#தங்க_தாமரை_மலரே 

நாவலின் ஆசிரியர் கடிதத்தில் …என் மன எண்ணங்கள் சிலவற்றை, உங்களுடன் நான் …

வாசகர்களுக்கு வணக்கம் ,

நான் உங்கள் பத்மா கிரகதுரை .மீண்டும் ஒரு கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் ..நகை ஆசாரி என்று ஒருவர் முன்பெல்லாம் கையில் கேட்லாக் எனும் ஓரம் நைந்த புத்தகத்துடன் நம் வீடு தேடி வருவார் . எனது பிள்ளை பிராயத்தில் இவரை எங்கள் வீட்டில் அடிக்கடி பார்த்திருக்கிறேன் .தன்னிடமிருந்த நோட்டை விரித்து செயின் , மோதிரம் , கம்மல் , அட்டிகை , மாட்டல் என விதம் விதமான டிசைன்களை காட்டுவார் . அம்மா கையில் இருக்கும் அந்த நோட்டை மெல்ல எட்டிப் பார்ப்பேன் . கையில் , காதில் , கழுத்தில் என மின்னும் நகைகளின் மாதிரியை எதிர் பார்த்தால் அதில் இருப்பவை அந்த மாதிரிகளில் பார்க்க உவப்பாக இருக்காது .ஏதோ கோடும் , வட்டமும் , புள்ளியுமென தலை சுழல வைக்கும் .அம்மா அதனை பார்த்தே எனக்கு இங்கே ஒரு சிகப்புக்கல் …இந்த இழையின் கூர்மையை தேய்த்து விடுங்கள் …கழுத்தில் குத்தும் , கொக்கி இரட்டை கோர்ப்பாக போடுங்கள் என்று மாதிரி சொல்லிக் கொண்டிருப்பார் .சில நாட்களிலேயே அந்த நகை அம்மாவின் காதிலோ , கழுத்திலோ மின்னும் . நாமெல்லாம் இப்படித்தான் நகைகள் வாங்கினோம்.அம்மாவின் நகைகளில் பாதிதான் எனக்கென திருமணத்திற்கு போடப்பட்டது .கூடவே எனக்கென சில நகை செட்டுகளும் அதே ஆசாரி மூலம் செய்விக்கப்பட்டு .அப்போதெல்லாம் அந்த கேட்லாக்கில் டிசைன் சொல்லுமளவு நானும் தேறிவிட்டானாக்கும் .

இதோ சில நாட்களுக்கு முன் என் மகளின் திருமணம் .இப்போது என் மகள் முதலிலேயே சொல்லிவிட்டாள் உங்கள் ஆதிகால அரசர் ( ?! ) நகையையெல்லாம் என்னிடம் தூக்கிக் கொண்டு வராதீர்கள் .எனக்கு எல்லோமே நியூ மாடல் வேண்டுமென்று ….பெரிய பெரிய நகைகடைகளை அணுகி ஏசியும் , குளிர்பானமுமாக அவள் தனக்கான நகைகளை தேர்வு செய்தாள் .மாறி விட்ட காலம் மண்டைக்குள் ஓட மகளின் நேர்த்தியான தேர்வுகளை பார்த்து வியந்த வண்ணம் அமர்ந்திருந்தேன் நான் . இதோ குவியலாக கிடக்கும் இந்த நகைகளை செய்தவர்கள் யார் …இவற்றின் தரங்கள் எந்த அளவில் இருக்கும் ? இங்கே இருக்கும் அனைவருமே நகை செய்ய தெரிந்தவர்கள்தானா ? குட்டி தொழிற்சாலையாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த நகை கடைகளை விழி சுழற்றி பார்க்கிறேன் .ஒரு நகை செட்டை கையில் எடுத்தால் போதும் உடனே இரண்டு விற்பனை பெண்கள் அருகே வந்து விடுகிறார்கள் .பட்டுச்சேலை போல் ஒரு தாவணி துண்டினை தயாராக கையில் வைத்திருக்கிறார்கள் .அதனை



வாடிக்கையாளர் அணிந்திருக்கும் மாடர்ன்உடை மேல் சேலை போல்
போட்டு நகைகளை உடல் முழுவதும் அடுக்கி கண்ணாடி முன் நிறுத்துகிறார்கள் .கழுத்தணியை மட்டும் எண்ணி வந்தவர்களை காது , கை அணிகளையும் மொத்தமாக வாங்க வைத்துவிடும் சாதுர்ய வியாபார பேச்சு .இந்த நாகரீக கவர்ச்சியில் மங்கிய வெள்ளை வேட்டியும் , அழுக்கு சந்தன சட்டையும் அணிந்த வீடு தேடி வரும் பழைய தங்க ஆசாரிகள் கரைந்து உதிர்ந்து போய்விட்டதாக உணர்ந்தேன் .

