Categories: Samayalarai

ருசியான கோக்கோ ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சாக்லேட்டை ருசிப்பதற்கு விரும்புவார்கள்.  நாம் எப்போதும் கடையில் தான் வாங்கி சாப்பிடுவோம். கவலைய விடுங்கள், இனி நாம் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமை வீட்டிலேயே செய்து மகிழ்ச்சியுடன் சாப்பிடலாம்.

அதில் இருக்கும் கோகோவை அதிகமாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது.பதப்படுத்தப்பட்ட கோகோவை தவிர்த்து விட்டு இயற்கையான கோகோ தூளை உபயோகிக்கலாம்.



குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று எளிய முறையில் வீட்டிலேயே ஐஸ்கிரீம் தயார் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: 

பால் – 1 லிட்டர்

கோக்கோ – 4 டீஸ்பூன்

சாக்லேட் எசன்ஸ் – 4 துளி

சர்க்கரை – 1/2 கிலோ

செய்முறை:

  • பாலை நன்றாக சுண்ட காய்ச்சி குளிர வைக்கவும். அதிலிருந்து பாதி பாலை எடுத்து கோக்கோ பவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

  • மீதமுள்ள பாலை மீண்டும் சூடாக்கி மேலே உள்ள கரைசலை அதில் ஊற்றி கலக்கவும்.

  • 10 நிமிடம் அடுப்பில் வைத்து கிளற வேண்டும். பிறகு ஆற வைத்து எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் வைத்து கெட்டியானதும் பறிமாறலாம்.



 

வீட்டு குறிப்பு

  • வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

  • சத்தான உணவு வகைகள்  குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அதற்காக அவற்றை ஒதுக்கி வைத்துவிட வேண்டாம். மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி/துருவி அல்லது நன்றாக அரைத்து/மசித்து, குழந்தைகளுக்கு பிடித்த உணவுடன் கலந்து விடலாம். இவற்றைக் குறைவான அளவில் சேர்ப்பது நல்லது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சிறுதானியத்தில் ஐஸ்கிரீம் : ஸ்ரீ மில்லட் ஐஸ்கிரீம்ஸ் சாதனை படைத்தது எவ்வாறு?..!

பிரபு வேணுகோபால், சசிதர், அருண் பிரகாஷ், பார்கவ் ஆகிய நான்கு பேரும் நல்ல நண்பர்கள். வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் தரும்…

57 mins ago

ரோகினி கொடுத்த வார்னிங் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின்…

60 mins ago

நடிகை மனோரமா-6

தமிழ் திரையுலகில் வாழ்ந்த‌ காலமெல்லாம் ஒரு நடிகன் நிலைப்பது அரிது, நடிகை நிலைப்பது அதை விட அரிது , வெகு…

3 hours ago

ஃப்ரெஷ் ஜூஸ் குடிப்பதால் பிரச்சினைகள் ஏற்படுமா..?ஏன்?

பழச்சாறுகளை நீங்கள் அருந்தியதும் உங்களுடைய ரத்தத்தில் உடனடியாக சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும். இது நீங்கள் சோடா குடிப்பதற்கு சமம். இதனால்…

3 hours ago

ஆண்களே! உங்களுக்கு ஹீரோ மாதிரி அழகான சருமம் வேணுமா?

பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஒரு கனவாகும். நாள் முழுவதும் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும்…

3 hours ago

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை (சித்ரா) இறப்பிற்கு காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த நெருங்கிய தோழி

விஜே சித்ரா தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று வாய்ப்புக்காக பல நேரங்களில் போராடி இருக்கிறார். ஆனால் அப்பொழுதெல்லாம்…

3 hours ago