கூலிங்கிளாஸ் தேர்ந்தெடுப்பது எப்படி?

கூலிங் கிளாஸ் கண்ணாடியை சிலர் வெயிலுக்காக அணிகிறார்கள். சிலர் ஸ்டைலுக்காக அணிகிறார்கள். ஆனால் கண் சார்ந்த நோய் பாதிப்புகளை தடுப்பதில் கூலிங் கிளாஸுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும், சூரிய கதிர் வீச்சுகளில் இருந்து கண்களை பாதுகாக்கவும், கண் கூசுவதை தவிர்க்கவும் கூலிங் கிளாஸ் அணிவது நல்லது. அது கண்களை பாதுகாக்க உதவும்.



தற்போது கூலிங் கிளாஸ்கள் பல வண்ணங்கள், ஸ்டைல்கள் கொண்ட பிரேம்கள், லென்ஸ்கள் என பல அம்சங்களில் கிடைக்கிறது. தரமான, கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தன்மை கொண்ட கண்ணாடிகளை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். முக்கியமாக புற ஊதா கதிர்வீச்சுகளில் இருந்து கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். அவை கண்புரை போன்ற நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். புற ஊதா கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கும் அம்சங்கள் எதுவும் இல்லாமல் ஸ்டைலுக்காக கண்ணாடி வாங்கி அணிவது பயனற்றது. கார் ஓட்டும்போது கண் கூசும் பிரச்சினை ஏற்பட்டாலோ, கடற்கரை போன்ற நீர்நிலைகளுக்கு செல்லும்போது கண்கள் கூசும் பிரச்சினையை எதிர்கொண்டாலோ ‘போலரைஸ்டு லென்ஸ்’ கொண்ட கண்ணாடியை அணியலாம்.



பிரதிபலிக்கும் தன்மை கொண்ட ‘மிரர் சன்கிளாஸ்’ அணிவது பார்க்க அழகாக இருக்கும். கண்களுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும். இந்த கண்ணாடி குறிப்பிட்ட அளவு கொண்ட வெளிச்சத்தை மட்டுமே ஊடுருவ செய்து கண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.

இரவு நேரத்தில் கார் ஓட்டுபவர்கள், கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் எதிர் பிரதிபலிப்பு தன்மைகொண்ட ‘அன்டி ரிப்ளெக்டிவ் கோட்டிங்’ கொண்ட கூலிங் கிளாசை அணியலாம். அது கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். இதில் லென்சின் உள் மற்றும் வெளிப்புற பகுதியில் கூடுதலாக கோட்டிங் இடம்பெறுவதால் கண் கூசும் பிரச்சினையும் எழாது.

விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக தரமில்லாத கண்ணாடிகளை வாங்கக்கூடாது. அது கண்களுக்கு அசவுகரியங்களை ஏற்படுத்தும். கோடை காலத்தில் வெளியில் செல்லும்போது கூலிங் கிளாஸ் அணிந்து செல்வது புற ஊதாக்கதிர் வீச்சு பாதிப்பில் இருந்து கண்களை பாதுகாக்க உதவும்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

1 min ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

3 mins ago

பெண்களே நீங்க சேலையில ஒல்லியா ஸ்டக்சரா தெரியணுமா? அப்போ இந்த டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க…

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, என்று ஒரு சினிமா பாடலே இருக்கிறது. புடவை கட்டினால் பெண்கள் வழக்கத்தை விட…

8 mins ago

குக் வித் கோமாளியை முதல் எபிசோடில் ஓரங்கட்டிய டாப் குக் டூப் குப்!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார்.…

10 mins ago

தின்பண்ட வியாபாரம்.. வெற்றி கதை?

பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…

3 hours ago

மீனாவால் முகம் மாறிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…

3 hours ago