1990 வரை நம் நாட்டில் தங்க நகை வரம்பு சட்டம் அமலில் இருந்த்து .அப்போது்ஒருவர் 100 கிராம் நகைக்கு மேல் கொண்டு செல்ல முடியாது. ஆனால் இப்போது அந்த சட்டம் இல்லாததால் இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் நகைகள் குவியல் குவியலாக இது போன்ற பெரு வணிக நிறுவனங்களிடையே பரிமாறபப்படுகின்றன என அறிந்து கொண்டேன் .பழைய பொற்கொல்லர்களின் வீழ்ச்சிக்கும் , தங்க நகை வியாபாரத்தின் சமீப எழுச்சிக்கும் இதுவே காரணமாக அமைந்து விட்டிருக்கிறது .கூடவே தற்கால வனிதைகளின் நாகரீக மாற்ற ஆவல்களும் இப் பிரமாண்ட நகை நிறுவனங்களை வளர்த்து வருகின்றன .

சரி போதும் .இனி கதையை பற்றிகொஞ்சம் பேசலாம் . இக் கதை தங்க நகைகள் தயாரிக்கும் தொழில் குடும்பத்தினரை சுற்றி நகர்வது. நகை தொழிலாளர்களின் ஏற்ற இறக்கங்களையும் , நகை தொழிலின் சில நுணுக்கங்களையும் நான்றிந்த வரையில் சொல்லியிருக்கிறேன் .கூடவே தனக்கான முடிவை …எதிர்கால வாழ்வை ஒரு பெண் அவளேதான் …அவளை மட்டுமே முன் நிறுத்தி தேர்ந்தெடுக்க வேண்டுமென சொல்லியிருக்கிறேன் . இக் கதையில் வரும் கமலினியும் , ராஜசுலோச்சனாவும் இவ்வகை பெண்களே .பாரிஜாதம் தயங்கி தடுமாறி இறுதியில் தன் வாழ்வை தானே கையில் எடுத்துக் கொண்ட தைரியம் வந்துவிட்ட பெண் .விஸ்வேஸ்வரன் சம்பிரதாயம் மாறாத… மாற மனமற்று தடுமாறும் சராசரி ஆண் . தாயாலும் , காதலியாலும் விருப்பத்துடனேயே நிகழை ஏற்றுக்கொண்டு சந்தோசமாகவே மாறுகிறான் . சந்தானபாரதி போன்ற ஆண்கள் நம் சமூகத்தில் பல்கி பெருக வேண்டும் .பெண்களின் உணர்வுகளை மதிக்கும் புதிய சமுதாயம் உருவாக வேண்டும் .

கதையை வாசித்து விட்டு உங்கள் நிறை குறைகளை என்னுடன் Padma.graham@gmail .com என்ற மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்கள் .அனைவருக்கும் பேரன்பும் , பிரியங்களும் .

                                                                                                                    

                                                                                               அன்புடன் உங்கள்
                                                                                                பத்மா கிரகதுரை

What’s your Reaction?
+1
2
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

View Comments

  • Melliya pennin unarvugal ungal ezhuthukkalal kavidhai aagiradhu..... Azhagiya sindhanaigaludan samooga seithiyudan oru kadhai. ..... Arumai

  • மிக மிக அருமை. பெண்களுக்கான நாட்களில் ஆண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைமை பற்றிய கருத்து மிக அழகு.

Recent Posts

அர்ஜூனரு வில்லு பாடலில் நடந்த சுவாரசியம் … இயக்குனர் தரணி!…

நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் திரைப்படமான கில்லி   ரீ- ரிலீஸ் பிறகு பல விஷயங்கள் வைரலாகி வருகிறது.…

3 hours ago

மண் இல்லாமல் கொத்தமல்லி செடி வளர்க்கலாம் அதுவும் 5 நாளில்!

நமது வீட்டிற்கு தேவையானதை நாமே தயாரிப்பது சிறந்தது. உயர்ந்து வரும் விலைவாசி காரணமாக நமக்கு தேவையான காய்கள் மற்றும் கீரைகளை…

3 hours ago

கமல்ஹாசன் பற்றி ஸ்ருதி பகிர்ந்த சீக்ரெட்!

உலகநாயகன்  கமலஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதி ஹாசனுக்கும் இடையிலான தந்தை - மகள் உறவு மிகவும் அழகானது. தனது தந்தையைப்…

3 hours ago

உலகின் டாப் 5 பணக்காரர்களின் கல்வி பின்புலம் தான் என்ன?

உலகின் டாப் 5 பணக்காரர்களை உருவாக்க உதவிய கல்விப் பின்புலம் மற்றும் முக்கியமான கற்றல் அனுபவங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.…

6 hours ago

சிட்டியால் முத்துவுக்கு வந்த புது சிக்கல் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கார்…

6 hours ago

நள்ளிரவு இமானிற்க்கு கால் செய்த தளபதி விஜய்!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படங்களின் வெற்றிக்கும் பக்கபலமாக இருந்து வருவது படங்களில் அமையும் பாடல்கள் தான். திரைப்படங்களில் பாடலுக்கு என…

8 hours ago