Categories: lifestylesNews

வளைகாப்பு விழா நடத்தப்படுவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா !!!

வளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும். வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும். 6 வது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே. ஆனால் இதிலும் ஒரு விஷயம் அடங்கி உள்ளது. இதுதான் நமது வாழ்க்கை முறை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நமது முன்னோர்கள் எதையும் கண்மூடித்தனமாக செய்துவிட்டு செல்லவில்லை. அனைத்திற்கும் பின், நுண்ணறிவும், அறிவியலும் புதைந்திருக்கிறது. முக்கியமாக இந்த வளைகாப்பு சடங்கிலும் கூட. கர்ப்பிணி எப்போது தன் கணவனை பிரிந்து இருக்க வேண்டும் என்பதில் துவங்கி, ஏன் எதற்கு என அனைத்திற்கும் காரணம் இருக்கின்றன.



ஏழாவது மாதத்திற்கு பிறகு கணவன், மனைவி உடலுறவில் ஈடுபடுவது அபாயம். இதனால், பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் தான் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி இருவரையும் பிரித்து வைக்கின்றனர். ஏழு மாதத்திற்கு பிறகு தம்பதிகள் உறவில் ஈடுபட்டால் கருவில் வளரும் குழந்தை திரும்பிக் கொள்ளும், மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு மன தைரியம் ஊட்டவும் வளைகாப்பு நடத்தப்படுகிறது. பிள்ளை பெற்று நாங்கள் இவ்வளவு பேர் தைரியமாக, ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை காட்ட தான் பிள்ளை பெற்ற பெண்களை வளைகாப்பிற்கு அழைக்கின்றனர்.



வளைகாப்பில் வளையல் போடும் நிகழ்வு சிறப்புக்குரியது. ஆம், கர்ப்பிணி பெண்ணின் வளையல் ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு தாலாட்டு போன்றது, இது குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும். அம்மா நம் அருகிலேயே இருக்கிறார் என்ற உணர்வை குழந்தைக்கு ஏற்படுத்துவதும் ஒரு காரணம் ஆகும்.



ஏழாவது மாதம் மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் துவக்கம். இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் சிசு இருவருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம். வளைகாப்பு நிகழ்வின் போது உறவினர்கள் எல்லாரும் ஏழு விதமான அறுசுவை உணவுகள் தந்து கர்ப்பிணி பெண்ணை ஆசீர்வாதம் செய்வார்கள். இதனால் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பெற்று ஆரோக்கியமாக இருப்பார்கள்

சுகப்பிரசவம் ஆகவேண்டும் அதற்கு கர்ப்பிணி பெண்ணுக்கு மன நலமும், உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் வளைகாப்பு என்னும் நிகழ்வே நடத்தப்படுகிறது. அதிலும், முக்கியமாக ஏழாவது மாதத்தில். சுகப்பிரசவம் நடக்க, தாயும், சேயும் நலமுடன் இருக்க வளைகாப்பு நல்ல பயனளிக்கும் வகையில் அமையும் நிகழ்வாக கருதப்படுகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்வது பற்றி மனம் திறக்கும் கோவை சரளா.!

தமிழ் சினிமாவில் வெகு சில பெண் நகைச்சுவை கலைஞர்கள் மட்டுமே கோலோச்சியுள்ளனர். அப்படி காமெடியில் பின்னி பெடலேடுத்த மனோரம்மாவிற்கு பிறகு,…

10 hours ago

அதிர்ச்சியில் பாக்கிய – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி உட்கார்ந்து…

10 hours ago

சூப்பரான நெய் மணக்கும் மாம்பழ கேசரி

கோடை காலப்  பருவத்தில் தவிர்க்க முடியாத ஒன்று மாம்பழம். மாம்பழம் அதன் இனிப்பு சுவை, ஜூசி கூழ், நறுமணம் மற்றும்…

10 hours ago

புதிய கீதை: திரைப் பார்வை

புதிய கீதை படம் 2003 ஆம் ஆண்டு ஜெகன் இயக்கத்தில் விஜய், மீரா ஜாஸ்மின், அமீஷா பட்டேல் மற்றும் கலாபவன்…

10 hours ago

உடலென நான் உயிரென நீ-11

11  "எப்படித்தான் இவுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சதுன்னு தெரியல மாமா "  ராஜம் தன கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்ததை மதுரவல்லி…

14 hours ago

குளு குளு கும்பக்கரை அருவி போகலாமே !

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. பெரிய குளத்தில் இருந்து…

14 hours ago