Categories: Barathi Kannmma

பாரதி கண்ணம்மா – 19

19

 

 

சொல்லிவிட்டாலே தவிர அவன் போய் பார்த்துவிடுவானோ ….என மனம் மத்தளமாகத்தான் இருந்த்து .இதுவரை மிரட்டி …மிரட்டியே அவளிடமிருந்து  ஐம்பதினாயிரம் வரை வாங்கிவிட்டான் .

மணிபாரதியின் அன்பில் என்றைக்கு கரையத் தொடங்கினாளோ …அன்றிலிருந்தே மன தைரியத்துடன் அவனை எதிர்க்க ஆரம்பித்திருந்தாள் கண்ணம்மா .அடிபட்ட நாகமாய் இருந்தான் அவன் .

இன்று அவரை போய் பார்த்திருப்பானோ …? போட்டோக.களை காட்டியிருப்பானோ ….? குழம்பிய மனத்திற்கு ஒலித்த தொலைபேசி கூட திடுக்கிடலாய் இருந்த்து .அவன்தானா …படபடக்க பார்த்தவள் நிம்மதி மூச்சுவிட்டாள் .அப்பா …

” எப்படிப்பா இருக்கிறீங்க …? ”
உற்சாகத்துடன் பேச தொடங்கினர் இருவரும் .



,” அப்பா நீங்க கேட்ட விபரங்களை இன்னமும் நான் எடுக்கவே இல்லைப்பா ….” லேசான குற்றவுணர்வுடன கூறினாலும் அவள் உள்ளம் அந்நேரம் தேனென தித்தித்தது .

பகல் முழுவதும் பள்ளியில் கழிந்து விடுவதால் இதுபோன்ற தகவல்களை இரவில்தான் சேகரிப்பது அவள் வழக்கம் .இப்போதோ ….மணிபாரதி இரவுகளை முழுக்க முழுக்க கணவன் மனைவிக்குரியதாக மாற்றிவிட , கணவன் பாரதியில் ஆழ்ந்து கவிஞன் பாரதியை மறந்தே போனாள் .

” அது பரவாயில்லைம்மா . நானே பார்த்துக்கொள்கிறேன் .இப்போது நீ ஒரு குடும்பத்தலைவி .உன் குடும்பத்தை மட்டும் பாரும்மா .அதுவே போதும் ….”

” நான் அவரிடம் இன்னமும் ஒன்றும் சொல்லவில்லையப்பா ….”

” ஏன்மா …இதில் தயங்க என்ன இருக்கிறது …? தள்ளிப்போடாமல் சொல்லிவிடும்மா …”

இதனை அப்பா ஏன் இவ்வளவு எளிதானதாக நினைக்கிறார் …? குழம்பியபடி நின்றிருந்தவளின் இடையை பின்னிருந்து இரு கரங்கள் கோர்த்தன.

” யார் …கண்ணம்மா …? …” கன்னத்தில் கன்னம் உரசினான் .

” அப்பா …உங்க மாப்பிள்ளை அந்த புத்தகத்தை முடித்து விட்டாராம் .அடுத்த புத்தகம் கேட்கிறார் .நீங்கள் பாரதியின் எழுச்சி கவிதைகள்னு ஒரு புத்தகம் எழுதினீர்களே ..்அதை அனுப்பி வையுங்களேன் …” குறும்பாய் அப்பாவிடம் பேசினாள் .

” ஏய் …ஐய்யோ மாமா …இங்கே எனக்கு நிறைய வேலை …புத்தகமெல்லாம் படிக்க தெரியாது ….சை வராது …இல்லை முடியாது …அதனால் நீங்கள் கஷ்டப்பட்டு எதையும் அனுப்பி வைக்க வேண்டாம் …ப்ளீஸ் ….” அவள் கையில் வைத்திருந்த போனிலேயே எட்டி பேசி  வேகத்தில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தான் .

