Categories: Beauty Tips

அழகை கம்பீரமாக காட்டும் வகையில் மேக்கப் செய்து கொள்வது எப்படி?

‘ஒப்பனை’ என்பது தோற்றத்தை அழகாக எடுத்துக்காட்டுவது மட்டுமல்ல. நீங்கள் விரும்பும் விதத்தில் உங்களை உருவாக்குவதும் தான். நாம் போடும் மேக்கப்பை, நமது ஆளுமையை வெளிப்படுத்தும் கருவியாக மாற்றுவது எவ்வாறு என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.



கண்கள்: கண்கள் மனதின் ஜன்னல்கள். எனவே, கண்களைச் சுற்றி செய்யும் அலங்காரம், நமது மனதின் ஆழத்தில் உள்ள சாயல்களை வெளிப்படுத்தும். பெரும்பாலான இளம்பெண்கள் அணியத் தொடங்கும் முதல் அழகுசாதனப் பொருள் கண் மை (காஜல்). கண்களுக்கு செய்யும் ஒப்பனைக்கு முகத்தை மாற்றும் சக்தி உள்ளது. ஐ லைனர்கள் முதல் ஐ ஷேடோக்கள் வரை, நீங்கள் விரும்பும் அழகான கண் தோற்றத்தை உருவாக்க பல அழகு சாதனங்கள் உள்ளன.

முகம்: கண்களுக்கு அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது முகம்தான். லேசான மேக்கப் மட்டும் இருந்தாலே, முகத்தை அழகாக எடுத்துக் காட்டலாம்.

குறைவாக ஒப்பனை செய்யும் போது, முகம் பிரகாசமாக மட்டுமின்றி, தன்னம்பிக்கையுடனும் வெளிப்படும். இதில், கவனிக்க வேண்டிய விஷயம், நம் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனைத் தேர்வு செய்தல். இது முகத்தின் அழகை மெருகூட்டிக் காட்டும்.

லிப்ஸ்டிக்: முகத்தில், நாம் உதிர்க்கும் புன்னகையை தன்னம்பிக்கையுடன் வெளியே பிரதிபலிக்க உதட்டை அழகாக வைத்திருப்பது அவசியம். வறட்சியுடனோ, வெடிப்புடனோ உதடு இருந்தால், பல பாதிப்புகள் ஏற்படும். உதட்டை எப்போதும் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைக்க ‘லிப் பாம்’ பயன்படுத்தலாம். ஒப்பனைக்கேற்ப லிப்ஸ்டிக் நிறத்தைத் தேர்வு செய்யலாம். சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தினால், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அழகாய் பிரதிபலிக்க முடியும்.



நகப்பூச்சு: நகங்களுக்கு நாம் தேர்ந்தெடுக்கும் நகப்பூச்சு, நம் எண்ணங்களின் பிரதிபலிப்பாக மாறும். சிவப்பு நிறம் பூசும்போது, அது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கும். பிறர் மீதான கோபத்தின் வெளிப்பாட்டுக்கு கறுப்பு நிறத்தையும் பயன்படுத்தலாம். மற்ற உணர்ச்சிகளின் வெளிப்பாட்டுக்கு வானவில்லின் பிற நிறங்களைப் பயன்படுத்தலாம். இந்த வண்ணக் குறியீடு, உங்கள் ஆற்றலின் அளவை வெளிப்படுத்தும். அழகு, ஒப்பனை, தோல் பராமரிப்பு மற்றும் சுய பாதுகாப்பு போன்றவை பெண்களுக்கு முக்கியமானவை.

‘மேக்கப்’ நம் அழகை வெளிக்காட்ட உதவும் ஓர் ஆயுதம். இதனால், பெண்கள் தங்களை சக்தி வாய்ந்தவர்களாக உணர முடியும். இது உங்களின் ஆளுமையை மீட்டெடுப்பதற்கான சிறந்த வழியும் ஆகும். மேக்கப்பை நாம் கவசமாகப் பயன்படுத்தும்போது, நம்மைத் திறமையானவர்களாக வெளிக்காட்ட முடியும். கச்சிதமாக ஒப்பனை செய்வதற்கு நாம் செலவழிக்கும் 10 நிமிடம் என்பது நமக்கான தியானம் போன்றது. பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருக்கும் ஒருவர் தனக்காக சிறிது நேரம் ஒதுக்க ஒப்பனை சிறந்த வழியாகும்.



What’s your Reaction?
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

40 mins ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

42 mins ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

44 mins ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

48 mins ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

4 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

4 hours ago