9

பூடகங்களை பூரணமாக்கி பூரிக்க வைத்த கணங்கள் 
வேப்பங்கனியாய் கசந்தினிக்கிறது.

                       

 

                      ” உங்க இரண்டு பேருக்குள் என்னடி பிரச்சினை …? ” கௌரியின் பார்வை ஙேதிகாவின் மனதிற்குள் ஓட்டையிட்டு நுழைய முயன்றது .

” ஒன்றுமில்லையே …நாங்கள் சாதாரணமாகத தான் இருக்கிறோம் …”

” நானும் திருமணம் முடிந்தவள் .என் கணவனுடன் நிறைவாக வாழ்ந்து வருபவள் .கணவன் ,மனைவியின் அந்நியோன்னியங்களை என்னால் புரிந்து கொள்ள முடியும் .நீங்கள் இருவரும் உங்களுக்கிடையே ஒரு கோடு கிழித்துக் கொண்டு தள்ளியிருப்பதை என்னால் உணர முடிகிறது .உங்களுக்குள் என்ன பிரச்சினை …? “



” ம்ப்ச் …”

” நீ சொல்லாமல் நான் உன்னை விடப் போவதில்லை வேதா .திருமணம் முடிந்த மறுநாளே நீ உன் கணவரை பிரிந்து அம்மா வீட்டுக்கு  வந்து விட்டது எனக்கு தெரியும் .ஆறு மாதங்களாக நீங்கள் பிரிந்துதான் இருக்கிறீர்கள் .இதுவரை இந்த கேள்வியை நான் உன்னிடத்தில் கேட்டதில்லை .அப்படி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்பவள் நீயில்லை என்பதால் உன்னை வற்புறுத்த விரும்பாமல் விட்டு விட்டேன் .ஆனால் இப்போது …என் கண் முன்னாலேயே நீங்கள் பட்டும் படாமல் தள்ளி நிற்கும் போது …என்னால் கேட்காமல் இருக்க முடியாது …சொல்லு .என்னதான் நடந்த்து …? “

பட்டும் படாமல் தள்ளி நிற்பவனா அவன் …? வேதிகாவின் உள்ளம்  உணர்ச்சி வெள்ளத்திற்குள் வீழ்ந்து உறைந்த்து.

” இந்த திருமணத்தை நிறுத்த மாட்டீர்களா …? ” அப்பா , அம்மா காதில் விழாமல் குறைந்த குரலில் வேதிகா இதனை அமரேசனிடம் கேட்ட போது , அவன் கையில் ஏதோ ஒரு நகை பெட்டியுடன் வீட்டிற்கு வந்திருந்தான் .காலிங்பெல்லுக்கு கதவை திறந்த வேதிகா அவனை கண்டதும் நம்பிக்கை இல்லையென்றாலும், எதற்கும்  முயல்லாமே என்ற நப்பாசையுடன் கேட்டாள் .

” இந்த டிசைன் பிடித்திருக்கிறதா பார்த்து சொல்லேன் வேதா .பதினாறு பவுன் …” கையிலிருந்த நகைப் பெட்டியை திறந்து அவள் முகத்திற்கு நேராக அவன் விரித்து காட்டியது திருமாங்கல்ய செயின் .அதனை கைகளில் எடுத்து அவள் கழுத்தில் போடுபவன் போல் கொண்டு வந்தவன் திகைத்து விழித்த அவள் முகத்தை பார்த்துவிட்டு அந்த செயினை மெல்ல அவள் தோள்களில் படிவித்தான் .ஏனோ உடல் சிலிர்க்க ஒரு நிமிடம் கண் மூடிய வேதிகா ..பின்னால் தந்தையின் குரல் கேட்டதும் விலகி உள்ளே போனாள் .

” என்ன மாப்பிள்ளை …என் மகள் என்ன சொல்கிறாள் …? ” அருகாமையில் நின்றிருந்த இருவரையும் கவனித்தபடி வந்த சாமிநாதன் கேட்டார் .

” தாலி செய்து வந்தாயிற்று மாமா .அதனை வேதாவிடம் காட்டிக் கொண்டிருந்தேன் .”

