Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 20

20

கடைக்குள் நுழைந்து யூனிபார்ம் சேலையை மாற்றும் முன்பே விஸ்வேஸ்வரனிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது .இவன் எப்போது வந்தான் …? எனக்கு முன்பே வந்துவிட்டானா என்ன ? ஆச்சரியப்பட்டபடி மாடியேறினாள் .

முதல் நாள் அவர்கள் இருவரும் நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் இனி தனக்கு இங்கே வேலையில்லை என கிளம்பி விட்டாள்  கமலினி.பஸ்ஸில் ஏறி அமர்ந்த உடனேயே விஸ்வேஸ்வரனிடமிருந்து போன் .

” கமலினி எங்கே இருக்கிறாய் ? “

” பஸ்ஸில் சார் .வீட்டிற்கு போய் கொண்டிருக்கிறேன. “




ஒரு நிமிடம் மௌனமாக இருந்தவன் பிறகு ” சரி ” என போனை கட் செய்துவிட்டான் .இதோ இப்போது காலையில் வந்த்தும் அழைத்திருக்கிறான் .

” என்ன கமலினி இப்படித்தான் சொல்லாமல் அங்கிருந்து ஓடி வருவாயா ? “

” உங்களுக்கு போனில் டெக்ஸ்ட் பண்ணி விட்டுத்தானே வந்தேன் சார் .”

” ப்ச் .அதை நான் லேட்டாகத்தான் பார்த்தேன் . நீ பாட்டுக்கு தனியாக எங்கேயும் பாதை தெரியாமல் போய் விடுவாயோ எனப் பயந்து உன்னை ஹோட்டல் முழுவதும் தேடினேன் தெரியுமா ? ” லேசான படபடப்போடு பேசியவனை விநோதமாக பார்த்தாள் .

” திருச்சி நான் பிறந்து வளர்ந்த ஊர் சார் . இதன் மூலை முடுக்கெல்லாம் எனக்கு தெரியும் . இதில் எங்கே போய் வழி தவறப் போகிறேன் நான் ? “

” ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருக்கலாமே ? “

” உங்கள் ஏகாந்த்த்தை கலைக்க விரும்பவில்லை சார் .அதனால்தான் மெசேஜ் பண்ணி விட்டு கிளம்பிவிட்டேன. அப்புறம் சொல்லுங்க சார் .உங்க லவ்வை சொல்லி விட்டீர்களா ? ” ஆர்வமாக கேட்டாள்.

விஸ்வேஸ்வரன் உதடு பிதுக்கினான் .” ம்ஹூம் .கொஞ்ச நேரம் பேசிவிட்டு இருவரும் கிளம்பிவிட்டோம் “

” ஏன் சார் ? “

” அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை “

” இதெல்லாம் தானாகவா அமையும் சார்…? நீங்களாகத்தான் அமைத்துக் கொள்ள வேண்டும் . என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள. ? “

” நிகிதா ஏதோ டென்னிஸ் பற்றி பேசிக் கொண்டிருந்தாள் .நான் ஜெம்ஸ் பற்றி பேசினேன். அவளுக்கு சில விளக்கங்கள் கொடுத்தேன் .பேசிக் கொண்டிருக்கும் போதே….நீ வரவில்லையே என உன்னை தேடி ஹோட்டலுக்குள் வந்தேன் .அப்போது அவள் ஏதோ ப்ரெண்டோடு ஙெளியே போகப் போவதாக சொல்லி விட்டு போய்விட்டாள் .நானும் வந்துவிட்டேன் …”

” என்ன சார் இப்படி சொதப்பியிருக்கிறீர்கள. ? “

” ஏன் …இருவருக்கும் வேலை என்றால் போய்த்தானே ஆக வேண்டும் ? “

” அது சரி என்னென்ன விளக்கங்கள் பேசினீர்களோ ? “

” அவள் ஜெம்மாலஜி படிக்கிறாளென்ற பெயர்தான் கமலினி. ஜெம்ஸ் பற்றிய அடிப்படை விபரங்கள் கூட அவளுக்கு தெரியவில்லை .அதைத்தான் அவளுக்கு விளக்கிக் கொண்டிருந்தேன்…”

