Kadal Kaatru – 37

                                                37

” அவுங்களை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ..? இரண்டு வாய் சோறு வாயில் வைக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன அவ்வளவு வெறுப்பு அவுங்க மேல் ..? ” கட்டிலில் அமர்ந்தபடி கத்தினாள் சமுத்ரா .

சமுத்ராவின் பிடிவாத்த்தினால் தினமும் யோகன் அவளுடன் உண்ண அமர்ந்தாலும் , உண் ணுவதாக பேர் பண ணிக்கொண டுதான் இருந்தான் .தட டிலேயே கை கழுவி விட்டு அரைகுறை சாப்பாட்டில்  எழுந்து கொண டிருந்தான் .

யோகன் பதிலின்றி அடுத்த அறையில் சோபாவில் படுக்க ஆயத்தமாவதை காணவும் ஆத்திரம் கூடியது அவளுக்கு .

” உங்கள் அம்மாதான் தான் செத்த பின்பு உங்கள் அப்பாவும் , புவனாம்மாவும் திருமணம் செய்து கொள்ள  வேண்டும் என்று இருவரிடமும் சத்தியம் வாங்கிக் கொண்டு செத்்தார் தெரியுமா ..? ” மீண்டும் கத்தினாள் .

” தெரியும் …” படுத்தபடியே அமைதியாக சொன்னான் யோகன் .” அப்போதுநானும் இருந்தேன்  .ஆனால் அதற்கு என்ன காரணமென்று அந்த அம்மா உன்னிடம் சொல்லவில்லையோ …? ” எள்ளல் இருந்த்து அவன் குரலில் .

புவனா சொன்னாள்தான் .மிகவும் அசிங்கத்துடனும் , அவமானத்துடனும் .உடல்நலம் சரியில்லாத பெண்ணை கவனிக்க வந்தவள் , அந்த பெண் ணுடைய கணவனிடம்  ஈடுபாடு ஏற்பட்டுவிட , செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தாள் .ஆனால் மயில்வாகன்னுக்கு அந்த தவிப்பேதும் இல்லை .அவனது பார்வை இளவயது புவனாவிடம் குவிந்திருந்த்து .

இவர்களது உறவு மாலதிக்கு தெரிய வந்த போது அவளுக்கு யாரை நோவதென்று தெரியவில்லை .எழமுடியாமல் படுக்கையில் கிடக்கும் தன் நிலையையா ? மனைவியின் சுகவீனத்தை பற்றி நினைக்காமல் வேலைக்காரியுடன் சுகித்த கணவனையா ? …

அவளுக்கென்னவோ தங்கள் நிலையை புவனா தனக்காக பயன்படுத்திக் கொண்டாளெனறுதான் தோன்றியது .அவளை வீட்டை விட்டு விரட்டத்தான் எண்ணினாள் .ஆனால் அதிலும் சிக்கல்கள் .முதல் காரணம்  புவனாவின் வேலைகளுக்கு மாலதியின் வீடு பழகியிருந்த்து .பிள்ளைகள் இருவரும் அவளிடம் நன்றாக ஒட டிக் கொண்டிருந்தனர் .ஒட்டிக் கொண்டது 
அவர்கள் அப்பாவும் சேர்ந்துதான் என்பது இப்போதுதானே மாலதிக்கு தெரிய வந தது .புவனாவை வீட்டிலிருந்து வெளியேற்றினால் , இப்போது மாலதியின் குடும்பத்தை கவனிக்க ஆள் கிடையாது .

இரண டாவது புவனா கர்ப்பமாக இருந்தாள் .இந்த நிலைமையில் அவளை வெளியேற்றுவதில் மயில்வாகனத்திற்கு அவ்வளவு விருப்பமில்லை .மாலதிக்கோ அதிக வாழ்நாட்கள் இல்லை .அவள் இறந்த்தும் , நிச்சயம் மயில்வாகன்ன் வேறொரு திருமணம் செய்யத்தான் போகிறான் .வருபவள் எப்படி இருப்பாளோ …? எனவே …தெரியாத  பேய்க்கு தெரிந்த பிசாசே மேல் என்ற முடிவுக்கு மாலதி வந்தாள் .அதே சமயம்  தனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் ஒரு யோசனை செய்தாள் .