” எங்கே பார்க்கலாம் …” விசாலாடசி ஆவலுடன் வர , மூவருமாக தாலி செய்த விபரங்களை பேசத் தொடங்க , வேதிகா தனது அடைக்கலமான மல்லிகையை தேடி வந்துவிட்டாள் .அவளது எண்ணங்கள் கேட்கப்படாத்தை தவிர வேறு  குறையொன்றும் சொல்ல முடியாமல் அழகாக அவள் திருமணம் நடந்து முடிந்துவிட்டது .



அப்போது மட்டுமல்ல அவர்கள் திருமணம் முடிந்த இரவன்று கூட அப்படித்தான் ,அவள் இங்கேதான் …தன் மல்லிகை தோழியிடம் தான் தஞ்சமடைந்திருந்தாள் .புதுப்பெண்ணும் , மாப்பள்ளையும் சுதந்திரமாக இருக்கட்டுமென்ற காரணத்துடன் அவர்கள் இருவரை மட்டும் அன்றைய இரவு வீட்டில் தனியாக விட்டு விட்டு மற்ற உறவினர்கள் அனைவரும் கல்யாண மண்டபத்தில் தங்கிவிட , அலங்காரங்களை சுமந்து கொண்டு அழைத்தலுடன் இருந்த படுக்கை அறையை கண்டு பயந்து போய் , வேதிகா மாடியேறி மல்லிகை கொடியினடியில் வந்து அமர்ந்து கொண்டாள் .

யாருமற்ற அமைதி கீழே அடர்ந்திருக்க , அமைதியற்ற நெஞ்சாய் வேதிகாவின் உள்ளம் ததும்பிக்கொண்டிருந்த்து .மாலைதான் மலர்ந்திருந்த மல்லிகை , மணத்தை சிதற வைத்துக்கொண்டு தரையில் சிதறிக் கிடந்த்து .மாடி அறைக்குள் கூட இருக்க பயந்துதான் அவள் வெளியே மொட்டை மாடியில் வந்து அமர்ந்து கொண்டிருந்தாள் .

” என்ன வேதா இங்கே வந்து உட்கார்ந்துவிட்டாய் …? ” கேட்டபடி இயல்பாக அவளருகில் வந்து அமர்ந்தான் அமரேந்திரன் .

பந்தயக் குதிரையாய் துடிக்க ஆரம்பித்தது வேதிகாவின் இதயம் .
” குளிரவில்லையா வேதா …உள்ளே வாயேன் …”

” ம்ஹூம் .” அவசரமாக தலையாட்டினாள் .” நான் இங்கேதான் படுக்க போகிறேன் ….” தொடர்ந்து அறிவித்தாள் .அந்த எண்ணத்துடன்தான் அந்த மெல்லிய துணி மெத்தையுடன் தலையணை , போர்வையுடன் இங்கே வந்து செட்டிலாகி இருந்தாள் .

” உனக்கு மொட்டை மாடியில் படுப்பது பிடிக்குமா …? எனக்கும் ரொம்ப பிடிக்கும் .நானும் இங்கேயே படுத்துக் கொள்கிறேன் …” சொன்னதோடு அவள் தோள்களை உரசியபடி அமரேசனும் சுவரில் சாய்ந்து கொள்ள திடுக்கிட்டாள் .

” இ..இல்லை .நீங்கள் உள்ளே போங்க .நான் மட்டும்தான் இங்கே இருக்க போகிறேன் …” நடுக்கத்தை வெளி காட்டாமல் முடிந்தளவு குரலை கம்பிரமாக்கி சொன்னாள் .

” ஏன் …? ” புருவம் சுருக்கியவன் பின் ” பயப்படாதே வேதா .நான்   அன்று போல்   முரட்டுத்தனமாக நடந்து கொள்ளமாட்டேன் …” என்றான் மென்குரலில் .

வேகமாக முகத்தை திருப்பிக் கொண்டாலும் , அவனது இந்த உறுதி போன்ற பேச்சு மனதிற்கு இதமளித்தது . அண்ணாந்து வானத்து நிலவை பார்த்தாள் .முழு நிலவாய் பூர்ணிமையாய் ஒளி வீசிக் கொண்டிருந்தாள் நிலா மங்கை .

