தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டும் வழிகள்!!!

நாம் பாடுபட்டு பண்படுத்திய தோட்டங்களுக்கு பூச்சிகள் தான் எதிரிகளாக இருக்கின்றன. தோட்டத்தை பராமரிக்கும் மனிதனுக்கு, அங்கிருக்கும் தாவரங்களின் நலனுக்கு பூச்சிகள் எந்தவளவுக்கு காரணமாக உள்ளன என்றும், தோட்டத்தை பூச்சிகளிடமிருந்து எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதும் தான் முக்கியமான விஷயமாக இருக்கும். இவ்வாறான தொல்லைகளில் ஒன்றாக கருதப்படும் எலிகளை தோட்டங்களிலிருந்து விரட்டும் வழிகளைப் பற்றி தான் இந்த கட்டுரையில் படிக்கப் போகிறோம். இந்த குறிப்புகள் பூச்சிகளின் தொல்லைகளை தவிர்த்துக் கொள்ளும் வழிகளை உங்களுக்கு சொல்லும் என்பதில் ஐயமில்லை. மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மனிதர்களுடன் வசிக்க பழகி விட்டிருக்கும் எலிகள் தான், தோட்டங்களையும் வசிப்பிடமாக கொண்டிருக்கின்றன. இவை அங்கிருக்கும் தானியங்களுக்கு மிகவும் அபாயம் தரும் விஷயங்களாக இருப்பதற்கு காரணம், இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது தான்! ஆம், நம்முடைய தோட்டங்களிலிருந்து எலிகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவதென்பது நடவாத காரியமாகும். எனினும், தோட்டங்களுக்கு இந்த எலிகள் வந்து செல்வதை, கட்டுப்படுத்த முடியும் என்பது ஆறுதலான சங்கதி.



முதலில், எலிகள் உங்களுடைய தோட்டத்திற்கு வரக்கூடிய நேரங்களில் மிகவும் தனித்தன்மையானவை என்பதால், அந்த நேரங்களைக் கணிப்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். எனினும், தக்காளிகள் அல்லது உருளைக் கிழங்குகளை கடித்து போட்டு விட்டிருப்பதைக் கண்டால், எலிகள் வந்து போயிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம். சில நேரங்களில், இலைகள் கூட கடித்து விடப்பட்டிருக்கும். நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அடையாளமாக இதைக் கொள்ளலாம். இவ்வாறு எலி வந்து போவதை தெரிந்து கொண்ட பின்னர், அவற்றை விரட்டியடிக்கும் வழிகளில் கவனம் செலுத்தலாம்.

முதலாவதாக, உங்களுடைய வீட்டிலிருந்து தோட்டத்திற்குள் வர எந்தவிதமான ஓட்டைகளும் இல்லாததை உறுதி செய்யுங்கள். இவ்வாறு எலிகள் தோட்டத்திற்கு வர வழி காட்டும் துவாரங்களை அடைத்து விட்டால் முதல் பணி தொடங்கி விட்டது எனலாம்.

அடுத்ததாக, உங்களிடம் செல்லப்பிராணிகள் இருந்தால், அவற்றின் உணவுக் கிண்ணங்களை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில், செல்லப் பிராணிகளுக்கு உணவு வைக்கும் பாத்திரங்களால், எலிகளும் ஈர்க்கப்படுகின்றன. அவை வழக்கமாகவே மோசமான சுகாதாரமுடைய இடங்களுக்கு சென்று வரும் என்பது உண்மை. எனவே, உங்களுடைய தோட்டமும் கூட சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள்.



 எட்டிக்காய், கற்பூரம் மற்றும் லாவெண்டர்களை பயன்படுத்துங்கள். இவை பூச்சிகளை மற்றும் எலிகளை விரட்டியடிப்பதில் சிறந்த பங்கு வகிக்கும் பொருட்களாகும். மேலும், அம்மோனியம் பூச்சிக் கொல்லிகளை அருகிலுள்ள கடைகளில் கேட்டு வாங்கி பயன்படுத்துங்கள். அம்மோனியாவின் நெடியை வாங்கிக் கொண்டு எலிகள் அதிக நேரம் இருப்பதில்லை.

இறுதியாக, உங்களுடைய தோட்டத்தில் எலிகளை பிடிக்கும் பொறிகளை அமைத்திடுங்கள். எலிகளை விரட்டுவதில் மிகவும் திறமையான வழிமுறையாக இது இருக்கும். உங்களுடைய தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டுவதற்கு உதவியாக, கடைகளில் பல்வேறு வகையான எலிப்பொறிகள் விற்கப்பட்டு வருகின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துங்கள் மற்றும் எலிகளை விரட்டுங்கள்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

1 hour ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

1 hour ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

1 hour ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

2 hours ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

5 hours ago