜித்குமார் உடல்நலம் சீராக உள்ளதாகவும் தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் இன்று காலை நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நடிகர் அஜித்குமார் விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்த நிலையில் இன்று அஜித்குமார் வீடு திரும்பியதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நடிகர் அஜித்குமாருக்கு தளபதி விஜய் செல்போன் மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.



நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அவரது உடல்நலன் குறித்து விஜய் தொடர்ந்து கேட்டறிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவரது குடும்பத்தினரிடமும் நடிகர் அஜித்குமாரின் உடல்நலன் குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும் டாக்டர் என்ன கூறினர் என்றும், எந்த மாதிரியான அறிவுரகளை வழங்கினர் என்பது குறித்தும் நடிகர் விஜய் குடும்பத்தினரிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவரது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு செல்ல தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில் அவர் திட்டமிட்டபடி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

27 mins ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

33 mins ago

நாள் உங்கள் நாள் (20.05.24) திங்கட்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 20.05.24 திங்கட்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 7 ஆம்…

35 mins ago

இன்றைய ராசி பலன் (20.05.24)

இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி 7, திங்கட் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.…

37 mins ago

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

12 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

12 hours ago