Categories: Samayalarai

மட்டன் நல்லி எலும்பு குழம்பு செய்வது எப்படி?

ஆட்டு எலும்பு கறி சத்து நிறைந்தது. இதனை வேகவைத்து சூப் ஆக குடிக்கலாம். கிரேவி செய்தும் சாப்பிடலாம். கிராமங்களில் இன்றைக்கும் நல்லி எலும்பு கறிக்கு அதிக வரவேற்பு உண்டு. பக்குவம் மாறாமல் செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.இந்த ஆட்டு  நல்லி எலும்பு குழம்பு சாதம், தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



தேவையான பொருட்கள் :

மட்டன் நல்லி எலும்பு – 20

பெரிய வெங்காயம் – 1/2 கிலோ

தக்காளி – 5 தயிர் – 1/2 கப்

இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்



 

உப்பு – தேவையான அளவு

கொத்த மல்லி – 1 கைப்பிடி

எண்ணெய் – தேவையான அளவு

பட்டை – சிறிது கிராம்பு – 5

ஏலக்காய் – 4

பிரிஞ்சி இலை – 2.



செய்முறை விளக்கம் :

  • தக்காளி, வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மட்டன் நல்லி எலும்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

  • குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.



  • வெங்காயம் நன்றாக பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  • இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போன வுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா போட்டு வதக்கவும்.

  • அடுத்து அதில் மட்டன் நல்லி எலும்பை சேர்த்து பிரட்டவும். கறி நன்கு வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். 

  • 12 விசில் போடவும். விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

  • நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் தக்காளி, நன்கு அடித்த தயிர் சேர்த்து கொதிக்க விடவும்.அடுப்பை மிதமாக எரிய விட்டு எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும்.

  • கடைசியாக நறுக்கிய கொத்த மல்லி தூவி பரிமாறவும். சூப்பரான மட்டன் நல்லி எலும்பு குழம்பு ரெடி.



வீட்டு குறிப்பு

  • இரும்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு முன் அதனை தயார் செய்வதற்கான மற்றொரு எளிய வழி, பயன்படுத்தியப் பிறகு உடனடியாக சூடான நீரில் பாத்திரத்தை கழுவுதல் ஆகும். சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது தாதுக்களை அகற்றும். ஒரு மென்மையான ப்ரஷ் அல்லது ஸ்க்ரப்பை பயன்படுத்தி உணவு எச்சங்களை மெதுவாக துடைக்கவும்.

  • சப்பாத்தி மற்றும் ரொட்டியை மிகவும் சுவையாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது. மாவு பிசையும் போது மாவில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து பிசைந்தால் போதும். இருப்பினும், மாவை பிசைந்த பிறகு, அதை அதிக நேரம் வெளியே வைக்க வேண்டாம், இல்லையெனில் அது உங்கள் உணவை புளிப்பாக மாற்றும்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சரணடைந்தேன் சகியே – 26

26   சொன்னபடியே மறுநாள் காலையிலேயே ஆபீசில் வந்து நின்றான் பாலகுமரன்.. பெற்றுக் கொண்டேனில் “ண்” இரண்டு சுழியா, மூன்று…

3 hours ago

கதறிய குடும்பம், கைதான ஈஸ்வரி.. – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கமலா மற்றும்…

3 hours ago

மாடித்தோட்டம் கருணை கிழங்கு பயிரிடும் முறை

இன்று  நம்ம மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக கருணை கிழங்கு பயிரிடும் முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை…

3 hours ago

புதிய பிளானை வைத்திருக்கும் எதிர்நீச்சல் ஜீவானந்தம்.. உடனே சக்தியை புக் பண்ணிய சன் டிவி

 சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் கிட்டத்தட்ட 750 எபிசோடு வரை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட 1500 எபிசோடு காண…

3 hours ago

லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் கேரளா இன்ஜினியர் விவசாயி..

இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில்தான் அதிகளவில் ரப்பர் உற்பத்தியாகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கேரள ரப்பர் உற்பத்தி பெரிய லாபத்தை…

5 hours ago

கவரிங் நகையை வைத்து கலவரத்தை உண்டாக்கிய ஸ்ருதி அம்மா .. – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 6ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில்…

5 hours ago