” இன்று நிலா அழகாக இருக்கிறதில்லையா வேதா .உன் முகம் போல் மின்னுகிறது . உன் முகமும் அதே போல்தான் முழு நிலவாக …” சொன்னபடி ஒற்றைவிரலால் அவள் முகத்தை சுற்றி வட்டமிட்டவன் …” அப்படியே நிலா முகம் வேதா உனக்கு ” கிசுகிசுத்த அமரேசனின் குரலில் சிருங்கார ரசம் தளும்பி வழிந்த்து .வேதிகாவிற்கு மூச்சு திணறுவது போலிருந்த்து .இதயம் நிரம்பியிருந்த காற்றை பயந்து பயந்து நூலிழையாக வெளியேற்றினாள் .



” ஏன் ஜில்லென்றிருக்கிறாய் வேதா ….? அவ்வளவு குளிரில்லையே .பயப்படுகிறாயா என்ன …? ” அவள் மூக்கு நுனியை தொட்டு பார்த்த அவன் விரல் நுனி , திரும்பி புறங்கை அவள் கன்னத்தில் படிந்து குளிரை சோதித்தது . வேதிகாவிற்கு நிஜம்மாகவே உள்ளூற குளிரத் தொடங்கியது .அப்போது இதமாய் தென்றலொன்று அங்கே பரவ, வாசங்களை வாரி இறைத்தபடி கொடி மல்லிகைகள் பறந்து வந்து அவர்கள் மேல் பொழிந்தன.

ஆழ்ந்து மூச்சிழுத்து அந்த வாசனை நுகர்ந்தவன் ” இப்படி ஒரு மயக்கமான சூழ்நலையில் , மணமுடித்த புது மனைவியை பக்கத்தில் வைத்து பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்க முடியுமா வேதா …? ” மெல்லிய கெஞ்சல் கலந்து தாபத்துடன் ஒலித்தது அவன் குரல் .

பதிலின்றி தலை குனிந்தவளின் கன்னம் பற்றி நிமிர்த்தியவன் ” அன்று போல் வன்மையாய் இல்லை வேதா .மென்மையாய் உனக்கு கஷ்டம் இல்லாமல் …ஒரே ஒரு முத்தம் …ம் …சரியா …? ” கொஞ்சலும் , கெஞ்சலுமாக அவள் முகம் நோக்கி குனிந்தான் .

இதோ …இப்போது இவனை தள்ளி விட வேண்டும் …இப்போது … இப் ….போது ….இப்போ…தாவது …வேதிகா மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த போது அவனாகவே அவளை விடுவித்தான் .” உன் இதழ்கள் புதைகுழி போல் ….” முணுமுணுத்த உதடுகள்  மீசையின் உராய்தலோடு  கன்னம் உரசின .

”  நிறுத்த முடியவில்லை வேதா .இன்னமும் ஒன்று ….” மீண்டும் அவன் ஆரம்பித்த போது , தொட்டு ….தொட்டு ….தொடர்ந்த போது …வேதிகாவின் கைகளுக்கு தடுக்கும் வகையோ , வழியோ தெரியவில்லை .மிரண்டு அவள் விழித்த போது ” பயப்படாதே …” என தைரியம் கொடுத்து , முழுமையாக அவளை எடுத்துக் கொண்டான் இறுதியாக அவள் முழுதும் தனை நிரப்பி அவன் விலகியபோது தன்னுடல் முழுதும் வீசிய அவன் ஆண் வாசனையில்  வேதிகாவின் மனம் தடுமாறி தோல்வியை உணர்ந்த்து .

இவன் …இவன் …என்னை ஏமாற்றி ஜெயித்துவிட்டான் .நான் …இவனை தள்ளி நிறுத்த நினைத்திருந்தேன் .என் மனம் தெரிந்தும் , ஏதேதோ பேசி என்னை பலவீனப்படுத்தி என்னை அடைந்துவிட்டான் .நிகழ்ந்த்தை ஏற்க முடியாமல் குமுறியது அவள் உள்ளம் .ஏனிப்படி பலவீனமானேன் …? தன்னை தன்னாலேயே ஏற்க முடியாமல் முழங்கால்களுக்குள் புதைந்திருந்த அவள் தலை இதமாக வருடப்பட்டது .