” சுத்தம் .நிகிதா ஆளை விடுடா சாமி என்று ஓடியிருக்கிறாள. “

” ஏன் …? நான் அவளுக்கு புரியும்படியாக தெளிவாகத்தானே விளக்கிக் கொண்டிருந்தேன் “

” கடவுளே …” கமலினி தலையில் கை வைத்தபடி உட்கார்ந்து விட்டாள் .

” அவளுக்கு தேவை உங்கள் விளக்கங்கள் இல்லை சார் .அந்த விளக்கங்களை கொடுக்க அவளது புரொபசர் போதும் “

” பிறகு நான் என்ன பேசுவது ? “

கமலினி விஸ்வேஸ்வரனின் முகத்தை ஏறிட அங்கே குழப்பமும் , அறியாமையுமே தெரிந்த்து. இந்த இன்டெர்நெட் காலத்தில் இப்படி ஒரு ஆண்மகனா ?

” நம்பு கமலினி.எனக்கு இந்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை . நான் படித்தது ஆண்கள் கல்லூரியில் .எங்கள் வீட்டில் அப்பா , அண்ணன் , நான் என அம்மா தவிர்த்து எல்லோரும் ஆண்களே. பெண்கள் உலகம் எப்படி பட்டது ? அது எதை விரும்பும் …? எதை வெறுக்கும் …? என எனக்கு ஒன்றும் தெரியாது .”

” உங்களுக்கு  நண்பர்கள் இருந்திருப்பார்களே ..அவர்கள் இதை பற்றி ஒன்றும் பேசியதில்லையா ? “




” எதைப் பற்றி ? “

கமலினிக்கு அவன் தலையில் கொட்டும் வேகம் வந்த்து .கேட்கிறான் பார் கேள்வி …மூஞ்சியை பார் பதினாறு வயதினிலே சப்பாணி மாதிரி வைத்துக் கொண்டு …ஆனால் அந்த சப்பாணி கூட மயிலை அழகாக லவ் பண்ணினான் .இவனுக்கு லவ்வென்றால் என்னவென்று தெரியாதாம் .

” கேட்கிற கேள்வியை சரியாக கேள் கமலினி. ப்ரெண்ட்ஸோடு காதலை பற்றியா …பெண்களை பற்றியா ? காதலை பற்றியென்றால் பேசியதில்லை .அப்படி பேசிய நண்பர்களின்  ஒன்றிரண்டு காதலும் கல்லூரி முடியும் முன்பே முடிந்து மறைந்து போனது .அதனால் அவற்றை  காதல் கணக்கில்  சேர்க்க முடியாது .பெண்களை பற்றியென்றால் கல்லூரி காலத்தில் நிறைய பேசியிருக்கிறோம் “

