Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 4

4

பாரிஜாத்த்தின் சுட்டலில் மற்ற இரண்டு பெண்களும் முகம் வாட நிற்க , அவனின் பார்வை இவர்கள் மேல் விழுந்தது .ஐந்து பேரையும் பொதுவாக அளந்தவன் கமலினி மேல் கொஞ்சம் அழுத்தமாக பார்வையை பதித்தான் .கமலினியை விரல் நீட்டி சுட்டினான் .

” இந்தப் பெண் வேண்டாம் .மற்ற நால்வரும் இருக்கட்டும் …”

கமலினி கலக்கத்துடன் பாரிஜாத்த்தை பார்க்க அவள் முகம் இவளை விட கலங்கியிருந்த்து .

” ஏன் …? இவளுக்கு என்ன …? நான் செலக்ட் செய்து விட்டேன் . மாற்றாதீர்கள் …” கத்தலாக உயர்ந்த்து பாரிஜாத்த்தின் குரல் .

அவன் முகம் கடினமானது .” நீங்கள் எல்லோரும் வெளியே வெயிட் பண்ணுங்கள் ” இவர்களை வெளியே அனுப்பிவிட்டான் .

” வெளியாட்களை வைத்துக் கொண்டு இதென்ன பேச்சு …? ” அவனது அதட்டல் பேச்சு இறுதியாக வெளியேறிய கமலினியின் காதுகளில் அரை குறையாக விழுந்த்து .

ஐந்து பெண்களும் வெளியே வந்து கொஞ்சம் குழப்பத்துடன் நின்றிருந்தனர் .சதாசிவம் அறைக்குள் சென்றார் .பத்து நிமிடங்கள் கழித்து வந்தவர் …” உங்கள் போன் நம்பர்களை கொடுத்து விட்டு நீங்கள் ஐந்து பேரும் போகலாம் .உங்களுக்கு போனில் தகவல் வரும் ” என்றார் .




போன் நம்பரை கொடுத்து விட்டு கமலினி சோர்வுடன் வெளியேறினாள் . இந்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவென அவளுக்கு தெள்ளென தெரிந்தது .அவளது வீட்டு நிலைமை அவளை மருட்டியது .நல்ல வேளை இந்த வேலையை பற்றி  அம்மாவிடம் எதுவும் சொல்லவில்லை .அவர்களையும் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது போல் ஆகியிருக்கும் .கெட்ட நேரத்திலும் இதுவொரு நல்ல நேரம் என ஏதோ நினைத்தபடி தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு  பஸ்ஸில் ஏறினாள் .

ஏதோ ஒரு சிக்னலில் பஸ் நின்ற போது பார்வையை வெளிப்புறம் போட்டவள் அந்தக் காரை பார்த்ததும் கூர்மையானாள் .அது அன்று காலை ஸ்வர்ணகமலம் கடை வாசலில் வந்து நின்ற …எம்.டி பாரிஜாதம் இறங்கிய கார் .மேடம் இருக்கிறார்களா …? அதற்குள் கிளம்பிவிட்டார்களா …? ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தாள் .

அடர் நிற சன் ஸ்டிக்கர் ஒட்டியிருந்த அந்த காரினுள் இருப்பவர்கள் யாரையும் பார்க்க முடியாது போக , ஏமாற்றத்துடன் அவள் திரும்ப நினைத்த போது , வெண்ணெய் கத்தியின் குழைவுடன் கார் வின்டோ மிர ர் மெல்ல இறங்கியது . கமலினி ஆவலுடன் உள்ளே பார்த்தாள் . உள்ளே …

டிரைவிங் சீட்டில் பாரிஜாதம் அமர்ந்திருந்தாள் . சீட் பெல்ட் போட்டுக் கொண்டு சாலையை நேராக பார்த்தபடி இமையசைக்காமல் அமர்ந்து கொண்டிருந்தாள் .அவள் கைகள் அழுத்தமாக ஸ்டியரிங்கை பிடித்திருந்த்து .

அவளுக்கு அருகே இருந்த சீட்டில் அவன் அமர்ந்திருந்தான் .சீட் பெல்ட் போட்டிருந்த்தால் அவன் உடல் சீட்டோடு அழுந்தியிருந்தாலும் அவன் தலை முழுவதுமாக திரும்பி பாரிஜாத்த்தையே பார்த்தபடி இருந்த்து . அவன் முகத்தில் இறுக்கம் இருந்த்து .வாய் மூடாமல் பாரிஜாத்த்திடம் பேசியபடி இருந்தான் அவன் .இரண்டே விநாடிகளில் கமலினி புரிந்து கொண்டாள் . அவன் பாரிஜாத்த்தை திட்டிக் கொண்டு இருக்கிறான் .