” இதை குடி வேதா …” சரியான பத்த்துடன் கலக்கப் பட்டிருந்த அந்த சாக்லேட் பானம் அவள் நாசிக்குள் வாசமாக நுழைந்து அவளை ஆசுவாசப்படுத்தியது .இவனாகவே கலந்தானா …? அவள் வீட்டில் ஆண் பிள்ளைகள் அடுப்பை தொடுவதில்லை . அது ஆண்மைக்கு இழுக்கு என்று பேசிக்கொள்வார்கள் .அமரேசனை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை .

” இனிப்பு சரிதானே ….எனக்கு காபி ,டீ …எல்லாவற்றிற்கும் அரை ஸ்பூன் சீனிதான் .உனக்கு எப்படி வேதா ? ” கேட்டபடி தன் கை டம்ளருடன் அவளருகே சாய்ந்து அமர்ந்து கொண்டான் .” பெரிய அளவில் கஷ்டமொன்றும் இல்லையே …? ” இந்த குறிப்பான   அந்தரங்க கேள்வியில் வேதிகாவின் உடல் தூக்கி போட்டது .



” நான் உள்ளே போகிறேன் …” சட்டென கை டம்ளருடன் எழுந்து உள்ளே வந்துவிட்டாள் .  அப்போது  இனியொரு முறை உடலால்  இவனை எதிர் கொள்வது கடினமெனவே நினைத்தாள் .ஆனால் அதையும் எளிதாக்கின பின்னேயே உள்ளே வந்த அமரேசனின் செயல்கள் .ஏதோ சொல்லி …என்னவோ செய்து என சுளுவாக அவளை கை வசப்படுத்தும் கலையை அவன் மிக நன்றாக தெரிந்து வைத்திருந்தான் .முடிவில் அந்த இரவு முழுக்க , முழுக்க அவனுக்கானதாய் மாறிப் போனது .கொடி மல்லியின் வாசம் கலந்து முழுவதும் அவளுள் நிறைந்து போனான் அமரேசன் .

ஏதேதோ வண்ணங்களுடன் நொடிக்கொரு பாவனை காட்டிக் கொண்டிருந்த தோழியின் முக குறிப்பில் அசுவராஸ்யமாகி உச்சு கொட்டினாள் கௌரி .அவள் தோள்களை பற்றி உலுக்கினாள் .

” ஏய் …இந்திர லோகத்திலிருந்து பூலோகத்திற்கு வாடி .என்ன இந்திரலோகத்தில் ….மன்னனுடன் காதலா …? “

” கொன்னுடுவேன் உன்னை .எந்திரச்சு போடி …”



” இல்லைடி .நான் எவ்வளவு கேட்டாலும் நீ வாயை திறக்கிறதாக இல்லை .ஆனாலும் உன் முகம் கொஞ்சம் என்னிடம் ஏதோ சிலது சொன்னது .இந்திரலோக ராஜா …அமரன் தானே …? “

சிவந்துவிட்ட முகத்தை மறைக்க வேதிகா எடுத்த பிரயத்தனங்கள் தோற்று போக , கையிலிருந்த துணியால் கௌரியை அடிக்க தொடங்கினாள் . தோழியின் செல்ல அடிகளை வாங்கி கொண்டவள் …” உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிரச்சனை இல்லைன்னு தோணுது .வேறு யாருடி பிரச்சினை …? உன் மாமியாரா …? ” எனக் கேட்டாள் .

மரத்த பார்வையுடனிருக்கும் மங்கையர்க்கரசி நினைவிற்கு வர வேதிகாவின் மனம் கசந்து வழிய ஆரம்பித்தது .” அங்கே யாருமே சரியில்லைடி …” சலிப்பாய் சொன்னவளின் மனதில் மங்கையர்க்கரசி , திலகவதி , மௌனிகாவுடன் …அமரேசனும் இருந்தான் .

What’s your Reaction?
+1
2
+1
4
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1

Padma Grahadurai

Website Admin

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

11 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

11 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

11 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

11 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

15 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

15 hours ago