அதன் விளைவு …தான் இறந்த்தும் மயில்வாகன்னும் , புவனாவும் திருமணம் செய்து கொள்ள வேண டும் என தன் குழந்தைகள் முன் சத்தியம் வாங்கினாள் .தனிமையில் புவனாவிடமும் , தன் கணவனிடமும் இவர்கள் இருவரும் குழந்தையே பெற்றுக் கொள்ளக் கூடாது என சத்தியம் வாங்கினாள் .இப்போது உருவான குழந தையையும் அழிக்க வேண டுமென்றாள் .

ஏற்கெனவே மனைவிக்கு துரோகம் செய்த உறுத்தல் மனம் நிறைய இருக்க , மயில்வாகன்ன் மாலதி சொல்வதற்கெல்லாம் தலையாட்டினான் .அவனை திருமணம் செய்வதை தவிர தனக்கு வேறு கதியில்லையென்பதால் , புவனாவும் கண ணீரும் வேதனையுமாக தன் குழந தையை கலைத்தாள் .



இறுதியாக உயிரோடிருந்த இரண்டு மாதங் களும் புவனாவை அதிகம் நம்ப வேண்டாமென்ற விசத்தை தன் பிள்ளைகள் மனதில் ஊற்றிவிட்டுத்தான் மாலதி  மறைந்தாள் .தன் பிள்ளைகள் நன்மைக்காக என று எண்ணி செய ததுதான் .ஆனால் விஷ விருட்சமாக பிள்ளைகள் மனதில் வளர்ந்து விட , அம்மா இறந்த உடன் திருமணம் செய்த அப்பாவை வெறுத்து வீட்டை விட டு வெளியேறினான் யோகன் .உள்ளேயே பொருமியபடி இருந்தாள் செல்வமணி .

மனைவிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பதற்காக அடுத்து இரண டு முறை வலுக்கட்டாயமாக புவனாவின் கருவை கலைக்க வைத்தான் மயில்வாகன்ன் .தனது தவறை மன்னித்து ,அந்த பெண்ணுடனேயே திருமணம் செய்து வைத்த மனைவி மாலதி மயில்வாகன்ன் மனதில் தெய்வமாக மாறிவிட டாள் .புவனாவின் தட்டு அவன் மனதில் சரிந து விட டது .தேள் கொடுக்காக மாறி அவளைக் கொட்டிக் கொண்டிருந்தான் .

புவனாவின் கதையை யோகனின் அருகில் வந்து நின்றபடி சொல்லி முடித்தாள் சமுத்ரா .”தவறெல்லாம் உங்கள் மீதும் ,உங்கள் அப்பாவின் மீதும் தான் .இதில் இவர்களை குறை சொல்லி என்னபயன் ? உங்களின் இந்த அலட்சியத்திற்கு நான் காரணம் சொல்லட்டுமா ..? அவர்கள் ஆதரவில்லாத பெண் .என்னைப் போல. ஆதரவற்ற பெண்களை காலடியில் போட டு மிதிப்பதுதான் உங்கள் குடும்ப பழக்கமாயிற்றே ..!”

யோகன் பதில் சொல்லாமல் கண்களை இறுக மூடி படுத்திருந்தான் .இவ்வளவு சொல்கிறேன் அசையாமல் படுத்திருக்கிறான் பாரேன் .அவனை வெறுத்தபடி , ” அன்று உங்கள் அப்பா புவனா அம்மாவின் கருக்களை கொன்ற பாவம்தான்  இன்று உங்கள் அக்காவின் வயிற்றில் ஒரு கரு வளரவிடாமல் தடுக்கிறது .” யோகனிடம் சலனமில்லை .

” அது மட்டுமல்ல அந்த பாவம்தான் இதோ இப்போது என் வயிற்றில் வளரும் உங்கள் குழந்தையைக் கூட கலைக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது ” இதனை சமுத்ரா வேண டுமென்றேதான் கூறினாள் .யோகனை குத்த வேண டுமென்றுதான் கூறினாள் .