பாவம் , இன்று நடந்த சம்பவங்களுக்காகவோ இந்த திட்டுதல் …?    இரக்கமாக பாரிஜாத்த்தின் முகம் பார்த்தாள் . இதன் காரணம் தான் தானோ …? தன் குழந்தை சௌபர்ணிகாவிற்காக இவளுக்கு வேலை போட்டுத் தர பாரிஜாதம் முன் வர அது பிடிக்காமல் இவன் தடுத்ததோடு திட்டவும் செய்கிறானோ …? ஆனால் எனக்கு வேலை தருவதில் இவனுக்கென்ன நஷ்டம் …? ஒரு வேளை மனைவி என்ன சொன்னாலும் அதனை மறுத்து பேசும் கணவன் வகையறாவோ இவன் …?

கமலினி அந்த நிமிடத்தில் அவனை மிகவும் வெறுத்தாள் .ஏனெனில் சிக்னல் விழுந்த்தும் அவர்கள் காரை முந்தி இவர்கள் பஸ் போக அந்த நேரம் காரின் முன் கண்ணாடி வழியாக தெரிந்த பாரிஜாத்தின் கண்களில் கண்ணீர் துளிகளின் மின்னுதல் .நடு ரோட்டில் வைத்து மனைவியை அழ வைப்பவன் எப்பேர்பட்ட மனிதனாக இருப்பான் …? சரிதான் போடா …நீயெல்லாம் ஒரு பெரிய மனிதனா …? மனதார அவனை ஐந்து நிமிடங்கள் வைது விட்டு சிறிது நிம்மதியானாள் .

அந்த சிடுமூஞ்சியிடம் வேலை பார்ப்பதற்கு நான் சும்மாவே வீட்டில்  இருந்து விடுவேன் … வீட்டிற்கு போனதும் வேலை விபரம் கேட்ட தந்தைக்கு பதிலாக ” நாளை போன் செய்வதாக சொல்லியிருக்கிறார்கள்பா ” என்று வெளியே சொல்லி விட்டு மனதிற்குள் இப்படி சொல்லிக் கொண்டாள் .திரும்பி பார்த்த போது வாசல் பக்கம் கனகத்தின் சேலை நுனி தெரிந்து மறைய  , சை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள் …அவள் மனம் கசந்த்து .

அன்று மாலை வீட்டில் இன்னுமொரு சிறு சச்சரவு …

அவர்கள் தூரத்து உறவினர் ஒருவர் வீட்டு திருமண வரவேற்பு .அவர் கொஞ்சம் வசதியானவர் எனபதால் குணசீலன் – கனகம் குடும்பத்தினர் அனைவருமே அங்கே போக கிளம்பிக் கொண்டிருந்தனர் . வேலாயித்த்தின்  தொழில் தோல்விக்கு பிறகு , அவரது குடும்பம் இது போன்ற விசேசங்களை பெரும்பாலும் தவிர்த்து விடுவதால் , குணசீலன் குடும்பம் மட்டுமாக களம்பிக் கொண்டிருந்தனர் .

அப்போது திருமண வீட்டாரிடமிருந்து போன் .மணமகளின் தாய் பேசினாள் . கிளம்பிக் கொண்டிருந்த அவசரத்தில் கனகம் ஒலித்த வீட்டு போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டு கத்தலாக பேசினாள் .




” சௌந்தரி அக்கா …இதோ கிளம்பிட்டே இருக்கேன்கா …”

” நீ எங்கே கிளம்புகிறாய் கனகம் …? ” எதிர்புறம் சௌந்தரி கேட்க கலகலத்துக் கொண்டிருந்த வீடு அமைதியானது .

