உறவெனும் வானவில் -19( நிறைவு)

18

 

சக்திவேல் புன்னகையோடு அவளை அணைக்க முயல,”ம்ஹூம் உனக்கு அந்த உரிமையை நான்  கொடுக்கவில்லை.தள்ளிப் போ ” விரட்டினாள்.

“என் மனைவி மீதான உரிமையை நானே எடுத்துக் கொள்வேனே” சொன்னதையே செய்ய,யவனாவை இறுக்கிக் கொண்டான் அவன்.

“ம்க்கும்…என் கையை பிடித்து இழுத்துட்டு போறாங்க.அப்போது பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு,இப்போது வசனமாக்கும்…”

“எனக்கு வேறு வழி தெரியவில்லை யவா.உன் மனதில் எனக்கான இடத்தின் அளவு தெரிந்தாக வேண்டும்.இப்படி கலாட்டாக்கள் வருமென்று உன் மாமாவை முதலில் ரிசப்சனுக்கு அழைக்க வேண்டாமென்றுதான் நினைத்திருந்தேன்.ஆனால் அப்படி எத்தனை நாட்களுக்கு மூடி வைப்பது?நான் குழப்பத்திலிருந்த போது உன் சித்தியே எனக்கு வழி வகுத்து தந்தார்கள்”

“சித்தியா ?”

“ஆம்.நான் கம்பெனியில் இருந்த அன்று வீடியோ கால் வந்தார்களே..அன்றே என் சுற்றுப்புறத்தை கணித்து,நீ போனில் சொன்னவற்றில் சந்தேகம் கொண்டார்கள்.என்னிடம் துருவுவது போல் கேள்விகள் கேட்டார்கள்.நான் சரியாக பதில் சொல்லாமல் கட் பண்ணிவிட்டேன்.ஏதாவது ஏடாகூடம் செய்வார்களென பயந்து கொண்டிருந்த போது அப்பா நம் ரிசப்சனை ஏற்பாடு செய்தார்.நீ இந்த விசயத்தை சந்தோசமாகவே உன் சித்தியிடம் சொன்னாய்.அப்படித்தானே?”

“ஆமாம்.அவர்கள் எதிர்பார்த்தது போலன்றி என் வாழ்வு மிக இனிமையாக இருப்பதை அவர்களுக்கு காட்ட நினைத்தேன்”



“ம்.அவர்களும் உன் வாழ்வு சுகப்படுவதை உணர்ந்தார்கள்.அவர்கள் திட்டம் பாழாவதை விரும்பாமல் உன் மாமாவிற்கு போன் செய்து நாங்கள் ஏமாற்றி உன்னை திருமணம் செய்து சென்றதாகவும்,உன்னைக் காப்பாற்றி கூட்டிப் போய் விடும்படியும் அழுதிருக்கிறார்கள்.உன் மாமா மருமகளின் வாழ்வை எண்ணி வேதனைப்பட்டு உன்னை இங்கிருந்து மீட்டு மகனுக்கு திருமணம் முடிக்க திட்டமிட்டார்”

“ஓ…சித்தி இவ்வளவு வேலை பார்த்திருக்கிறார்களா?”

“ஆமாம்.உன் மாமா சித்தார்த்திடம் இதைப் பற்றி பேச, அதே நேரம் நானும் சித்தார்த்தை தொடர்பு கொண்டேன்.என் மன மூலையில் நீ சித்தார்த்தை திருமணம் செய்திருந்தால் சந்தோசமாக இருந்திருப்பாயே என்ற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. இதனை அவரிடம் பேசினேன்.சித்தார்த் நீ என்னை மிகவும் காதலிப்பதாக உறுதியாக கூறினார்.இதனையே அவர் அப்பாவிடமும் கூறியிருக்கிறார்.இருவருமே அதை நம்பவில்லை.எங்களை நம்ப வைப்பதற்காக சித்தார்த் எழுதிய நாடகம்தான் இது.இறுதியில் எல்லாம் சுபமாக முடிந்தது”

யவனா செல்லமாக அவன் மார்பில் குத்தினாள்.”சித்தார்த் அத்தானிற்கு புரிந்தது உங்களுக்கு புரியவில்லையாக்கும்? உங்கள் மீது கொண்ட காதல் மட்டுமல்ல,இந்த வீட்டிற்குள் நுழைந்ததுமே நம் வீட்டினர் ஒவ்வொருவருமே எனக்கு முக்கியமானவர்களாகி விட்டனர்.உறவுகள் அதிகமின்றி வளர்ந்தவள் நான்.வானவில் போல் இத்தனை விதமான உறவினர்களின் பாசத்தோடும்,தெவிட்டாத உங்கள் காதலோடும் பல ஆண்டுகள் இங்கே வாழ விரும்பினேன் “

உணர்ச்சி வசப்பட்டதில் குரல் கரகரக்க பேசியவளின் தோளணைத்துக் கொண்டவன் ” உன் ஆசை தெரிந்துதான் ரூபனை சீக்கிரமே தூங்க வைத்தேன் ” என கண் சிமிட்டினான்.

“ஓஹோ அப்படியா…இதோ நான் அவனிடமே கேட்கிறேன்.ரூ…” சத்தமாக திறந்த இதழ்களை தன் ஆளுகைக்குள் கொணர்ந்தான் சக்திவேல்.சத்தம் அடங்கி அவனுக்குள் கலக்கலானாள் சக்தியின் யவா.

-நிறைவு –



What’s your Reaction?
+1
36
+1
15
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Padma Grahadurai

Website Admin

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

6 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

7 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

7 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

7 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

10 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

11 hours ago