Categories: CinemaEntertainment

பிக் பாஸில் கணவரை கைவிட்ட ரச்சிதா… அவரது ஆதரவு யாருக்குத் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தனது கணவர் தினேஷூக்கு ஆதரவு கொடுக்காமல் வேறு போட்டியாளர் ஒருவரை ஆதரித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை அடுத்து தற்போது தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசனும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. இதில், உள்ளே உள்ள போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை உள்ளே வந்த போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் விசித்ராவுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதேபோல, போட்டியாளர்கள் பலருக்கும் அவர் தாய் போல ஆறுதல் கொடுத்து வந்ததால், அவருக்கு ஸ்பெஷல் விருதும் கொடுத்து சந்தோஷப்படுத்தினர் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள்.



இந்த நிலையில்தான், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் சின்னத்திரை நடிகையுமான ரச்சிதாவும் விசித்ராவுக்குத் தன்னுடைய ஆதரவை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் விசித்ராவுக்குக் கொடுத்த ஸ்பெஷல் விருதை அவர் கையில் வைத்திருக்கும்படியான புகைப்படத்தை பகிர்ந்து, ‘ஃபைட்டர்’ எனக் குறிப்பிட்டு ஆதரவு கொடுத்திருக்கிறார் ரச்சிதா.

பிக் பாஸ் டைட்டில் வெல்ல வேண்டும் என்ற ரச்சிதாவின் ஆசைக்காகவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றதாக சொன்னார் ரச்சிதாவின் கணவர் தினேஷ். என்னதான் ரச்சிதா- தினேஷ் இடையே சண்டை இருந்தாலும் ரச்சிதாவின் ஆசைக்காக அவர் சென்றிருப்பதாக சொன்னது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இப்போது அவருக்கு ஆதரவு தராமல் விசித்ராவுக்கு ஆதரவு கொடுத்திருப்பதால் இனியும் ரச்சிதா-தினேஷ் ஜோடி சேர வாய்ப்பில்லையா என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

8 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

8 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

8 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

8 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

12 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

12 hours ago