” ஹாங் பேசியிருக்கிறீர்கள்தானே …பெண்களை ஓரளவு தெரியும்ம்தானே …? “

”  தெரியுமென்றால் பெண்களை நண்பர்களோடு சேர்ந்து ரசித்திருக்கிறேன்.  சில நேரங்களில் கலாட்டா கூட செய்திருக்கிறேன் .ஆனால் அதெல்லாம் ஜாலிக்காக செய்த்து. அந்த வகை அனுபவங்களை காதல் , கல்யாணமெனும் வாழ்க்கை முழுவதான உறவுக்குள் எப்படி பொருத்த முடியும் கமலினி ? காதலும் , கல்யாணமும் ஒரு ஆணின் இரண்டு கண்களில்லையா ? என்னைப் பொறுத்த வரை காதலும்  கல்யாணமும் ஒருவர் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும்தான் வர வேண்டும். அவை அவன் வாழ்நாள் முழுவதும் உயிரிழையாக பிணைந்து வர வேண்டும் .கொடிமலர் நெக்லஸ் செய்வோமே …அப்போது ஒரே ஒரு தங்க இழைதான் அந்த கொடி முழுவதும் இருக்கும் .ஆனால் அது பின்னி பிணைந்து சுற்றி வருவதை பார்த்தால் நிறைய கொடிகள் இருப்பதை போல் தெரியும் . ஓரிழை பவுனாய் ஆரம்பிக்கும் காதல்தான் மனைவி ,குழந்தைகள் எனும் நிறைய கொடிகளை , கொடி மலர்களை உருவாக்க வேண்டும் .அந்த பொன் இழையாக குடும்பம் தாங்குபவனாக ஆண் இருக்க வேண்டும் .அவனது காதல் ஆபரணத்திற்கு முந்தைய   காஞ்சனை போல்  தூய்மையானதாக இருக்க வேண்டும் .அந்த காதலைத்தான் நான் தேடுகிறேன. அதற்காகத்தான் இவ்வளவு மெனக்கெடுகிறேன் “

விஸ்வேஸ்வரனின் விளக்கத்தில் கமலினி பிரமித்து அமர்ந்து விட்டாள் .இம்மியும் அவன் முகம் விட்டு விலகவில்லை அவள் விழிகள் .எப்பேர்பட்ட ஆண் இவன் …சற்று முன் கிண்டலாக அவள் நினைத்தாளே இந்தக் காலத்தில் இப்படி ஒரு ஆணா என்று .இவனது இந்த  சிந்தனைகளும்  இந்த இன்டெர்நெட் யுகத்திற்கு பொருந்தவில்லையே . ஆனால் அவளுடல் முழுவதும் குருதியோடு சேர்ந்து ஓடி தேகம் சிலிர்க்க வைக்கிறதே .   தீரமும் , செறிவுமாக என் காதல் உயர்ந்த்தென்று நிமிர்ந்து நிறகும் இவனல்லவோ உண்மையான ஆண்மகன் . இவனை மணக்க போகும் பெண் எவ்வளவு பெரிய  அதிர்ஷடசாலி ?

” யு ஆர் க்ரேட் சார் “

” இதில் க்ரேட் எங்கிருந்து வருகிறது கமலினி ? ஏன் பெண்களுக்கு மட்டும்தான் இது போல் ஒரே காதல் … ஒரே கல்யாணம் போன்ற சட்டதிட்டங்கள் தரப்பட வேண்டுமா ? ஆண்களென்றால் சேறு கண்ட இடம் மிதித்து தண்ணீர் கண்ட இடம் கழுவி என அலைய வேண்டுமா ? எங்களுக்கும் கட்டுப்பாடு இருக்கும்மா . நாங்களும் கற்பை போற்றுவோம் . காதல் கனிய மனைவியோடு வாழுவோம் .”

கமலினி எழுந்தாள் . விஸ்வேஸ்வரனின் கையை இழுத்து பற்றிக் குலுக்கினாள் .” உங்கள் காதல் கிடைக்க பெறும் பெண் அதிர்ஷ்டசாலி விஸ்வா .இது போலொரு காதல் உங்களுக்கு அமைய என் வாழ்த்துக்கள் “

” கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டாயோ …சார் மோர் எல்லாம் போய் அழகாக பெயர் சொல்கிறாயே ? “

” அச்சோ ..ஒரே ஒரு ” டா ” சொல்லனும்னு நினைச்சேனே .வெறும் பெயர் மட்டுமா சொன்னேன் ? ” கவலை போல் அவள் கன்னத்தில் கை வைக்க தலையை பின்னால் தள்ளி பற்களனைத்தும் தெரிய சிரித்தான் அவன் .

