33 ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஈர்ப்பாகவே இருக்கும் ஈரமான ரோஜாவே

வழக்கமான கதையை ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சென்றது இளைய ராஜா இசையில் அதோ மேக ஊர்வலம், வா.. வா.. அன்பே, தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு., வண்ண பூங்காவனம் ஆகிய பாடல்கள் அனைத்தும் அப்போது ஹிட் அடித்த பாடல்கள்.

ஈரமான ரோஜாவே.. 33 ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஈரமாக.. ஈர்ப்பாக.. வாடாத ரோஜாவாக ரசிகர்கள் மனதில் வீற்றிருக்கும் படம்.. ஆம் 1991 ஜனவரி 12 அன்று கேயார் என்று அறியப்படும் கோதண்ட ராமையா அவர்களின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் வெளி வந்தது.



குறிப்பாக 80-90 களில் கல்லூரியை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்த காலம்… கல்லூரி கதைக்களத்தில் வந்த படம்தான் இது. வழக்கம் போல் ஊடலில் ஆரம்பித்து காதலாவதும் சக கல்லூரி மாணவன் விரோதமாவதும் தந்தை எதிர்ப்பை மீறி காதல் வென்றதா என்ற பார்முலா தான் இந்த படமும்.

படத்தில் சிவா , மோகினி ஆகியோர் நாயகன் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். நாசர் நாயகியின் பணக்கார அப்பா. ஶ்ரீவித்யா தனது பேத்தி நாயகி க்கு சிக்கல் வரும் போதெல்லாம் உதவும் பாட்டி. கல்லூரி வளாகம் முழுவதும் கலகலப்பு க்கு சின்னி ஜெயந்த் தலைமையில் நண்பர்கள் குழு ரசிக்க வைக்கின்றனர். அந்த குழுவில் நாயகனும் ஒருவர். வில்லனாக அதே கல்லூரியில் படிக்கும் விசித்திரமான ஹெல்மெட் என்ற கதாபாத்திரத்தில் ஒரு மாணவர். இவர்களை சுற்றி தான் கதை.



கல்லூரியில் ஏற்படும் நாயகன்-நாயகி காதலுக்கு இடையே வில்லன் குறுக்கீடு ஒரு பக்கம். மறுபுறம் நாயகியின் விருப்பத்தை மதிக்காமல் பணக்கார அப்பா தனது பெண்ணுக்கு வசதியான நண்பர் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறார். பாட்டி உதவியோடு காதலர்கள் தப்பி செல்ல அவர்களை தேடி நாசர் ஆட்களும் வில்லன் ஹெல்மெட்டும் கிளம்புவார்கள். இத்தனையும் மீறி காதல் வெற்றி பெற்றதா என்பது கிளைமாக்ஸ்.

வழக்கமான கதையை ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சென்றது இளைய ராஜா இசையில் அதோ மேக ஊர்வலம், வா.. வா.. அன்பே, தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு., வண்ண பூங்காவனம் ஆகிய பாடல்கள் அனைத்தும் அப்போது ஹிட் அடித்த பாடல்கள்.

கவித்துவமான தலைப்பும் இளமை ததும்பும் பாடல்களும் ரசிகர்களை ஈர்த்தது. இன்றளவும் இந்த படத்தின் பாடங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்பதே உண்மை.



What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

11 mins ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

17 mins ago

நாள் உங்கள் நாள் (20.05.24) திங்கட்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 20.05.24 திங்கட்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 7 ஆம்…

18 mins ago

இன்றைய ராசி பலன் (20.05.24)

இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி 7, திங்கட் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.…

21 mins ago

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

12 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

12 hours ago