” பரவாயில்லை மாப்பிள்ளை .உங்கள் அதிக வேலை முடிந்த்தும் சொல்லுங்க . அனுப்பி விடுறேன் …”

” வே…வேலை …அது இப்போதிற்கு முடியாது …ரொம்ப பெரிய ப்ராஜெக்ட் மாமா .அது வருடக் கணக்காக ஓடும் .முடிந்த்தும் சொல்றேன் .சரியா…? “



பொங்கிய சிரிப்பை அடக்கியபடி கண்ணம்மா போனை கட் செய்ய …” ஏனடி என்னை இப்படி மாட்டி விடுற…? ” தலையில் கொட்டினான் .

” ஏன் …நீங்கள்தான் அந்த புத்தகத்திலிருந்து தினமும் ஒரு கவிதை சொல்கிறீர்களே. படிக்காமலா சொல்கிறீர்கள் …? “

” ஏய்…அதெல்லாம் கண்ணம்மா கவிதை .உன்னை நினைத்துக் கொண்டே ரசித்து படித்துவிடுவேன் ்இப்போது நீ ஏதோ எழுச்சி …அது இதென்று பிதற்றுகிறாயே …அம்மா தாயே இந்த புலம்பல்களையெல்லாம் அப்பாவும் , மகளும் மட்டும் வைத்திக்கொள்ளுங்கள் .என் தலையில் சுமத்தாதீர்கள் ….”

” என்ன …நாங்கள் கவிதை பேசுவது உங்களுக்கு பிதற்றலா …? புலம்பலா …? ” இடுப்பை தாங்கி கண்களை உருட்டினாள் .

” ஐயோ …டீச்சரம்மா இப்போது கையில் பிரம்பை எடுப்பீர்களா …? ” பயந்த மணிபாரதியை நித்திகா வந்து காப்பாற்றினாள் .

                                                                 ————

அயர்ன் பண்ணி பெட்டில் வைக்கப்பட்டிருந்த உடைகளை பெட்டிக்குள் அடுக்க ஆரம்பித்தான் மணிபாரதி .கட்டில் மேல் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்து கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அவனை முறைத்துக் கொண்டிருந்த மனைவியையும் , மகளையும் சிரிப்புடன் பார்த்தான் .

” இரண்டே நாள் .அதற்கு இப்படி முகத்தை தூக்குகிறீர்களே …? “

” அந்த இரண்டு நாள் எங்களையும் கூட்டிப் போனால் என்ன …? வெரி பேட் அப்பா …” நித்திகா மூக்கை சுளித்தாள் .

” நித்திம்மா கடைக்கு டிரஸ் பர்சேஸ் பண்ண போகிறேன் . எந்நேரமும் வெளியே அலைந்து கொண்டிருப்பேன்டா ..உங்களுக்கு போரடிக்கும் …”

” ம்க்கும் …இதெல்லாம் சும்மா …எங்களை கூட்டி போக மனதில்லை .உங்களுக்கு ப்ரீயாக தனியாக போகனும் .டீ நித்தி …பேசாதேடி உங்க அப்பா கூட ….”

” அடிப்பாவி …இப்படி வில்லி மாதிரி பேசி என்னையும் என் மகளையும் பிரிக்க பார்க்கிறாயே … “

” அம்மா இல்லை .நீங்கதான் வில்லன் .பேச மாட்டோம் .போங்க …”

இருவரின் தோள்களிலும் கை போட்டு தன்னோடு அணைத்துக் கொண்டவன் , ” என் செல்லம்ஸ் இல்ல .இரண்டே நாள் ஓடியே வந்திடுவேனாம் .பொறுமையாக இருப்பீர்களாம் .” கொஞ்சினான் .

” ஏன்டா ஒரு இரண்டு நாள் வெளியூர் போக இப்படி பொண்டாட்டி , பிள்ளைகிட்ட கெஞ்சுகிற அளவு மோசமாகவா உன் நிலைமை இருக்கிறது …” அதட்டியபடி அறை வாசலில் வந்து நின்றார் மீனாட்சி .



எங்களுக்குள் நாங்கள் பேசுகிறோம் .இவர் ஏன் இடையில் வருகிறார் …கண்ணம்மாவிற்கு எரிச்சல் வந்த்து .மாமியாரென்பதால் விலக வேண்டுமா என்ன..? மனமின்றி கணவனை உரசியபடியே இருந்தவளை உறுத்தார் .

