உங்க தோட்டத்துல பாம்பு இருக்கா? கொஞ்சம் கவனிங்க!

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். ஆபத்தான உயிரினமான பாம்புகளுக்கு புதர்செடிகள் மிகவும் பிடித்தமானவை. வீட்டுத் தோட்டங்களில் பாம்புகள் எளிதாக குடிபுகும். நாம் கவனிக்காமல் விட்டு விட்டால் குழந்தைக்களை கடித்துவிடும். இதனால் அவை உயிருக்கே ஆபத்தாகிவிடும். வீட்டு தோட்டத்தில் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் குடிபுகாமல் இருக்க தோட்டக்கலைத்துறையினர் கூறும் அறிவுரைகளை படியுங்களேன்.

தோட்டத்தில் புதர்போல செடிகள் இருந்தால்தான் பாம்பு, தேள், பூரான் போன் விஷ ஜந்துகள் குடி புகும். எனவே புதர் செடிகளை வெட்டிவிடுவங்கள். அதிக அளவில் இலை, தலைகளையும், காய்ந்த சருகுகளையும் குவித்து வைக்காமல் அவ்வப்போது அகற்றுங்கள்.



தோட்டத்தில் ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில்தான் பாம்புகள் குடிபுகும் எனவே சுத்தமாக தோட்டத்தை பராமரியுங்கள். அதேபோல் மரப்பொந்துகள், உடைந்த ஓடுகள் போன்றவைகளை குவித்து வைத்திருந்தாலும் அவை பாம்புகளுக்கு பிடித்தமான இடமாகிவிடும். எனவே முடிந்த வரை உடைந்து போன பொருட்களை தோட்டத்தில் குவித்து வைக்காதீர்கள்.

  • தோட்டத்தில் அதிக அளவில் புற்கள் இருந்தால் அங்கு பூச்சிகள், புழுக்கள் வளரும் எனவே தோட்டத்தில் புற்களை ஒரே சீராக வெட்டி விடவும். அதேபோல் ஒரே இடத்தில் ரோஜாச் செடிகளை புதர்போல வளர்ப்பதையும் தவிர்க்கவும்.



  • பாம்புகளுக்கு பூண்டு வாசனை அலர்ஜி எனவே பூண்டினை நசுக்கி தண்ணீரில் கரைத்து செடிகளின் மீது கரைத்து விடலாம்.

  • தோட்டத்தின் மூளையில் புதினா செடிகளை வளர்க்கலாம். ஏனெனில் புதினா வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது என்பதால் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் பாம்புகள் வர வாய்ப்பே இல்லை என்கின்றனர் தோட்டக்கலைத்துறையினர்.

  • பேபி ஷாம்புவை தண்ணீரில் கலந்து அதனை தோட்டத்தில் ஸ்ப்ரே செய்து விடலாம். மூன்று மணிநேரம் கழித்து மறுபடியும் செடிகளின் மீது தண்ணீர் தெளித்து விடலாம். இந்த வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது எனவே தோட்டத்தில் பாம்புகள் இருந்தாலும் அவை ஓடிவிடும். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்களேன் உங்கள் தோட்டத்தில் அச்சமின்றி பொழுதை கழிக்கலாம்.



What’s your Reaction?
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Radha

Recent Posts

சரணடைந்தேன் சகியே – 26

26   சொன்னபடியே மறுநாள் காலையிலேயே ஆபீசில் வந்து நின்றான் பாலகுமரன்.. பெற்றுக் கொண்டேனில் “ண்” இரண்டு சுழியா, மூன்று…

3 hours ago

கதறிய குடும்பம், கைதான ஈஸ்வரி.. – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கமலா மற்றும்…

3 hours ago

மாடித்தோட்டம் கருணை கிழங்கு பயிரிடும் முறை

இன்று  நம்ம மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக கருணை கிழங்கு பயிரிடும் முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை…

3 hours ago

புதிய பிளானை வைத்திருக்கும் எதிர்நீச்சல் ஜீவானந்தம்.. உடனே சக்தியை புக் பண்ணிய சன் டிவி

 சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் கிட்டத்தட்ட 750 எபிசோடு வரை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட 1500 எபிசோடு காண…

3 hours ago

லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் கேரளா இன்ஜினியர் விவசாயி..

இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில்தான் அதிகளவில் ரப்பர் உற்பத்தியாகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கேரள ரப்பர் உற்பத்தி பெரிய லாபத்தை…

5 hours ago

கவரிங் நகையை வைத்து கலவரத்தை உண்டாக்கிய ஸ்ருதி அம்மா .. – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 6ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில்…

5 hours ago