இன்றைய ராசி பலன் (26.4.23)

இன்று, ஏப்ரல் 26 புதன்கிழமை, சந்திரன் மிதுன ராசியில் செவ்வாயுடன் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளார். சந்திரன் இன்று திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளதால் இன்று ரிஷபம் ராசிக்காரர்களின் நாள் பரபரப்பாக இருக்கும். சிம்ம ராசிக்கு சிறப்பானதாக இருக்கும். 12 ராசிகள் எப்படி  இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷ ராசி அன்பர்களே!

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்துகள் வாங்குவதுபற்றி சிந்தித்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு இருக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கல் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்,

மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். தலைசுற்றல் முழங்கால் வலி வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் பிரச்சனைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வெளியில் செல்லும்போது தக்க முன்னெச்சரிக்கை அவசியம்விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்து விலகும். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்குவதுடன் அவருடைய ஆதரவு உங்கள் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களிடம் பேசும்போது பதற்றம் தவிர்க்கவும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். அம்பிகை வழிபாடு அல்லல் தீர்க்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

கன்னி ராசி அன்பர்களே!

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண் பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்குமேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

துலா ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது நட்பு வட்டம் உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், சிலருக்கு அதிகப்படியான செலவுகளால் கடன் வாங்க நேரிடும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடு விஷயத்தில் சிந்தித்துச் செயல்படவும். நரசிம்மர் வழிபாடு நலம் தரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். நன்றி மறந்த சொந்த பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.எதிர்காலம் பற்றிய சிந்தனையில் மனதில் சற்று சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். முருகப்பெருமானை வழிபட மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மறைமுக இடையூறுகள் ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். விலை உயர்ந்த மின்னணு மின்சார பொருட்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.முற்பகலில் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் முயற்சி சாதகமாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். பணியாளர்களால் செலவுகள் ஏற் படும். வாராஹி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் சகோதர வகையில் சில சங்கடங் கள் ஏற்பட்டு விலகும்.

மகர ராசி அன்பர்களே!

சாமர்த்தியமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அமோகமான நாள்.சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். இன்று நீங்கள் நடராஜப் பெருமானை வழிபடுவது நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.

கும்பராசி அன்பர்களே!

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் திடீர் செலவு கள் ஏற்பட்டாலும் அதனால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பதால் மகிழ்ச்சியே ஏற்படும். இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மீன ராசி அன்பர்களே!

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் இன்று முடியும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். பிற்பகலுக்குமேல் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாயாரின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். இன்று சிவ பெருமானை வழிபடுவது நன்று.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலையில் தொடங்கும் காரியம் அனுகூலமாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நான் உயிரென நீ-11

11  "எப்படித்தான் இவுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சதுன்னு தெரியல மாமா "  ராஜம் தன கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்ததை மதுரவல்லி…

2 hours ago

குளு குளு கும்பக்கரை அருவி போகலாமே !

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. பெரிய குளத்தில் இருந்து…

2 hours ago

மக்காச்சோளம் பயிரிடும் முறை

மாடி தோட்டத்தில் மக்காச்சோளம் (Corn Plants) பயிரிடும் முறை: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான மக்காச்சோளம் (Corn Plants) நம்…

2 hours ago

ஜிவி பிரகாஷ் விவாகரத்து பற்றி பிஸ்மி

இன்று கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருவது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து செய்தி. 12 வருடமாக…

2 hours ago

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை நேரடி விற்பனையில் கலக்கும் ஃபார்ம்லே

பெருந்தொற்றுக்கு பிறகு, மேலும் பல நுகர்வோர் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நாடுவதால், சூப்பர் மார்க்கெட்களில் பலவகையான ஊட்டச்சத்து மிக்க ஸ்நாக்ஸ்…

4 hours ago

அவமானப்பட்ட ரோகிணி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரவியை…

4 hours ago