சனி பெயர்ச்சி 2023: மீன ராசி

சனி பெயர்ச்சி 2023: விரிவான விளக்கங்களும், பரிகாரங்களும்

மீன ராசி நேயர்களே உஷார்… பேச்சில் நிதானம் தேவை… உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் இவைதான்



மீன ராசி அன்பர்களே…!!

சனியின் நாமம் : லாப சனி

உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருந்து வந்த சனி பகவான் இப்போது தங்களின் ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார்.

சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக ராசியையும், ஏழாம் பார்வையாக பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

பலன்கள்

பேச்சுக்களில் நிதானம் வேண்டும். குலதெய்வ வழிபாடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சுரங்க பணியில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பாராத சில தனவரவுகளால் பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மேன்மை உண்டாகும்.

உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைப்பதைக் காட்டிலும் தாமே முடிப்பது நன்மையை தரும். செய்யும் வேலையை திருப்தியுடன் செய்யவும். பணி நிமிர்த்தமான மாற்றங்களை தகுந்த ஆலோசனைகளுக்கு பிறகு முடிவு செய்யவும்.

குடும்பம்/திருமணம்

வீட்டில் சுப காரியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் சூழ்நிலைகளை அறிந்து பேசுவது நன்மையை அளிக்கும். பெண்கள் தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் மனத்தெளிவு உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தம்பதிகளுக்குள் சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும்.  வரன் தேடுபவர்களுக்கு தகுந்த வரன் அமையும். இறைவழிபாடு தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் சூழ் நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும். திறமைக்கேற்ப வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.



தொழில்

வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த லாபங்களால் சேமிப்பு மேம்படும். தொழிலில் போட்டிகள் குறையும். பெருந்தன்மையான செயல்பாடுகளினால் சில அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலை மேற்கொள்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

கல்வி

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். அறிவியல் துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான காலம் ஆகும். திறமைகளை வெளிப்படுத்தும் சிறு வாய்ப்புகள் இருந்தாலும் அதை தகுந்த முறைகளில் பயன்படுத்திக் கொள்ளவும். தேர்வுக்கு தேவையான பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது மேன்மை தரும்.

உடல்நிலை

குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். மருந்துகளைத் தவறாமல்  எடுத்துக் கொள்ளவும். நரம்பு பிரச்சனைகளால் சற்று அவதிகள் ஏற்படும்.

வழிபாடு

  • மூல நட்சத்திரத்தன்று வடை மாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர தெளிவு கிடைக்கும்.

  • குச்சனூர் சென்று வந்தால் குழப்பங்கள் நீங்கி மனது தெளிவு பெரும்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

10 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

10 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

10 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

10 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

14 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

14 hours ago