Categories: CinemaEntertainment

மம்முட்டிக்கு பதிலா சத்யராஜ் நடிக்க வேண்டியதா?

70ஸ், 80ஸ்களில் சினிமா துறையை கலக்கியவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய நடிகராக இருந்தவர். இவர் சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் இவர் ரிக்‌ஷா மாமா, 100வது நாள், தம்பிக்கு எந்த ஓரு போன்ற பல திரைப்படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.



இவர் எதிர்மறையாக கதாபாத்திரத்தில் நடிப்பவர். இதுமட்டுமல்லாமல் ஹீரோவாகவும் தனது நடிப்பினை மிக சரியாக செய்பவர். இவர் தற்போது அவ்வப்போது சில படங்களில் நடித்தும் வருகிறார். பாகுபலி படத்தில் கட்டப்பாவாக இவரின் நடிப்பு அனைவரும் ரசிக்கும்படி இருந்தது. வருத்த படாத வாலிபர் சங்கத்தில் இவரின் காமெடி கலந்த நடிப்பு மக்களை வெகுவாக ஈர்த்தது என்றே கூறலாம்.

இவரைப்போலவே மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுபவர் நடிகர் மம்முட்டி. இவரும் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி அடைந்தன. இவர் தமிழில் ரஜினியுடன் இணைந்து தளபதி, மெளனம் சம்மதம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.



இவர் நடிப்பில் தமிழில் வெளியான படம்தான் ஆனந்தம். இயக்குனர் லிங்குசாமி இயக்கிய இப்படத்தினை சூப்பர் குட் ஃபிலிம்ஸின் R.B.செளத்திரி தயாரித்தார். எதார்த்தமான குடும்ப பாங்கான கதையை மையப்படுத்திய படம் ஆனந்தம். இப்படத்தில் மம்முட்டி, தேவயானி, முரளி, அப்பாஸ் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். நான்கு அண்ணன் தம்பிகளின் பாச போராட்டத்தினை போராட்டமே இல்லாமல் எடுத்துள்ளார் இயக்குனர்.

இப்படத்தின் மூலம் பிருந்தா சாரதி எழுத்தாசிரியராக தமிழ் சினிமாவில் தனது பயணத்தினை ஆரம்பித்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இப்படம் உருவான விதத்தை பற்றி கூறியுள்ளார். இப்படத்தின் கதைகள் அனைத்தையுமே திருப்பதிக்கு சென்று கலந்தாலோசித்ததாகவும் திருப்பதி சென்றால் கண்டிப்பாக அப்படம் வெற்றி பெறும் எனும் நம்பிக்கையோடு அவ்வாறு செய்ததாகவும் கூறினார். மேலும் இப்படத்திற்கு முதலில் கதாநாயகனாக மம்முட்டியை தேர்வு செய்யவில்லையாம்.



மம்முட்டியை நடிக்க வைத்தால் எங்கு இப்படம் மலையாள படத்தின் ரீமேக் என்று மக்கள் எண்ணி விடுவார்களோ என யோசித்து இப்படத்திற்கு முதலில் வேறு நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அர்ஜூன், சரத்குமார், சத்யராஜ் என பல நடிகர்களிடம் கேட்டுள்ளனர். சத்யராஜ் இப்படத்தில் நடிக்க சம்மதம் சொன்னாராம். பின் பல தயாரிப்பாளர்களிடம் சென்று பேசியுள்ளனர். ஆனால்  இப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி சூப்பட் குட் நிறுவனத்திடம் மட்டும் செல்ல கூடாது என்று கூறிவிட்டாராம். ஆனால் இறுதியாக வேறு வழியில்லாமல் சூப்பர் குட் பிலிம்ஸிடமே இப்படம் கொடுக்கப்பட்டது. படபிடிப்பின் பொழுது சத்யராஜ் வேறு படத்தில் ஒப்பந்தம் ஆனதால் மம்முட்டியையே நடிக்க வைத்துள்ளார் இயக்குனர். கேரள நடிகர் என்றாலும் இப்படத்தில் இவரின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-9

9 சீச்சி! என்ன கேவலம்! தொழில் முக்கியம்தான். அதற்காக இந்த அளவு ஒருவன் தரம் தாழ்ந்து இறங்குவானா? சஷ்டிகாவால் நடந்ததை…

4 hours ago

‘சுவரொட்டி வறுவல்’… எப்படி செய்வது.?

ஆட்டு மண்ணீரல் என்று அழைக்கப்படும் சுவரொட்டியில் அமினோ அமிலங்கள், பி12, இரும்பு சத்துக்கள் ஆகியவை உள்ளதால் உடலுக்கு பல நன்மைகளை…

4 hours ago

பாக்யா தந்த சர்ப்ரைஸ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட் 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அந்த ஆள்…

4 hours ago

முட்டாளாக்கப்படும் அன்பு..சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

 சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் நந்தா கொலை வழக்கு பரபரப்பாக போனது. என்னதான்…

4 hours ago

பீரோ முழுவதும் நகையும் பணமும்.. ஐஸ்வர்யா போட்ட ப்ளான்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், சாமியார் உங்க பிரச்சனை சரியாகணும்னா…

4 hours ago

’நெருப்புடா’ விமர்சனம்

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் அறிமுக இயக்குநர் பி.அசோக் குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘நெருப்புடா’ எப்படி இருக்கு என்பதை…

4 hours ago