” என்ன ஒட்டுதல் அதிகமாக தெரிகிறதே …? ” கேள்வியை மருமகளுக்கு கொடுத்துவிட்டு பேத்தியின் தலையில் கொட்டினார் .

” பொறாமைபடாதீங்க பாட்டி ” நித்திகா அப்பாவின் தோள்களில் கை போட்டுக்கொண்டாள் .

கண்ணம்மாவிற்குமே அவருக்கு பொறாமை என்றுதான் தோன்றியது .

” அம்மா நான் ஊருக்கு போய்விட்டு வரும் வரை என் மனைவியையும் , பிள்ளையையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் ….” இருவரின் தோள்களிலிருந்து கைகளை எடுக்காமல் அணைத்தபடியே பேசினான் மணிபாரதி .

” ஆமான்டா ஊரிலில்லாத அதிசய பொண்டாட்டி  பிள்ளை உனக்கு ்அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு பண்ணிவிட்டு போ ..நீ ஒழுங்காக உன் வேலையை பார் .இங்கே நான் பார்த்துக்கொள்வேன் …”

ஊருக்கு செல்பவரிடம் இரண்டு வார்த்தை இனிமையாக பேசக்கூடாதா …மனதினுள் நினைத்தபடி கணவனை இன்முகத்துடன் அனுப்பி வைத்தாள் .

                                                                           ———–

மணிபாரதி இல்லாத ஒருநாளை கழிப்பதற்குள் கண்ணம்மா திணறிப் போனாள் .இவனில்லாமலேயாவா எனது இதற்கு முந்தைய வாழ்நாட்களை கடந்தேன் …ஆச்சரியமாக நினைத்துக்கொண்டாள் .



 

ஸ்பெசல் கிளாஸ் இருந்ததால் நித்திகாவை காரில் முதலில் அனுப்பிவிட்டு கிளாஸ் முடித்து சோர்வுடன் ஆட்டோவில் வீடு  திரும்பியவளுக்கு காம்பவுண்ட் கேட்டை திறந்து விடக்கூட ஆளில்லை .வாட்ச்மேன் லீவில் சென்றிருப்பது நினைவு வர …சலிப்புடன் கதவை திறந்து உள்ளே நுழைந்தவள் மின்சாரத்தை மிதித்தவள் போல் நின்றாள் .

உள்ளே ….

நடுஹாலில் சோபாவில் ஒய்யாரமாக அமர்ந்தபடி கையில் ஜூஸுடன் மீனாட்சியுடன் பேசி சிரித்தபடி இருந்தான் ராமச்சந்திரன் .

What’s your Reaction?
+1
2
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2

Padma Grahadurai

Website Admin

Share
Published by
Padma Grahadurai

Recent Posts

விஜய் டிவியின் 5 சீரியலின் கதை..ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி! தான்.

என்னதான் சன் டிவி சீரியலுக்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்து வந்தாலும் இப்ப இருக்கிற ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி தான்.…

2 hours ago

பாக்யா குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி கோபி இனிமே…

2 hours ago

பாலியல் தொழிலாளிகள் சூழலை பேசும் வெப் சீரிஸ்: ஹீராமண்டி எப்படி? ஓடிடி திரை அலசல்

பாலியல் தொழில் நடக்கும் புகழ்பெற்ற ஹீராமண்டியின் ஷாஹி மஹாலின் தலைவியான மல்லிகாஜானை வென்று அந்த இடத்தைப் பிடிக்க அவரது சகோதரியின்…

2 hours ago

பேரிச்சம்பழம் அல்வா

ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக இருக்கும் பேரீச்சை பழங்களில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சத்துக்கள் உள்ளன. பேரீச்சை பழங்கள் துரிதமான…

2 hours ago

உடலென நான் உயிரென நீ-12

12 " என்னாயிற்று பேபி ...? "  தன் சட்டையை இறுக்கி பிடித்திருந்த அவள் கைகளை பார்த்தபடி கேட்டான் கணநாதன்…

6 hours ago

வேண்டுதல் நிறைவேற 9 வாரம் முருகன் வழிபாடு

முருகா! எத்தனை காலமாக இந்த வேண்டுதலை உன்னிடம் வைக்கின்றேன். ஆனால் என்னுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏன், என்று எல்லோரும்…

6 hours ago