சிவத் தொண்டர்கள்-24 (காரைக்கால் அம்மையார்)

காரைக்கால் அம்மையார் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் பாடப்பெற்ற அடியாருள் ஒருவர். காரைக்கால் அம்மையாரின் காலம் பொ.யு. 4-ஆம் நூற்றாண்டு அல்லது 5-ஆம் நூற்றாண்டு எனப்படுகிறது. திருஞான சம்பந்தர் திருவாலங்காட்டில் காலால் மிதித்து நடக்க அஞ்சி ஊருக்கு வெளியிலேயே தங்கினார் என்று சேக்கிழார் கூறுகிறார். பொ.யு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தர். ஆகவே திருஞான சம்பந்தருக்கும் மூத்தவர். அம்மையாரின் பதிக அமைப்பும், சொல்லாட்சிச் சிறப்பும் அவரது காலம் தொன்மையானது என்று உரைக்கும். இவரது காலம் பொ.யு. 300-லிருந்து 500-ஆம் ஆண்டுக்கு இடையில் இருந்திருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.



ஆவணி மாதம் கார்த்திகை நட்சத்திரம் இவர் பிறந்த நட்சத்திரமாகவும், பங்குனி மாத சுவாதி நட்சத்திரம் இவர் முக்தியடைந்த தினமாகவும் வழிபடப்படுகிறது.

புனிதவதி என்ற இயற்பெயர் கொண்ட அம்மையார், காரைக்கால் என்னும் ஊரில் சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்குப் பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். பரமதத்தன் என்னும் வணிகரை மணம் புரிந்தார். இல்லறத்தில் அவர் இருந்தபோது, சிவபெருமான் திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தி அம்மையை சிவபக்தி வாழ்வில் முழுமையாய் ஆட்கொண்டார். அவரது தெய்வத்தன்மை உணர்ந்த கணவன் அவரைத் துறந்து பக்தியுடன் ஒழுக, இறைவனிடம் பேய்வடிவம் வேண்டிப் பெற்றவர். அவரே பாடல்களில் தன்னைக் காரைக்கால் பேய் என்கிறார்.

பன்னிரண்டு சருக்கங்கள் கொண்ட பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணத்தில், இருபத்து நான்காவது புராணம் காரைக்கால் அம்மையார் புராணம். இவர் வாழ்க்கை குறித்த தகவல்களும் தொன்மங்களும் பெரியபுராணத்தில் இடம்பெறுகின்றன.



மாங்கனி தந்தது

ஒருசமயம் புனிதவதியின் கணவன் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு வியாபாரி இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளைப் பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்குக் அனுப்பி வைத்தார். அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவு வேண்டி வந்தார். சிவனடியாரை வரவேற்று அமரச் செய்தார் புனிதவதி அம்மையார். மதிய உணவு தயாராக இல்லாததால் தயிர்கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு உணவு பரிமாறிய அம்மையார், சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.



மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்துச் சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனைக் கணவனுக்குப் படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே பரமதத்தன் அதன் காரணம் கேட்டார். அம்மையார் நடந்ததைக் கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படிக் கூறினார். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப்பெண் என்று கருதினார். அவருடன் இல்லற வாழ்வில் இருக்கமுடியாதென தான் அவரை விட்டு நீங்கிவிட வேண்டுமென முடிவெடுத்தார். வாணிபம் செய்ய விரும்பும் பண்டங்களை ஏற்றிக்கொண்டு கடற்பயணமாகச் சென்றார்.



பேயுரு பெற்றது

பின்னர் பரமதத்தன் பாண்டிய நாட்டின் மதுரை சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்தார். சிலகாலம் கழித்து அவளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது, அந்த குழந்தைக்கு அம்மையாரின் பெயரையே வைத்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு, மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். அம்மையார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். தன்னைத் தேடிவந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்து பணிந்தார். அதன் பிறகு புனிதவதி கணவருக்காக தாங்கிய அழகிய உடல் நீங்கி, இறைவனைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடையவேண்டுமென இறைவனிடம் வேண்டினார். தாம் வேண்டிய வண்ணமே அழகு நீங்கிப் பேயுருவம் பெற்றார்.



அம்மையார் சிவனைக் காண கயிலாயம் சென்றார். கயிலை இறைவன் உறையும் இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழாக நடந்து சென்றார். கயிலையில் இறைவனுடன் இடப்புறம் அமர்ந்திருந்த பார்வதி, தலையால் நடந்துவரும் அம்மையைக் கண்டு இவர் யாரெனக் கேட்க “நம்மைப் பேணும் அம்மை காண்” எனக் கூறி “அம்மையே வருக” என்றழைத்து “வேண்டுவன கேள்” என கூறினார். அதற்கு அம்மையார்

“பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க ” என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரச்சொல்லி அங்கு தன் திருவடியின் கீழ் என்றும் இருக்க அருளினார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-13

13 ‘‘என்ன மெரினாஸ் கம்பெனி மேடம் என்ன சொல்லி அனுப்பினார்கள்?" கிண்டலாக கேட்டபடி கனகவேல் தோரணையாக சோபாவில் அமர, அவன்…

10 hours ago

தீபாவை கடத்திய ரியா..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவை தீர்த்து கட்ட ரம்யா…

10 hours ago

‘ஆறாம் வேற்றுமை’ விமர்சனம்

ஹாலிவுட் படம் அப்பகலிப்டோ பாணியில், சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் காதலையும் சேர்த்து சொல்லியிருக்கும் படம் தான் இந்த ‘ஆறாம் வேற்றுமை’.…

10 hours ago

தங்கமயிலை ஓரமாக உட்கார வைத்த மீனா …..-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதியிடம் மாமியார் என்ற கெத்துடன் தங்கமயில் இடம் அதிகாரம் பண்ணுங்கள். அப்பொழுதுதான்…

10 hours ago

ஷாலினி அஜீத் வெளியிட்ட புகைப்படம்…ஷாலினிக்கு என்ன ஆச்சு?

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக தான் அவசர அவசரமாக ’விடாமுயற்சி’…

10 hours ago

சரணடைந்தேன் சகியே – 23

23 “வணக்கம்மா.. நான் அகல்யா.. உங்க பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன்..” கை குவித்தபடி வந்த அந்த பெண்ணிற்கு முப்பது…

14 hours ago