” உன் அம்மா வீட்டு பக்கம் எதுவும் பங்சனா …? அங்கே கிளம்புகிறாயா …? சரி நீ அங்கே கிளம்பு .இன்று எங்கள் வீட்டு திருமண ரிசப்சன் .இதனை வேலாயுதம் அண்ணனிடமும் , புவனா அண்ணியிடமும் நினைவுபடுத்தி உடனே கிளம்பி வரச் சொல்லு .ம் …கூடவே வெற்றிமாறனையும் , கமலினியையும் மறக்காமல் கூட்டிக் கொண்டு வரச் சொல்லு .சரியா …? இதனை அண்ணனுக்கு நினைவு படுத்தத்தான் போன் செய்தேன் .எனக்கு அடுத்தடுத்த வேலை இருக்கறது .வைக்கிறேன் …” போன் வைக்கப்பட்ட சத்தம் வீடு முழுவதும் அதிர்ந்து பரவியது .

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த கமலினி பீறிட்டு வந்த சிரிப்பை முழுக்க மறைக்காமல் அவர்கள் பார்க்க பாதி சிதற விட்டபடி வாய் மூடி உள்ளே ஓடினாள் .இந்த செய்கையில் ஆத்திரமுற்ற சங்கவி இரண்டு மணி நேரமாக ப்யூட்டி பார்லரில் உட்கார்ந்து போட்டு கொண்டு வந்திருந்த தனது நவீன கொண்டையை அவிழ்த்து போட்டு , ” நான் இந்த பங்சனுக்கு வர மாட்டேன் ” எனக் கத்திக் கொண்டு மாடியேறி ஓடினாள் .

” இப்படி எங்களை அவமானப்படுத்த வேண்டுமென்பது உங்களுடைய எத்தனை நாளைய பிளான் …? ” கனகம் கத்தினாள் .

மனைவியின் ஆத்திரம் குணசீலனுக்கு  அண்ணனின் மேல் கோப பார்வையாக திரும்ப , வேலாயுதம் தர்மசங்கடமாக விழித்தார் .தம்பி குடும்பத்தின் கோபம் ஒரு புறமிருக்க இந்த பங்சனுக்கு போயே ஆக வேண்டியதாகி விட்ட சூழல் வேறு அவரை குழப்பியது .அவர் இந்த விழாவிற்கு அவர்கள் குடும்ப சார்பாக தம்பி சென்று விடுகிறானே என தனது வேலையில் கவனமாக இருந்தார் .இப்போதோ …சௌந்தரியே மறைமுகமாக அவரது குடும்பம்தான் வர வேண்டும் என சொல்லிய பிறகு …என்ன செய்வதென குழம்பினார் .

” சொந்தம் மட்டுமில்லாமல் நம் தொழிலும் தொடர்புடையவர்கள் புவனா .நாளை நான் மீண்டும் நம் தொழிலை தொடங்கும் போது இவர்கள் உதவியெல்லாம் வேண்டியதிருக்கும் . அதனால் ஒரேடியாக இந்த விழாவை தள்ள முடியாது .என்னால் எனது நைட் டியூட்டிக்கு லீவ் போட முடியாது .அதனால் நீயும் , கமலியும் போய் விட்டு வந்து விடுங்களேன் …” மனைவியை தாஜா செய்து கிளப்ப முயன்றார. .

கொஞ்ச நாட்களாகவே உறவுகள் , நட்புகள் என யார் வீட்டு விசேசத்திலும் கலந்து கொள்ளாமல் இருந்த புவனா மிகவும் தயங்கினாள் . அம்மாவும் , மகளும் எந்த டிரஸ்ஸை போட்டுக் கொண்டு எப்படி கிளம்புகிறார்களென பார்க்கிறேன் …உள்ளுக்குள் கறுவியபடி அவர்களை கண்காணித்தபடி இருந்தாள் கனகம் .ஏனென்றால் இந்த பங்சனுக்கென்றே அவள் குடும்பம்  புது துணிமணிகள் , அலங்காரம் என ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே மிகவும் மெனக்கெட்டுக் கொண்டிருந்த்து .இருந்த்தையெல்லாம் தொலைத்து விட்டு மச்சினர் குடும்பம் எப்படி இந்த பங்சனை அட்டென்ட் பண்ணுகிறார்களென பார்க்க வேண்டுமென  கழுகாய் பார்த்துக் கொண்டிருந்தாள் .

ஆனால் அவளது எதிர்பார்ப்பு நிறைவேறாமல் புவனாவும் , கமலினியும் மிக எளிதாக , அழகாக பங்சனுக்கு கிளம்பினர். அவர்களின் திருத்தமான தோற்றத்தில் கனகத்திற்குத்தான் வயிறு எரிந்த்து .




What’s your Reaction?
+1
23
+1
16
+1
1
+1
5
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!