” நாம் தனிமையில் இருக்கும் போதாவது இப்படி பெயர் சொல்லலாமே கமலினி ? எனக்கென்னவோ முதல் நாளிலிருந்தே உன்னை பணியாளர்கள் வரிசையில் சேர்க்க முடியவில்லை . என் மன உணர்வுகளை எளிதாக பகிர்ந்து கொள்ளக்கூடிய தோழமையாகத்தான் தோன்றுறாய்…”

” ஹப்பா …ஒரே கழுத்து வலி .நீங்கள் தூக்கி வைத்த க்ரீடம் அவ்வளவு பாரம் ….” கழுத்தை தடவி  தலையை உதற , அவள் தலையில் விளையாட்டாக தட்டி சிரித்தான் அவன் .

” எல்லாம் சரி விஸ்வா .ஆனால் இந்த அளவு உயர்த்தி  வைத்திருக்கும் உங்கள் காதலை வியாபாரத்தோடு இணைக்கிறீர்களே .அதுதான் எனக்கு உறுத்துகிறது “

” இதிலென்ன இருக்கிறது கமலினி .நான் எனது இந்த தொழிலை மிக நேசிக்கிறேன் .இந்த தொழிலோடு என்னுடன் இணையும் ஒரு இணையை காதலோடு எதிர்பார்க்கிறேன் .அந்தக் காதலை எப்படி பெறுவதென தேடுகிறேன் .அவ்வளவுதான் …”

” அப்படி தொழிலுக்காக பார்ப்பதில் நீங்கள் எதிர்பார்க்கும் உணர்வுக் காதல் கிடைக்குமா ?எனக்கு சொல்ல தெரியவில்லை விஸ்வா .நான்றிந்த வரை கேள்விப்பட்ட வரை எதிர்பார்ப்புகளற்று வருவதுதான் உண்மைக் காதல் . “

” ஹ்ஹா …இது சினிமா வசனம் ” அவனது அலட்சிய தோள் குலுக்கல் கமலினியின் குழப்பத்தை அதிகரித்தது .காதலில் இந்த அலட்சியம் வேண்டாமென்பது அவள் கருத்து . இவனது காதல் கிடைக்க வேண்டுமே என்ற தவிப்பு.




” சினிமாக்களும் உணர்வுக் காதல்களை சொல்வதுண்டு விஸ்வா “

” யெஸ் .அதனால்தான்  இப்போதெல்லாம் கொஞ்சம் சினிமா படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் . நான் காதல் சொல்ல காதலிக்க அதில் ஏதாவது வழி கிடைக்குமே ” 

” இப்படி படம் பார்த்துக் கொண்டும் , என்னுடன் பேசிக் கொண்டும் நேரத்தை கடத்திக் கொண்டிருந்தீர்களானால் உங்கள் காதல் ப்ரெண்ட்சோடு போய் கொண்டே இருக்கும் . முடிந்த வரை நிகிதாவோடு டைம் ஸ்பென்ட் பண்ணுங்கள் .ஒருவரொடு ஒருவர் அதிகம் செலவழிக்கும் நேரம்தான் காதலை மிகுதியாக்கும் “

” யா …பாய்ண்ட் ” விஸ்வேஸ்வரன் தன் போனை எடுத்து நிகிதாவை அழைத்தான் .சந்திக்க இடம் குறித்தான் .

” டேபிள் டென்னிஸ் நிகிதாவோட பேவரைட் கேம் விஸ்வா .அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு போங்கள் .நிகிதா அதைப் பற்றி பேசினால் காது கொடுத்து கவனியுங்கள் .” கமலினியின் ஆலோசனைக்கு ஒப்பி தலையசைத்தபடி கிளம்பிப் போனான் விஸ்வேஸ்வரன் .

What’s your Reaction?
+1
24
+1
21
+1
2
+1
2
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Kurinji
Kurinji
4 years ago

Vidwakke kathal yaarmelnnu teriyalaiyaa.

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!