Big Boss Tamil 7: சரசரவென குவியும் ஓட்டு.. 2ம் இடத்துக்கு முன்னேறிய போட்டியாளர்

பிக்பாஸ் ஓட்டு நிலவரம் தான் இப்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. மாயா, அர்ச்சனா ஆகியோர்களுக்காக தனி பி.ஆர் டீம் தீயாக இறங்கி ஓட்டு வேட்டை நடத்தி வருகிறது. இதனால் சோசியல் மீடியாவே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதில் எதிர்பாராத விதமாக மணி ஓட்டு எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் ஓட்டுக்களை தான் விஜய் டிவி கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

அதன் அடிப்படையில் மணி தற்போது இரண்டாம் இடத்தை நோக்கி முன்னேறி இருப்பதாக நம்பிக்கையான வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. இது சேனல் தரப்புக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கிறதாம்.



இருந்தாலும் ஓட்டு எண்ணிக்கை கடைசி நிமிடத்தில் கூட மாறும் என்கின்றனர். ஆனால் இது எப்படி சாத்தியம் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. ஏனென்றால் மணியுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது மாயா, தினேஷ் இருவரும் முடிந்த அளவு சிறப்பான பங்கை கொடுத்திருக்கின்றனர்.

அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை அதனாலேயே மணிக்கு கிடைக்கும் ஓட்டுக்கு பின்னால் வேறு யாரும் இருக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. உண்மையில் ரவீனாவின் வெளியேற்றத்திற்கு பிறகு தான் மணிக்கு ஓட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறதாம்.

அதன்படி ரவீனா தன்னுடைய நட்பு வட்டாரம் முதல் ரசிகர்கள் வரை அனைவரிடமும் மணிக்கு ஆதரவாக ஓட்டு வேட்டை நடத்தி வருவதாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளது. எனினும் ஃபைனலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் இந்த நிலையில் மாறுதல் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.



What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

5 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

5 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

5 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

5 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

9 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

9 hours ago