” போதும் உன் கதாகாலட்சேபத்தையெல்லாம் கேட்டுவிட்டேன் .போ..போய் ..படு ” யோகனின் குரல் மிகவும் கோபத்துடன் ஒலித்தது .ஆனால் படுக்கையில் படுத து கண்களை மூடியபடியேதான் இதனைக் கூறினான் .

நீ …போ..என று சொன்ன உடன் போய் விடுவதற்காக நான் இவ்வளவு கதையையும் கஷ்டப்பட டு கேட்டு வந்தேன் என்றெண ணியபடி ” இதனை ஒத்துக்கொள்கிறீர்கள்தானே ..? இப்போது நாளை சென்னைக்கு போவோமா ..?இல்லை …நானாக போவதானால் அந்த பாட்டியைத்தான் போய் பார்க்க வேண டும் .இல்லை புவனாம்மாவிடம் ஐடியா கேட்கட டுமா ..? அவர்கள் இதில் மிகவும் பழக்கப்பட டவர் பாருங்கள் …” கொஞ்சு மொழி பேசிக் கொண்டு இருந்தவள்  யோகனின் வேகத்தில் பயந்து விட்டாள் .

அவ்வளவு வேகத துடன் எழுந்த யோகனின் கைகள் சமுத்ராவின் கழுத்தில் பதிந்திருந்த்து .” பேச்சை நிறுத்தி விட்டு போய் படுக்கிறாயா ..இல்லையா …?” உறுமினான் .கைகளை கழுத்தை நெரிப்பது போல் அழுத்தினான் .

ஒரு நிமிடம் பயந்த சமுத்ரா கழுத்தை உயர்த்தி அவன் நெரிக்க தோதாய் காட்டினாள் . ” ம் …கொன்று விடு …இப்போது இதை விட பெரிய விடுதலை எனக்கு எதுவும் கிடையாது ” என்றாள் .



” ராட்சசி ஏன்டி இப்படி பண ணுகிறாய் ? ” கழுத்தில் அழுத்தத்தை குறைத்து வருடினான் .அப்படியே அவளை அள்ளி இழுத்து இறுக அணைத்துக் கொண்டான் .

” இது இப்படித்தான் என்று எனக்குள் ஒரு வட்டம் வரைந்து கொண்டு , அதுவே சரியென று நம்பிக்கொண் டு இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன் .இப்போது திடீரென உள்ளே நுழைந்து உனது அடிப்படை எண்ணமே தவறு என்கிறாயே ..? இப்போது நான் என்ன செய்யட்டும் ..? ” சமுத்ராவின் கழுத்தில் தன் முகத்தை புதைத்த வண்ணம் பேசிக் கொண்டிருந்தவனின் குரல் கம்மி கரகரத்தது .

சற்று நேரம் முன்பு வரை கூட , பெரிய வெற்றி பெற்று விட்டதாக எண்ணிக் கொண்டிருந்த சமுத்ராவிற்கு ஏனோ இப்போது அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது போல் தோன்றியது .மிகப் பெரிய புயலொன்று  தாக்கியதாய் உணர்ந்தாள் .

வெற்றிடமாகி விட்ட மனதுடன் நிமிர்ந்து பார்த்தவள் திடுக்கிட்டாள் .எதிரிலிருக்கும் நிலைக் கண்ணாடியில் யோகன் அவளை அணைத்தபடியிருந்த பிம்பம் தெரிந்த்து .உடைந்து போய் அவள் தோள்களில் சரிந்திருக்கும் யோகனை ஆறுதல் படுத்துவதற்காக அவளுடைய …சமுத்ராவுடைய கரங்கள் உயர்ந்து கொண் டிருந்தன .யோகனின் தோள்களை தழுவுவதற்காக.

தனது கைகளின் அந்த செய்கையை நம்ப முடியாமல் பார்த்தபடி அப்படியே ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தாள் சமுத்ரா .

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

3 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

3 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

3 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

3 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

7 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

7 hours ago